Pages

Thursday, March 31, 2016

மின் வாரிய தேர்வு திடீர் தள்ளிவைப்பு


தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வை, தமிழ்நாடு மின் வாரியம் திடீரென தள்ளிவைத்துள்ளது.தமிழ்நாடு மின் வாரியம், 525 தொழில்நுட்ப உதவியாளர்; 50 உதவி வரைவாளர்; 900 கள உதவியாளர் என, 1,475 காலி பணியிடங்களை நிரப்ப, சென்னை,அண்ணா பல்கலை மூலம், ஏப்., 3ல், எழுத்து தேர்வு நடத்த இருந்தது.

துறை தேர்வுகள் கடைசி தேதி நீடிப்பு.


அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள், உயர் பதவிகளுக்கான தேர்வு டிசம்பர் மற்றும் மே மாதம் நடைபெறும். மே மாதம் நடைபெற இருக்கும் துறைக்கு விண்ணப்பிக்க தேதி மார்ச் 31 ல் இருந்து ஏப்ரல் 11 எனநீடிப்பு செய்யப்பட்டுள்ளது'மே' மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்கள் இணையதளம் , (www.tnpsc.gov.in ) மூலமாக மட்டும் விண்ணபிக்க முடியும்.

நிலக்கரி நிறுவனத்தில் 400 பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு.


மத்திய சுரங்கத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கிழக்கு நிலக்கரி சுரங்கங்கள் நிறுவனத்தில்

அகில இந்திய தேசிய திறனறிவு போட்டியில் தேர்ச்சி பெற்ற காரைக்கால் அரசுப் பள்ளி மாணவர்கள் !!!


அகில இந்திய தேசிய திறனறிவு போட்டியில் தேர்ச்சி பெற்ற காரைக்கால் அரசுப் பள்ளி மாணவர்களை கலெக்டர் கரிகாலன் பாராட்டினார்.

             அகில இந்திய தேசிய திறனறிவு தேர்வில், காரைக்கால் வடமறைக்காடு அரசு தொடக்கப்பள்ளியை சேர்ந்த 16 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இத்தேர்வுகள் நான்கு பாடப்பிரிவுகளில் நடந்தது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தாமதமாகும்?


பள்ளி ஆசிரியர்களுக்கு, சட்டசபை தேர்தல் பயிற்சி வகுப்பு துவங்க உள்ள நிலையிலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கவில்லை. எனவே, தேர்வு முடிவுகள் வெளியாவது தாமதமாகலாம் என, தெரிகிறது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளையுடன் பொதுத் தேர்வுகள் முடிகின்றன. மொழி பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது; முக்கிய பாடங்களுக்கு, ஏப்., 6 முதல் விடைத்தாள் திருத்தும் பணி துவங்குகிறது.

நாளை வங்கி வேலைநேரம் நீட்டிப்பு


வரி செலுத்துவோரின் வசதி கருதி நாளை வங்கிகளின் வேலை நேரம் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வரி வசூல் சேவை வழங்கும் வங்கிக் கிளைகள் அனைத்தும் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என ரிசர்வ் வங்கி தனது சுற்றறிக்கையில் கூறியுள்ளது.

Wednesday, March 30, 2016

Department test-க்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 11.04.2016 வரை நீ ட் டி க் கப் பட்டுள்ளது.


Department  test-க்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 11.04.2016 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது

விண்ணப்பிக்க தவறியவா்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்

20 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு: ஏப்., 1 முதல் அமல்


தமிழகத்தில் உள்ள, 20 சுங்கச்சாவடிகளில், ஏப்., 1ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில், 43 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவை, பல மாநிலங்களை தமிழகத்துடன் இணைக்கின்றன. இந்த சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களும் பராமரித்து வருகின்றன. சுங்கக் கட்டணம் வசூலித்து, சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள, தனியார் நிறுவனங்களுடன், மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

புதிய பென்ஷன் திட்டத்தில்முன்பணம் பெறுவதில் சிக்கல்:4.23 லட்சம் ஊழியர்கள் அதிர்ச்சி


தமிழக அரசு பணம் செலுத்தாததால் புதிய பென்ஷன் திட்டத்தில் 25 சதவீத முன் பணம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 4.23 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மேற்குவங்கம், திரிபுரா தவிர மற்ற மாநில அரசு ஊழியர்கள்,மத்திய அரசு ஊழியர்களுக்கு 2003 ஏப்., 1 முதல் புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் தமிழகத்தில் 4,23,441 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். புதிய பென்ஷன் திட்டத்தில் முன்பணம் பெற ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் மார்ச் 21ல் அனுமதி அளித்துள்ளது. பணியில் சேர்ந்து 10 ஆண்டு முடிந்திருந்தால், அவர்களின் பங்குதொகையில் 25 சதவீதம் முன்பணம் பெற்றுக் கொள்ளலாம்.

கல்வி கட்டண கமிட்டி மூடப்படும் அபாயம்!!!-


தனியார் பள்ளி கல்வி கட்டண நிர்ணய கமிட்டியில், மூன்று மாதமாக, நீதிபதி இல்லை. எனவே, புகார் அளிக்க முடியாமல் பெற்றோர் தவிக்கின்றனர். தற்போது பணியில் உள்ள சட்ட அதிகாரியும், நாளை ஓய்வு பெற உள்ளார். எனவே, கல்வி கட்டண கமிட்டி மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த, 2009ல், கட்டாய கல்வி உரிமை சட்டம் அமலுக்கு வந்ததும், தமிழக அரசு சார்பில், சுயநிதி பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில், இந்த கமிட்டி செயல்பட்டது. பள்ளிகளின் உள்கட்டமைப்பு அடிப்பயில், கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. தனியார் பள்ளிகள் தரப்பில் இருந்து பல வகையான நெருக்கடிகள் வந்ததால், நீதிபதி கோவிந்தராஜன் பதவியில் இருந்து விலகினார்.

CPS கணக்கில் தங்கள் NOMINEE பெயர் பதிவு செய்யப்பட்டு உள்ளதா என்பதை எவ்வாறு அறியலாம்


CPS கணக்கில் தங்கள் NOMINEE பெயர் பதிவு செய்யப்பட்டு உள்ளதா என்பதை எவ்வாறு அறியலாம்

CLICK HERE TO KNOW YOUR CPS NOMINEE CONFORMATION LETTER, CPS STATEMENT & MISSING CREDITS

அருகமைப் பள்ளி முறை ஏன் வேண்டும்?


இன்று நடைமுறையில் உள்ள கல்வி உரிமைச் சட்டம் அருகமைப் பள்ளியில் மட்டுமே ஒவ்வொரு வட்டாரத்தில் உள்ள அனைத்துப் பிரிவினர் குழந்தைகளும் சேர்க்கப்படவேண்டும் என்பதைப் பற்றிய தெளிவான விதி எதையும் வலியுறுத்தவில்லை. இதன் விளைவாக இன்றைக்கு பெரும்பாலான தனியார் பள்ளிகள் 50 கி.மீ தூரத்தில் இருந்து கூட குழந்தைகளை பள்ளி வாகனங்களில் அன்றாடம் அழைத்து வருகின்றனர். பள்ளி தொடங்கும் நேரத்திற்கு முன்பாக, மிக அதிக தூரத்தில் இருந்து, அருகருகே உள்ள குடியிருப்புப் பகுதி நிறுத்தங்களில் கணக்கில்லாமல் நின்று, துரிதகதியாக குழந்தைகளை ஏற்றி, இறக்கி பள்ளி வாகனங்களை இயக்கவேண்டி இருப்பதால் வேகமாக, அவசரமாக ஓட்டுநர்கள் பள்ளி வாகனங்களை இயக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். இதுவே பள்ளிக் குழந்தைகள் அடிக்கடி பள்ளி வாகன விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதற்கும் காயமடைவதற்கும் முக்கியக் காரணமாகிறது.

வீடு தேடி வரும் வாக்காளர் அட்டை: இன்று முதல் அமல்


வண்ண வாக்காளர் அடையாள அட்டை, வீடு தேடி வரும் திட்டம், இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக தேர்தல் கமிஷன், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, தேர்தல் கமிஷன், பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தொலைந்து போன, வாக்காளர் புகைப்பட அட்டைக்கு பதிலாக, புதிய மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறவும், அண்மையில் எடுக்கப்பட்ட, வண்ண புகைப்படத்தை, வாக்காளர் அடையாள அட்டையில் புதுப்பித்துக் கொள்ளவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இன்று முதல், வாக்காளர் அடையாள அட்டையை, வீட்டிலேயே பெற்றுக் கொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.

பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம்: ஏப்ரல் 15 முதல் பதிவுசெய்யலாம்


இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. எனவே, விண்ணப்ப படிவங்கள் எங்கேயும் விற்பனை செய்யப்படாது. ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்ரல் 15 முதல் பதிவு செய்யலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

Tuesday, March 29, 2016

Tamilnadu Open University Seminar Class Schedule for Bachelor Degree(UG) & Master Degree (PG) Programmes


Tamilnadu Open University

Seminar Class Schedule for Bachelor Degree(UG) & Master Degree  (PG) Programmes

Click Here

ஏப்ரல் மாத உத்தேச கால அட்டவணை APRIL DIARY- Tentative,



1-fri -  April fool day,  

2- sat-Grievance day,

8- fri-Telugu new year holiday,

14- thurs- Tamil new year,
Dr.Ambedkar birthday holiday,

19- tue- Mahaaveer Jayanthi - holiday,

21- thurs- R.L- Chitra Pournami,

III TERM EXAM TIME TABLE     -

22- fri-  Tamil,  World Earth Day,

25- mon - English,

26- tue- Maths,

27- wed- Science,

28- thurs- Social Science,

29- fri- Physical Education,

30- Last working day for this academic year.

இன்ஜி., விண்ணப்பம் எப்போது?ஒருங்கிணைப்பு குழு இன்று ஆலோசனை.


இன்ஜி., படிப்புக்கான விண்ணப்ப வினியோகம் எப்போது என்பது குறித்து, இன்று நடக்கும் இன்ஜி., மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், ஆலோசனை நடத்தப்பட உள்ளது.அண்ணா பல்கலை இன்ஜி., மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம், உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா தலைமையில், தலைமை செயலகத்தில், இன்று காலை நடக்கிறது.

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு தாமதம் !


தேர்தலையொட்டி, பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகளும் தாமதமாக நடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது; இம்மாத இறுதியில் வர வேண்டிய சுற்றறிக்கை இதுவரை வராததால் ஆசிரியர் பயிற்றுனர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஒவ்வொரு கல்வியாண்டிலும், ஏப்., மற்றும் மே மாதத்தில் பள்ளி
செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு நடக்கிறது. வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள், கல்வியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் கொண்ட குழு அமைத்து கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது. இவ்வாறு கணக்கெடுக்கப்படும் குழந்தைகள், ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.

பள்ளித் தேர்வுகளை இனி பிப்ரவரியிலேயே நடத்தலாமே?


மார்ச் தொடக்கமே வெளுத்து வாங்கும் வெயில் காலமாக மாறிவிட்டதால், அடுத்த கல்வியாண்டிலிருந்து பள்ளித் தேர்வுகளை ஒரு மாதத்துக்கு முன்பாக பிப்ரவரி மாதத்திலேயே நடத்தினால் என்ன என்ற கேள்வி கல்வியாளர்களால் முன்வைக்கப்படுகிறது.
பருவநிலை மாற்றம் என்றழைக்கப்படும் மாறுபட்ட காலநிலைச் சூழலில் மழைக் காலம் சுருங்கிப் போய், பரவலாக- சராசரியாக ஆண்டுக்கு 50 நாள்கள்தான் மழை பெய்கிறது. ஆனால், பல நாள்கள்
பெய்ய வேண்டிய மழையின் அளவு, ஓரிரு நாள்களில் கொட்டித் தீர்க்கத் தொடங்கிவிட்டது.

மயில்சாமி அண்ணாதுரை உட்பட 56 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்தார் பிரணாப் முகர்ஜி


மறைந்த தொழிலதிபர் திருபாய் அம்பானி, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உட்பட 56 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்தார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற வண்ணமயமான விழாவில், திருபாய் அம்பானியின் மனைவி கோகிலாபென் அம்பானி, தனது கணவரின் சார்பில் இவ்விருதை பெற்றுக் கொண்டார்.

ஏப். 1ம் தேதி முதல் அமல் 18 சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு


மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1992ம் ஆண்டு போடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதம், கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.   தமிழகத்தில் 44 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில், 29 சுங்கச் சாவடிகளில் தனியாரும், 12 சுங்கச் சாவடிகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் கட்டணம் வசூலிக்கின்றன. இந்த சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து ஆண்டிற்கு ஒரு முறை 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

100,101,108 இனி கிடையாது : அவசர உதவிக்கு 112 விரைவில் அமலாகிறது


நாடு முழுவதும் அனைத்து அவசர அழைப்புகளுக்கும் எண் 112ஐ அறிமுகம் செய்யலாம் என தொலை தொடர்பு  ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரையை தொலைத்தொடர்பு கமிஷன் ஏற்றுள்ளது. இது. ஒருசில மாதங்களில் நடைமுறைக்கு வர உள்ளது. இந்தியாவில் தற்போது காவல்துறை உதவிக்கு 100, மருத்துவ உதவிக்கு 108, மேலும் 101, 102 என  பல்வேறு எண்கள் அவசர கால அழைப்புகளுக்காக செயல்பட்டு வருகிறது. ஆனால் அமெரிக்காவில் எந்த ஒரு அவசர அழைப்பாக இருந்தாலும் 911,  இங்கிலாந்தில் 999 போன்ற எண்களை அவசர உதவிக்காக செயல்படுத்தி வருகின்றன.

Saturday, March 26, 2016

University of Madras Institute of Distance Education IDE MAY 2016 - UG/PG Examinations Online Registration


University of Madras

Institute of Distance Education

பாட திட்டம் தெரியாததால் பி.எட்., கல்லூரிகள் தவிப்பு


தமிழக பி.எட்., கல்லுாரிகளில் வகுப்புகள் துவங்கி, ஆறு மாதமாகியும் பாடத்திட்டம் தெரியாமல், மாணவர்கள், ஆசிரியர்கள் தவிக்கின்றனர். உயர்கல்வித் துறையின் அலட்சியத்தால், பாடத்திட்டம் முழுமை செய்யப்படவில்லை என, மாணவர்கள் குற்றம் சாட்டிஉள்ளனர்.ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கட்டுப்பாட்டின் கீழ், மாநிலம்முழுவதும், 690 பி.எட்., கல்லுாரிகள் உள்ளன.

இவற்றில், இந்த ஆண்டு முதல், பி.எட்., படிப்பு, ஓராண்டில் இருந்து,இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது.

இன்ஜி., கல்லூரிகளுக்கு முன்கூட்டியே தேர்வு.


சட்டசபை தேர்தலால், அனைத்து பல்கலைகளிலும் முன்கூட்டியே தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. மே மாதம் முதல் வாரத்திற்குள் தேர்வுகளை முடிக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.தமிழக சட்டசபை தேர்தல் மே, 16ல் நடக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

'மே முதல் வாரத்திற்குள் கல்லுாரி மற்றும் பல்கலை தேர்வுகளை முடித்து, கல்லுாரி கட்டடங்களை தேர்தல் பணிக்கு ஒப்படைக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியுள்ளதால், அதன்படி செயல்பட தமிழக அரசும்உத்தரவிட்டுள்ளது.

ஏப்.1 முதல் மூத்த குடிமக்களுக்கான லோயர் பெர்த் எண்ணிக்கை உயர்வு


ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு ஒதுக்கப்படும் லோயர் பெர்த்களின் எண்ணிக்கை, ஏப்ரல் 1 முதல் அதிகரிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மூத்த குடிமக்களுக்கு என்றே ஒதுக்கப்படும் சீட்களின் எண்ணிக்கை 50 - 60ல் இருந்து, தற்போது 80 - 90 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இனி மூத்த குடிமக்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு ஒவ்வொரு ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டியிலும், ஆறு லோயர் பெர்த்கள் ஒதுக்கப்படும். தற்போது நான்கு பெர்த்கள் ஒதுக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

01-06-2006 காலமுறை ஊதியம் பெற்ற ஆசிரியர்களே உங்கள் கவனத்திற்கு...


01-06-2016 அன்று தேர்வுநிலை பெற உள்ளதால் விண்ணப்பங்கள் CEO. Aeeo அலுவலகத்தில் அளிக்க தயார்செய்வீர்!

1. உங்கள் வேண்டுதல் கடிதம்.மற்றும் தலைமை ஆசிரியர் செயல்முறைகள் கடிதம்(Covering Letter)
2.தேர்வுநிலைக்குரிய விண்ணப்ப படிவம்.
3.பணி நியமன ஆணை.
4.பணிவரன்முறை ஆணை.
5.தகுதிகான்பருவம்   ஆணை.

தமிழ்நாடு திருத்திய ஊதிய விகிதம் 2009 - இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்கள் /தொடக்கப்பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெருவோருக்கு பதவிஉயர்வில் ஊதிய நிர்ணயம் செய்தல் -தெளிவுரைகள்


பட்டதாரிகளை அழைக்கிறது இந்திய கடற்படை!


திருமணம் ஆகாத பட்டதாரிகளுக்கு, கேரளாவில் உள்ள இந்திய நேவல் அகாடமியில் பயிற்சி அளித்து, ‘லெப்டினன்ட்’ உட்பட பல்வேறு பணி வாய்ப்புகளை வழங்குகிறது இந்திய கடற்படை!

பணிப்பிரிவுகள்: லாஜிஸ்டிக்ஸ் பிரிவு (ஆண்கள் மட்டும்) மற்றும் எஜூகேஷன் பிரிவு (இருபாலரும்).

வயது வரம்பு: எஜூகேஷன் பிரிவு பணியிடங்களுக்கு  ஜனவரி 2, 1992ல் இருந்து ஜனவரி 1, 1996க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக வேண்டும். லாஜிஸ்டிக்ஸ் பிரிவு பணியிடங்களுக்கு, ஜனவரி 2, 1992ல் இருந்து ஜூலை 2, 1998க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக வேண்டும்.

Friday, March 25, 2016

ரயில் டிக்கெட் முன்பதிவில் 50% கூடுதல் ஒதுக்கீடு:


ரயில்களில் மூத்த குடிமக்களுக்களுக்கான முன்பதிவு இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று,அவர்களின் முன்பதிவு இடஒதுக்கீட்டை 50 சதவீதமாகஉயர்த்தி ரயில்வே பட்ஜெட்டில் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்தார்.

வேளாண் செயல்முறைகள் தேர்வு எளிது கால்நடை மருத்துவ 'கட் ஆப்' உயரும்


வேளாண் செயல்முறைகள் தேர்வு எளிதாக இருந்ததால், கால்நடை மருத்துவப் படிப்புக்கான, 'கட் ஆப்' மதிப்பெண் உயர வாய்ப்புள்ளது.பிளஸ் 2 தேர்வில், நேற்று, 'இண்டஸ்ட்ரியல் இன்ஜி.,'வேளாண் செயல்முறைகள் உட்பட, 12 தொழிற்கல்வி பாடங்களுக்கு தேர்வுகள் நடந்தன.

வேளாண் செயல்முறைகள் தேர்வில் மிகவும் எளிமையான வினாக்களே இடம் பெற்றன.கடந்த ஆண்டில், சில வினாக்கள் மாணவர்களை குழப்பும் விதமாக இருந்தன. ஆனால், இந்த முறை எந்த பிரச்னையுமின்றி, மிக எளிமையான வினாக்கள் இடம் பெற்றதால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தனியார் பள்ளிகளில் மர்மமாகும் 'அட்மிஷன்' : விண்ணப்பம் அளித்த பெற்றோர் ஏமாற்றம்


விதிகளை மீறி, முன்கூட்டியே தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது. விண்ணப்பம் கொடுத்தவர்கள், பள்ளிக்குள் நுழைய முடியாமல் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழகத்தில், அரசு பள்ளிகளை விட, சில குறிப்பிட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் தான், பிள்ளைகளை சேர்க்க, பெற்றோர் விரும்புகின்றனர்.இந்த பள்ளிகளில், கல்வி கட்டணம், சிறப்பு கட்டணம் மற்றும் நன்கொடை என, பல ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்தாலும், பெற்றோர் முட்டி மோதுகின்றனர். ஆனால், இந்த பள்ளிகளில், 'அட்மிஷன்' நடைமுறை புரியாத புதிராகவே உள்ளது.

காசநோயால் அதிகம் பாதிக்கப்படும் நாடு இந்தியா: ஆண்டுக்கு 2.70 லட்சம் பேர் இறப்பதாக அதிர்ச்சி தகவல்


இன்று (மார்ச் 24-ம் தேதி) உலக காசநோய் தினம்

இன்று காசநோய் தினம் அனுசரிக் கப்படுகிறது. உலகிலேயே காச நோய் பாதிப்பு அதிகம் கொண்ட இந்தியாவில் ஆண்டுதோறும் இந்நோய் பாதிக்கப்பட்ட 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் இறப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்து என்ன படிக்கலாம். +2 மாணவர்களுக்கான அற்புதமான அட்டவணை.


6 முதல் 9 வகுப்புக்களுக்கான தேர்வு கால அட்டவணை


Thursday, March 24, 2016

இந்திய மாநிலங்களின் பெயர்காரணம்


1.ஆந்திர பிரதேசம் - தெற்கு பிராந்தியம்.
சமஸ்கிருதத்தில் "ஆந்த்ரா" என்றால் தெற்கு என்று பொருள்.
2. அருணாச்சல பிரதேசம் - முதல்ஒளி மலைகள் பிராந்தியம்.
சமஸ்கிருதத்தில் "அருணா" என்றால் "முதல்ஒளி" அல்லது "மூலஒளி" என்று பொருள். இந்தியாவல் முதல் சூர்ய உதயம் இங்கு நடைபெருவதால் இப்பெயர் ஏற்பட்டது.

தன்னிச்சையாக செயல்பட்ட ADPC மீது ஒழுங்கு நடவடிக்கை!


தொடக்கக்கல்வி செயல்முறைகள்- மதிய உணவுத்திட்டம்- அரசு/அரசு உதவி பெறும் /ஊராட்சி ஒன்றிய -தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மதிய உணவுத்திட்டத்தை கண்காணிக்கும் பொருட்டு,மாணவர்களின் தகவல்களை சேகரிப்பது சார்பாக ஒரு தலைமையாசிரியர்(HM) மற்றும் ஒரு இடைநிலை ஆசிரியர்/பட்டதாரி ஆசிரியர்(Nodel Teacher) தேர்ந்தெடுத்து அனுப்பக்கோருதல் சார்பு


Ambedkar Birthday (14th April) declared as Central Holiday for Central Govt office


5 Year Post office Time Deposit eligible for 80C


Investment made in "five year time deposit in an account under Post Office Time Deposit Rules, 1981" will be eligible for deduction from the Gross total income, under section 80C, with the overall section treshold of 1 Lakh.The additional point to be noted is "The amendment shall apply to investments, as above, made during the financial year 2007-08 and subsequent years."Below is the summary of the Finance bill presented in the budget:

Enlargement of the scope of eligible saving instruments under section 80CSection 80C of the Income-tax Act providesfor a deduction of upto rupees one lakh to an individual or a Hindu undivided family (HUF) for,-

புதிய வண்ணத்தில் பிளஸ் 2 சான்றிதழ்


இந்த ஆண்டுக்கான, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் நவீன, '2 டி பார்கோடு' மற்றும், 'வாட்டர் மார்க்' என்ற, ரகசிய குறியீடுடன் பளிச்சிடும் வண்ணத்தில் தயாராக உள்ளது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. தேர்வு முடிவுகளை, சட்டசபை தேர்தலுக்கு முன் வெளியிட, பள்ளிக்கல்வித் துறையும் மற்றும் தேர்வுத் துறையும் திட்டமிட்டு உள்ளன.

ஆதார் எண் விவரம் சேகரிக்காத ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை


மாணவர்களின் ஆதார் எண் விவரம் சேகரிக்காத, ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின், ஆதார் எண் விவரங்களை சேகரிக்க, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.

Wednesday, March 23, 2016

சர்வதேச பல்கலை பட்டியலில் அண்ணா பல்கலைக்கு தரவரிசை நிர்ணயம் !


சர்வதேச பல்கலைகளின் பாடவாரியான திறன் பட்டியலில், சென்னை, அண்ணா பல்கலை, மூன்று பிரிவுகளில் தரவரிசை பெற்றுள்ளது.இங்கிலாந்தை சேர்ந்த, க்யூ.எஸ்., எனப்படும், 'க்வாக்குவாரெல்லி சைமண்ட்ஸ்' நிறுவனம் சார்பில், இன்ஜி., மற்றும் அறிவியல் பல்கலைகளின் தரவரிசை பட்டியல், ஆண்டுதோறும் வெளியிடப்படும்.

அரசு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளுக்கு ஏப்., 22 முதல் கோடை விடுமுறை.


தமிழகத்தில், அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ஏப்., 22ம் தேதி முதல் மற்றும் 5ம் வகுப்பு வரை உள்ள துவக்கப் பள்ளிகளுக்கு, மே 1ம் தேதி முதல், கோடை விடுமுறை துவங்குகிறது. தமிழகத்தில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன.

தொடக்கப்பள்ளிகளுக்கு மே.,1 முதல் கோடை விடுமுறை.


ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப் பள்ளிகளில், ஏப்., 30ம் தேதி தேர்வுகள் முடிகின்றன.

மே 1ம் தேதி முதல், கோடை விடுமுறை துவங்குகிறது.

6 லட்சம் பட்டதாரிகள் எழுதியுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் வாய்ப்பு


தமிழகம் முழுவதும் 6 லட்சத்துக் கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதியுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியாகவுள்ளது.

துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர் (கிரேடு-2), சிறைத் துறை நன்னடத்தை அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய் வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 1,241 காலியிடங்களை நிரப்பும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறி விப்பு வெளியிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, முதல்கட்ட தேர்வான முதல்நிலைத்தேர்வு ஜூலை 26-ம் தேதி நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்ட தாரிகள் தேர்வெழுதினர்.

Tuesday, March 22, 2016

ஏ.டி.எம்., மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்!


ஏ.டி.எம்., என்ற தானியங்கி பணம் எடுக்கும் மையத்தில், மின் கட்டணம் செலுத்தும் சேவையை துவக்க, தமிழ்நாடு மின் வாரியம் முடிவு செய்துஉள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், வீடுகளில், மின் பயன்பாடு கணக்கு எடுத்ததில் இருந்து, 20 நாட்களுக்குள், கட்டணத்தை செலுத்த வேண்டும்.

மத்திய அரசு பயிற்சிக்கு தமிழக அரசு அனுமதி மறுப்பு


மத்திய அரசின் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மூலம், மாநில அரசுப் பள்ளிகளில், பயிற்சி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த, தமிழக அரசு மறுப்பு தெரிவித்து உள்ளது. மாநில அரசு பள்ளிகளில், கல்வித்தரத்தை உயர்த்த, மத்திய அரசு புதிய முன்னோடி திட்டத்தை தயாரித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்களை பணியில் அமர்த்தி, அவர்கள் மூலம், மாநில அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி தர, மத்திய அரசு திட்டமிட்டது.

No more Duplicate PAN Possible – IT Department Gets Smarter


No more Duplicate PAN Possible – There have been numerous instances in the past when while probing tax evasion and black money cases, investigators found duplicate PAN cards being used.

After years of labour, the IT department has finally got a new technology tool to check duplicate PAN cards, allowing them to ‘kill’ it.
An ambitious electronic platform called the Income Tax Business Application-Permanent Account Number (ITBA-PAN) has been operationalised. It will help the taxman and PAN issuing intermediaries identify such duplicate numbers every time a new application for generation of the I-T department-issued unique identity reaches their portals.
“The department earlier used to check against duplicity of PAN in a manual fashion which was not foolproof. The new electronic system is very accurate,” a senior official said.
In old PAN cards, he said,  the manual system would go on.

TNPSC DEPARTMENT EXAM DEC 2015 LIST OF PUBLISHED RESULT -PAPERS DETAILS AS ON 21/03/16


பிளஸ்-2 வேதியியல் தேர்வில் கருணை மதிப்பெண் 6 வழங்க

பள்ளிக்கல்வித்துறை முடிவு பிளஸ்-2 வேதியியல் தேர்வில் தவறாக கேட்கப்பட்ட 2 கேள்விகளுக்கு பதில் அளிக்க முயற்சி செய்திருந்தால் அந்த மாணவருக்கு கருணை மதிப்பெண் 6 கொடுக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.  தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., என்ஜினீயரிங், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வு கிடையாது. அதன் காரணமாக அனைத்து தொழில் கல்வியில் சேர பிளஸ்-2 வேதியியல் தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வங்கி வட்டி விகிதங்கள் குறைக்கப்படுமா?- ரிசர்வ் வங்கி

நிதிக்கொள்கைக்காக காத்திருப்பு
பிபிஎப் உள்ளிட்ட பல சிறு சேமிப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு வட்டியைக் குறைத்துள்ள நிலையில், வங்கிகளில் செய்யப்படும் டெபாசிட் மற்றும் கடனுக்கான வட்டி விகித நிர்ணயம் குறித்து ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக்கு பிறகு முடிவெடுக்க வங்கிகள் திட்டமிட்டிருக்கின்றன.
மத்திய அரசு சிறு சேமிப்புகளுக்கு வட்டி விகிதத்தை குறைத்துவிட்டதால் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வட்டி குறைப்பு செய்வதற்கான சூழல் உருவாகி உள்ளது. அதனால் வட்டி குறைப்பு முடிவினை ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக்கு பிறகு எடுக்க இருக்கிறோம் என்று பாங்க் ஆப் மஹாராஷ்ட்ராவின் நிர்வாக இயக்குநர் சுஷில் முனோத் தெரிவித்தார். வட்டி குறைப்பு செய்திருப்பதால் வங்கிகளில் இருந்து தபால் நிலையங்களுக்கு செல்வது தடுக்கப்படும் என்று மற்றொரு பொதுத்துறை வங்கியின் தலைவர் கூறியிருக்கிறார்.

விரைவு தபாலில் வாக்காளர் அடையாள அட்டை பெறும் வசதி -மார்ச் 23 முதல் அமல்


மின் வாரிய வேலை தேதியை நீட்டிக்க கோரிக்கை


'தமிழ்நாடு மின் வாரிய தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாததால், கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும்' என, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு மின் வாரியம், உதவியாளர் உட்பட, 2,175 பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்கு, விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள். ஒரே நேரத்தில், பலரும் விண்ணப்பித்ததால், இணையதளத்தின் வேகம் குறைந்தது.

இதனால், பலரால், தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. எனவே, விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை நீட்டிக்கும்படி, மின் வாரியத்திற்கு, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Results of Departmental Examinations - DECEMBER 2015 (Updated on 21 March 2016)


Click Here

பாடப்புத்தகத்தில் இல்லாத, தவறான கேள்விகள்: பிளஸ்-2 வேதியியல் தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் - அரசு தேர்வுத்துறைக்கு ஆசிரியர்கள் வேண்டுகோள்


வேதியியல் தேர்வில் பாடப்புத்தகத்தில் இல்லாத கேள்விகளும் தவறான கேள்வி களும் கேட்கப்பட்டிருப்பதால் அவற்றுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறைக்கு ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரி யர் கழக மாநிலத் தலைவர் கே.பி.ஓ.சுரேஷ், மாநிலப் பொதுச்செயலாளர் சி.வள்ளி வேலு ஆகியோர் அரசு தேர்வுத்துறை இயக்குநரிடம் நேற்று அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

Saturday, March 19, 2016

ANNAMALAI UNIVERSITY & UNIVERSITY OF MADRAS UG/PG EXAMINATION RESULTS DECEMBER 2015 PUBLISHED


FLASH NEWS

ANNAMALAI UNIVERSITY

DIRECTORATE OF DISTANCE EDUCATION  (DDE) DECEMBER 2015
UG/PG  EXAMINATIONS RESULTS PUBLISHED
www.annamalaiuniversity.ac.in

UNIVERSITY OF MADRAS

DISTANCE EDUCATION

IDE- UG/PG EXAMINATION RESULTS DECEMBER 2015 PUBLISHED

www.ideunom.ac.in

உறுதிமொழி படிவம்; ஆசிரியர்கள் திணறல்


மாணவர் வாயிலாக அளிக்கப்பட்ட ஓட்டளிப்பு உறுதிமொழி படிவத்தை, பெற்றோர் பலர், கையெழுத்து போடாமல் திருப்பி அனுப்பியுள்ளனர்; வாக்காளர் பட்டியலில் பெயரே இல்லாத நிலையில், எப்படி ஓட்டளிப்பது என்ற பெற்றோரின் கேள்வியால், ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.சட்டசபை தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு என்ற இலக்கோடு, தேர்தல் கமிஷன் பணியாற்றி வருகிறது. இதற்கென, பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆங்கில உச்சரிப்புக்கு உதவும் 'Syllable Chart' !!


பிபிஎப், சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் குறைப்பு

மத்திய அரசு பெரும்பாலான சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. பொது சேமநல நிதி (பிபிஎப்), கிஸான் விகாஸ் பத்திரம் மற்றும் தபால் துறை சேமிப்புகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் குறைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

விண்ணப்பித்து விட்டீர்களா..? விரைந்திடுங்கள்!


கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பணிவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.03.2016
இணையதள முகவரி: www.kvsrojammu.org

பட்டதாரிகளுக்கு கப்பற்படையில் பல்வேறு பணி
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.03.2016.
இணையதள முகவரி: www.indiannavy.nic.in

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கும் வசதி தொடக்கம்


பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கும் வசதி தொடக்கம்.

பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைக்கல்வி மையத்தில் பயிலும் மாணவர்கள் தேர்வு விண்ணப்பத்தினை இணைய வழியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் வசதி பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை தொடங்கப்பட்டது.தொலைக்கல்வி மையத்தில் நடைபெற்ற விழாவில் துணைவேந்தர் வெ.மா. முத்துக்குமார் மேற்கண்ட வசதியினைதொடக்கி வைத்து பேசியதாவது:

Friday, March 18, 2016

ஆண்டு வருவாய் ரூ.10 லட்சத்துக்கு மேல் இருந்தால் இனி காஸ் மானியம் கிடையாது : எஸ்.எம்.எஸ். வரும்


மானியச்சுமையை குறைக்கும் நடவடிக்கையாக வசதி படைத்தவர்களுக்கு காஸ் மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு முன்னதாக, மானியத்தை கைவிடுங்கள் என்ற பிரசார முழக்கத்தை மத்திய அரசு தொடங்கியது. இதன் மூலம் சேமிக்கப்படும் தொகை வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்க உதவியாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்தது. இதை ஏற்று ஏராளமானோர் காஸ் மானியத்தை கைவிட்டனர். இதற்கிடையில் ஆண்டு வருவாய் ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு காஸ் மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்தது. இது தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஆண்டு வருவாய் ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு சமையல் காஸ் இனி மானிய விலையில் வழங்கப்பட மாட்டாது. இதற்கிடையில் வரி செலுத்துவோரை கண்டறிந்து எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு வருகிறது. இதில் ‘உங்கள் ஆண்டு வருவாய் ரூ.10 லட்சத்துக்கு மேல் இருந்தால் அரசு உத்தரவுப்படி காஸ் மானியம் பெற உங்களுக்கு தகுதியில்லை. உங்கள் வருவாய் ரூ.10 லட்சத்துக்கு கீழ் இருந்தால் அதுகுறித்து காஸ் டீலரிடம் விவரங்களை சமர்ப்பிக்கவும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 431 பணியிடங்கள் விண்ணப்பங்கள் வரவேற்பு


இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TNPSC - Results of Departmental Examinations December 2015 List of Tests Published


Click Here

சென்னை பல்கலை., தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு


சென்னை பல்கலையின் தொலைநிலைக் கல்வி தேர்வுகள், 2015 டிசம்பரில் நடந்தன. இதில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.எஸ்சி., உள்ளிட்ட அனைத்து தேர்வுகளுக்கும், இன்று இரவு, 8:00 மணிக்கு மேல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. முடிவுகளை, www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

தொடக்கக்கல்வி செயல்முறைகள்-குழு காப்பீட்டு திட்டம் குடும்ப நல நிதி(FBF) ரூ 150000 லிருந்து ரூ 300000-ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.மாத சந்தா தொகை ரூ 30 லிருந்து ரூ 60 ஆக உயர்த்தி சம்பளத்தில் பிடித்தம் செய்தல் சார்பு


போனஸ் மதிப்பெண் உண்டா?


10ம் வகுப்பு தமிழ் 2ம் தாளில் பிழை
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ், இரண்டாம் தாளில் பிழையாகவும், பாடத்திட்டத்துக்கு வெளியில் இருந்தும் கேள்விகள் இடம் பெற்றதால், போனஸ் மதிப்பெண்வழங்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ், இரண்டாம் தாளுக்கு, நேற்று முன்தினம் தேர்வு நடந்தது. மொத்தம், 100 மதிப்பெண்களுக்கு, 41 கேள்விகள் இடம் பெற்று இருந்தன.இதில், ஐந்து கேள்விகள், மாணவர்களை குழப்பும் வகையில் இருந்தனஒரு கேள்வியே தவறாக இருந்ததுஒரு கேள்வியில், பாட புத்தகத்துக்கு வெளியில் உள்ள அம்சங்கள் இடம் பிடித்திருந்தனஒரு மதிப்பெண்ணுக்கான,12வது கேள்வி, உவமையை உருவகமாக மாற்றுமாறு கொடுக்கப்பட்டிருந்தது.

Thursday, March 17, 2016

பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்வது குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு சார்பான அரசாணை 65 , நாள் : 26. 02. 2016


Alagappa University Distance Education Examinations May 2016- Notification


31.3.16 முடிய SG/MG தொகை BRC கணக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு இருத்தல் வேண்டும் - திட்ட இயக்குநர் செயல்முறைகள்


பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.07 உயர்வு


பெட்ரோல், டீசல் விலை உயர்வு புதன்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 3ரூ. 7 காசுகள் உயர்ந்தது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.60 ஆக அதிகரிக்கும்.
டீசல் விலை லிட்டருக்கு 1ரூ. 90 காசுகள் உயர்ந்தது. இதனால் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.49.50 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இசையமைத்து பாடல் இயற்றிய அரசுப் பள்ளி மாற்றுத்திறனாளி ஆசிரியர்


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலை பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. ‘மாற்றுத்திறனாளிகள் அழைக்கிறோம் நாங்க... தேர்தலிலே வாக்களிக்க வாங்க... அதை அன்போடு சொல்லுறோம் நாங்க... இதை கனிவோடு ஏத்துக்கணும் நீங்க....’ என்ற வரிகளில் நேர்த்தியான உச்சரிப்பில் பின்னணி இசையுடன் அந்தப் பாடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

மாணவர் எண்ணிக்கையில் மத்திய அரசு கிடுக்கிபிடி!


மத்திய அரசு,
பள்ளித்தொகுப்பு தகவல்களையும் , மாணவர் , ஆசிரியர் தகவல்களையும் ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுத்து வருவதால், மாநில கல்வித்துறையினர் கிலியில் ஆழ்ந்துள்ளனர்.

சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு தேர்வு: கணக்கு வினாத்தாள், வாட்ஸ் அப்பில் வெளியானது குறித்து விசாரணை மத்திய அரசு முடிவு.


சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு தேர்வுக்கான கணக்கு வினாத்தாள், வாட்ஸ்அப்பில் வெளியான விவகாரம் குறித்துவிசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மிகவும் கடினம்சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு மண்டலங்களில் இருந்து லட்சக்கணக்கான மாணவ–மாணவிகள் இத்தேர்வை எழுதி வருகின்றனர்.

State Bank of India (SBI) Recruitment for 152 Specialist Officer Posts 2016


State Bank of India (SBI) has published a Advertisement for below mentioned Posts 2016. Other details like age limit, educational qualification, selection process, application fee and how to apply are given below.

Wednesday, March 16, 2016

பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது ஏப்ரல் 20–ந் தேதிக்குள் முடிக்க திட்டம்


பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது. ஏப்ரல் 20–ந்தேதிக்குள் திருத்தி முடிக்க அரசு தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.விடைத்தாள் திருத்தும் பணி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வு கடந்த 4–ந்தேதி தொடங்கியது. இந்த தேர்வை 8 லட்சத்து 82 ஆயிரத்து 44 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதி வருகிறார்கள். தமிழ், ஆங்கிலம், வேதியியல் ஆகிய தேர்வுகள் முடிந்து விட்டன. அரசு தேர்வுகள் துறை திட்டமிட்டபடி தமிழ் மற்றும் ஆங்கில விடைத்தாள்களை திருத்தும் பணி நேற்று தொடங்கியது.மொத்தம் 74 முகாம்களில் பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும்பணி அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் இந்த பணி தொடங்கியது. ஏப்ரல் 1–ந்தேதி இயற்பியல் தேர்வு நடத்தப்பட உள்ளது. ஏப்ரல் 20–ந்தேதிக்குள் விடைத்தாள் திருத்தும் பணியை முடிக்க அரசு தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.எஸ்.எஸ்.எல்.சி.

அறிவியல் ஆய்வகம் இல்லாத பள்ளி; கணக்கெடுக்க உத்தரவு


அரசு பள்ளிகளில், அறிவியல் ஆய்வகத்துக்கு கட்டடம் இல்லா பள்ளிகள் கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு தமிழ் தேர்வில் திருக்குறள் புறக்கணிப்பு.


பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வின் முதல் நாளான, நேற்று வினாத்தாள் எளிமையாக இருந்தது. ஆனால், 'ப்ளூ பிரின்ட்' படி கேட்க வேண்டிய திருக்குறள் கேள்வி இடம் பெறவில்லை.தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. இதை, 10.72 லட்சம் பேர் எழுதினர். முதல் நாளான நேற்று, வினாத்தாள் மிக எளிமை யாகவே இருந்தது. நன்றாக படிக்கும் திறனுள்ள மாணவர்கள், 100 மதிப்பெண் பெற முடியும் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

அன்னை தெரேசாவுக்கு செப்டம்பர் 4-ம் தேதி புனிதர் பட்டம் வழங்கப்படும்: போப் ஆண்டவர் அறிவிப்பு


அன்னை தெரேசாவுக்கு செப்டம்பர் 4-ம் தேதி புனிதர் பட்டம் வழங்கப்படும் என போப் பிரான்சிஸ் அறிவித்துள்ளார்.

அன்னை என்ற வார்த்தைக்கு இலக்கணமாக இன்றைக்கும் திகழ்ந்து வருபவர், அன்னை தெரேசா. ஏழை எளியோருக்காக உழைப்பதையே தன் வாழ்வின் மிகப்பெரிய கடமையாகவும், லட்சியமாகவும் கருதியவர். அன்னை தெரேசா, மேற்கு வங்காளத்தை சேர்ந்த மோனிகா பெஸ்ரா என்ற பெண்ணின் வயிற்று புற்றுநோயை 2002–ம் ஆண்டு குணப்படுத்தி அற்புதம் செய்தார். இதற்காக அவருக்கு 2003–ம் ஆண்டு, போப் ஆண்டவர் இரண்டாம் ஜான் பால் முக்திப்பேறு வழங்கினார்.

எஸ்.ஆர்.எம். பொறியியல் நுழைவுத் தேர்வு: மார்ச் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்


சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வுக்கு (எஸ்.ஆர்.எம்.ஜே.இ.இ.இ.) விண்ணப்பிக்கும் தேதி மார்ச் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் 150 நகரங்களில் ஏப்ரல் 19 முதல் 25-ஆம் தேதி வரை இணையவழியில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.பிளஸ் 2 தேர்வு நடைபெற்று வருவதாலும் மாணவர், பெற்றோர் வலியுறுத்தியதாலும் இந்தத் தேர்வுக்கான விண்ணப்ப நாள் மார்ச் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வேதியியல் பாடத்தில் இல்லாத வினாக்கள் கேட்பு.


பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 4ம் தேதி துவங்கியது. தமிழ் மற்றும் ஆங்கில தேர்வுகள் நிறை வடைந்துள்ளன. முக்கியத் தேர்வுகளான, அறிவியல் பாடப்பிரிவுத் தேர்வுகள் நேற்று முதல் துவங்கின.

அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் துப்புரவாளர், பெருக்குபவர், காவலர் உள்ளிட்ட பணியிடங்களை தனியார் முகமை மூலம் நிரப்பவேண்டும் என்ற தமிழக அரசின் அரசாணைகளை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Tuesday, March 15, 2016

ஆதார் மசோதா 2016-ல் அறிந்திட 10 அண்மைத் தகவல்கள் !


ஆதார் மசோதா 2016’ மக்களவையில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. அது தொடர்பாக அறிய வேண்டிய அம்சங்கள்:

* ஆதார் மசோதாவை பண மசோதாவாக தாக்கல் செய்வதற்கு காங்கிரஸ் ஆட்சேபம் தெரிவித்தது. மாநிலங்களவையில் அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால், அங்கு வாக்கெடுப்பை தவிர்க்கும் வகையில் ஆதார் மசோதாவை பண மசோதாவாக அரசு தாக்கல் செய்கிறது என காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

எஸ்.எஸ்.சி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்.


மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உள்ள சார்நிலைப் பணிகளான (குரூப்-பி, குரூப்-சி) காலி பணியிடங்களை பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission-SSC) மூலமாக நிரப்பப்படுகின்றன. இதற்கு அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு (Combined Graduate Level Examination) நடத்தப்படுகிறது.

எஸ்எஸ்எல்சி மொழிப்பாடத் தேர்வை தமிழில்தான் எழுதவேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது:

கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் தமிழைத் தான் மொழிப்பாடமாக எழுதவேண்டும் என்று கட்டாயப்படுத்தாமல், அனைத்து மாணவர்களையும் அவரவர் படித்த மொழியிலேயே தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

NTSE- National Talent Search Examination 2015 Rank Wise Selected Candidate List Published


Click Here

சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு ITPD - மாநில கட்டகங்கள் உருவாக்கும் பயிற்சி


Monday, March 14, 2016

பாதுகாப்பு அமைச்சகத்தில் 129 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.


பாதுகாப்பு அமைச்சகத்தில் நிரப்பப்பட உள்ள குரூப் "சி" பணியிடங்களான Tradesman Mate, Fireman, MTS (Safaiwala) , LDC, Material Assistant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. பணி - காலியிடங்கள் விவரம்: பணி: Tradesman Mate காலியிடங்கள்: 98 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800 + இதர சலுகைகள் பணி: MTS (Safaiwala) காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900 + இதர சலுகைகள் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி. உடற்திறன் தகுதி, ஹிந்தி தெரிந்திருப்பது விரும்பத்தக்கது. பணி: Fireman காலியிடங்கள்: 06 + 01 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900 + இதர சலுகைகள் தகுதி:

ஜே.இ.இ., தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு


இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான, ஒருங்கிணைந்த பொது நுழைவு தேர்வான ஜே.இ.இ., தேர்வுக்கான, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு செய்தி


💥விழிப்புணர்வு செய்தி💥

வாக்காளர் பட்டியலில் அனைவரும் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ள வேண்டும். எனவே இதுவரையில் பெயர் சேர்க்காதவர்கள் ஏப்ரல் 15–ந் தேதிக்குள் பெயர் சேர்க்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க ஆசிரியர்கள், விஏஓ தலைமையில் குழு


கடந்த தேர்தல்களில் குறைந்த வாக்குகள் பதிவான பகுதிகளுக்கு ஆசிரியர்கள், விஏஓக்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஓட்டுப்பதிவை அதிகரிக்க விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிப்பது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்துக்குப் பின் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. கடந்த 2 தேர்தல்களில் குறைவான வாக்குகள் பதிவான இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு குழு அமைக்கப்படும்.

அந்த குழுவில், வாக்குச்சாவடி அலுவலர், ஆசிரியர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த விஏஓ ஆகியோர் இடம்பெற்றிருப்பார்கள். இவர்கள் வீடு, வீடாக சென்று வாக்களிப்பதன் அவசியத்தை மக்களிடம் விளக்கி வரும் தேர்தலில் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு பிரசாரம் செய்வார்கள்.

தற்போது, கல்லூரிகளில் மட்டுமே வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அடுத்தகட்டமாக, அனைத்து ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் முகாம் நடத்தப்படும். மருத்துவமனைகளுக்கு வரும் கர்ப்பிணிகளிடமும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். இதுதவிர திருவிழா நடைபெறும் பகுதிகள், அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம், விஏஓ அலுவலகம், தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களில் வாக்களிப்பதன் அவசியம் தொடர்பான வாசகத்துடன் கூடிய பேனர்கள் வைக்கப்படும். பொதுமக்கள் அதிகம் கூடும் மால்களிலும் விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்படும். தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலம் தெரு, தெருவாக விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும்.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களில் கர்ப்பிணிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். இதுவரை ஆன்லைன் மூலம் அரசியல் பொதுக்கூட்டங்கள் நடத்தக்கோரி 466 பேரும், வாகன பிரசாரம் நடத்த கோரி 154 பேரும், ஊர்வலம் நடத்தக் கோரி 74 பேரும், தேர்தல் அலுவலகம் திறக்க கோரி 14 பேரும் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் 24 மணி நேரத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர் எவ்வளவு பேர் தேவைப்படும் என்பது குறித்து முடிவு செய்ய டெல்லியில் நாளை ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் நான் கலந்து கொள்கிறேன். கூட்டத்துக்கு பின் இறுதி முடிவு எடுக்கப்படும். கடந்த சட்டமன்ற ேதர்தலில் 240 கம்பெனிகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் தேர்தல் பாதுகாப்பில் ஈடுபட்டனர். ஒவ்வொரு கம்பெனியிலும் 70 முதல் 100 வீரர்கள் வரை இருப்பார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் 140 கம்பெனியை சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  இவ்வாறு அவர் கூறினார்.

வீடியோ கான்பரன்சிங்
15ம் தேதி சென்னை வந்து அனைத்து  மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் தேர்தல் குறித்து ஆலோசனை  நடத்த உள்ளேன். தொடர்ந்து 16ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மாவட்டங்கள்  வாரியாக தேர்தலுக்கு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து  ஆய்வு செய்ய உள்ளேன் என்று ராஜேஷ் லக்கானி கூறினார்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வை 11 லட்சத்து 20 ஆயிரத்து 749

மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி ஏப்ரல் 13-ந்தேதி

முடிவடைகிறது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 12 ஆயிரத்து 53 பள்ளிகளில் இருந்து 10 லட்சத்து 72

ஆயிரத்து 185 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.

சென்னை பல்கலை தேர்வு: மறு கூட்டல் 'ரிசல்ட்' அறிவிப்பு


சென்னை பல்கலை தேர்வு மறு கூட்டல் முடிவுகள், இன்றுவெளியாகின்றன.சென்னை பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி திருமகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,'சென்னை பல்கலையால், நவம்பரில் நடத்தப்பட்ட இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான, மறு கூட்டல் தேர்வு முடிவுகள், மார்ச், 14 மாலை வெளியாகும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக்கை உண்ணும் பாக்டீரியா கண்டுபிடிப்பு


பிளாஸ்டிக்கினால் ஆகும் பொருட்கள் மட்காமல் மலை போல் பெருகி உலகின் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.

மறுசுழற்சி செய்ய இயலாத பிஇடி பாலிமரான இவ்வகை பிளாஸடிக்குகளை சிதைக்கும் திறனுடைய பாக்டீரியாவை கண்டறிந்து ஜப்பான் விஞ்ஞானிகள் குழு சாதனை படைத்திருக்கிறது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, தமிழகம், புதுச்சேரியில் நாளை தொடங்குகிறது.


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, தமிழகம், புதுச்சேரியில் நாளை தொடங்குகிறது.

முறைகேடுகளை தடுக்க 6600 பறக்கும் படையை தேர்வுத்துறை அமைத்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி தேர்வு நாளை தொடங்குகிறது. இதில் 12, 053 பள்ளிகளை சேர்ந்த 10 லட்சத்து 72 ஆயிரத்து 185 மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். மேலும், தனித் தேர்வர்களாக 48 ஆயிரத்து 564 பேர் எழுதுகின்றனர். இதற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3371 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Saturday, March 12, 2016

வெள்ளிக்கிழமை கதர் அணிய அரசு வேண்டுகோள்!


CPS NOMINEE Alottment : உங்களின் வாரிசுதாராரின் பெயரை, உங்கள் CPS கணக்கில் TN GOVT DATA CENTRE பதிவேற்றம் செய்து, அதனை இனையதளத்தில் வெளியிட்டுள்ளது.


CPS NOMINEE Alottment : உங்களின் வாரிசுதாராரின் பெயரை, உங்கள் CPS கணக்கில் TN GOVT DATA CENTRE பதிவேற்றம் செய்து, அதனை இனையதளத்தில் வெளியிட்டுள்ளது.

ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது


மக்களவையில் இன்று எதிர்க்கட்சிகளின் கடும் ஆட்சேபனைக்கு மத்தியில் ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் மசோதா நிறைவேறியது.

மானியத் திட்டங்கள் மற்றும் நேரடி பணப்பயன் திட்டங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க வகை செய்யும் ஆதார் மசோதா குறித்து மக்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. மசோதாவை ஆதரித்து பேசிய மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மசோதா மீது 7 ஆண்டுகளாக நடந்த விவாதம் தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அரசு பள்ளிகள்தான் தமிழை வளர்த்து வருகின்றன: சகாயம் பேச்சு


மதுரை பாத்திமா கல்லூரியில் இன்று, கல்லூரி தின விழா நடந்தது. இதில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:–அரசு பள்ளிகள்தான் தமிழை வளர்த்து வருகிறது. ஏழை, எளிய மாணவ–மாணவிகளுக்கு அது கடைசி நம்பிக்கையாகவும் இருந்து வருகிறது.நான் கிரானைட் வழக்கை விசாரிக்கும் போது நள்ளிரவில் சுடுகாட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது உங்களை ஆவிகள் ஏதும் செய்யவில்லையா? என்று கேட்டார்கள்.ஆவிகளால் எனக்கு எந்த தொந்தரவும் இல்லை. ஆனால் சில பித்தலாட்ட பாவிகளால்தான் எனக்கு அச்சம் ஏற்பட்டது. நான் கிராமத்து இளைஞர்களை சந்திக்கும் போதெல்லாம் அவர்களது ஆங்கில அறிவை வளர்க்க வேண்டும் என்பதற்காக அவர்களுடன் ஆங்கிலத்தில் உரையாடும் பழக்கத்தை கொண்டுள்ளேன்.மாணவர்கள் எந்த ஒரு செயலை செய்தாலும் பயமின்றி – சுதந்திரமாக முடிவு எடுத்தால் வெற்றி என்ற இலக்கை அடைய முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

29-th convocation announced IGNOU


அரசு கல்லூரி, பள்ளிகளில் ஆண்டு விழாவுக்கு தடை - தேர்தல் கமிஷன்


அரசு கல்லுாரி, பள்ளிகளில் ஆண்டு விழா, பட்டமளிப்பு விழா நடத்த தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசியல் கட்சிகளுக்கு சாதகமாக அரசு ஊழியர்கள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை; ராஜேஷ் லக்கானி எச்சரிக்கை


சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு சாதகமாக அரசு ஊழியர்கள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குட்டிக்கதை

சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி பொறியியல் கல்லூரியில், வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பேசியதாவது:-

ஆதார் எண் இல்லாத சமையல் கியாஸ் வாடிக்கையாளர்கள் தனிப்படிவம் நிரப்பித் தந்தால் மட்டுமே மானியம்


ஆதார் எண் இல்லை என்பதற்கான படிவம் பூர்த்தி செய்து கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் மானியத்துடன் கூடிய சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.சமையல் கியாஸ்

கோவையில் பாஸ்போர்ட் முகாம் வருகிற 19–ந் தேதி நடைபெறுகிறது


கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.சசிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் பாஸ்போர்ட் முகாம் பீளமேடு பாஸ்போர்ட் சேவை மையத்தில் வருகிற 19–ந்தேதி நடக்கிறது. இந்த முகாமில் கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

தேர்தல் பணியில் சிறுவர்களை பயன்படுத்தினால் தண்டனை!


தேர்தல் பணியில் சிறுவர்களை பயன்படுத்தினால், குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ், அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்படும்' என்று தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, மாவட்ட தேர்தல்
அதிகாரிகளுக்கு அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:வட மாநிலத்தில், குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தி, ஓட்டுச்சாவடி இயந்திரங்களை வாகனங்களில் ஏற்றிய சம்பவம்
சர்ச்சையை ஏற்படுத்தியது.எனவே, இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் கண்காணிக்க வேண்டும். தேர்தல் பணியில் எக்காரணத்தைக் கொண்டும் குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தியது தெரிய வந்தால், அந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தண்டனை வழங்கப்படும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டு
உள்ளது.

Friday, March 11, 2016

TNPSC Assistant Jailor Exam 2016 Notification Published – Apply Online Soon from www tnpscexams net - Last Date 08-04-2016


ரூ.25 செலுத்தி வாக்காளர் அடையாள அட்டை பெற புதிய வசதி: ராஜேஷ் லக்கானி தகவல்


தமிழகத்தில் வாக்காளர் அடையாள அட்டையை இதுவரை பெறாதவர்கள் ரூ.25 கட்டணம் செலுத்தி எளிய முறையில் வாக்காளர் அடையாள அட்டை பெறலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.

4 நாட்கள் வங்கிகள் 'லீவு': சுதாரியுங்க மக்களே...!


இம்மாத இறுதியில் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட உள்ளது. இதனால் ஏடிஎம் மையங்களில் முன்பே தேவையான பணம் எடுத்து வைத்துக் கொள்ளுதல் மற்றும் கணக்கு வழக்குகளை பார்த்து, திட்டமிட்டு செயல்பட்டால், பாதிப்பை தவிர்க்க முடியும்.

மார்ச் 24ம் தேதி ஹோலி பண்டிகை, மார்ச் 25ம் தேதி புனித வெள்ளி, மார்ச் 26 நான்காவது சனிக்கிழமை (மாதத்தின் 2வது மற்றும் 4வது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை என ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ளது). மார்ச் 27ம்தேதி ஞாயிற்றுக்கிழமை. ஆக தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை காரணமாக வங்கிகள் மூடப்பட உள்ளன. இதனால், வங்கிகளில் பணம் செலுத்துவது, பண பரிவர்த்தனை, ஏடிஎம்.,க்களில் பணம் எடுப்பது உள்ளிட்ட செயல்பாடுகளில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

வினாத்தாள் வருது; தேர்வுக்கு தயாராகுங்க!


பத்தாம் வகுப்புக்கு, 15ம் தேதி பொதுத் தேர்வு துவங்கும் நிலையில், இன்று முதல் வினாத்தாள்கள், கட்டுக்காப்பு மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

இந்த தேர்வை, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். பிறமொழி மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல், தமிழ் கட்டாய பாடமாக மாறியுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, விலக்கு பெற்ற மாணவர்களுக்கு மட்டும், அவர்களது தாய்மொழியான பிற மொழியில், தேர்வு எழுதி அனுமதி உண்டு.

பிளஸ் 2 மாணவர்கள் பெல்ட் அணியதடையில்லை: நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்


    பிளஸ் டூ தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் பெல்ட், காலணியுடன் செல்வதை தடுக்குமாறு‌ உத்தரவு ‌எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 127 பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு,


இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 2016 - 2017க்கு நிரப்பப்பட உள்ள 127 பல்வினைப் பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி பெற இணையதளத்தில் முன்பதிவு


மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி பெற விரும்புபவர்கள் கிங் ஆராய்ச்சி மையத்தின் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.குறிப்பிட்ட வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்புவோர், நோய்த் தடுப்புக்காக மஞ்சள் காய்ச்சலுக்கான (yellow fever)  தடுப்பூசி பெற விரும்புவோர் சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையதளத்தில் முன்பதிவு செய்யும் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது.

பாட புத்தகம், நோட்டுகள் தேவை; அரசிடம் பட்டியல் சமர்பிப்பு


வரும் கல்வி ஆண்டுக்கான பாட புத்தகங்கள், நோட்டுகள் தேவை குறித்து தமிழக அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.

பள்ளி திறக்கும் நாளில் மாணவ, மாணவிகளுக்கு பாட புத்தகங்களை இலவசமாக கடந்த சில ஆண்டுகளாக அரசு வழங்கி வருகிறது. இதேபோல் வரும் கல்வி ஆண்டிலும் பாட புத்தகங்கள், நோட்டுகளை வழங்குவதற்கான நடவடிக்கையில் பள்ளி கல்வி துறையினர் ஈடுபட்டுள்ளனர். தேவை பட்டியலை தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆன்லைன் மூலம் மனு செய்தால் அடையாள அட்டை வீட்டுக்கே அனுப்பப்படும்


ஏப்ரல் 15ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்: வாக்காளர் அட்டையை எளிதாக பெற 363 மையங்களில் சிறப்பு ஏற்பாடு; ஆன்லைன் மூலம் மனு செய்தால் அடையாள அட்டை வீட்டுக்கே அனுப்பப்படும்

Wednesday, March 9, 2016

8ம் வகுப்பு தேர்வு 'தத்கல்' விண்ணப்ப தேதி அறிவிப்பு


எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள், 'தத்கல்' திட்டத்தின் கீழ், மார்ச், 11, 12ல் விண்ணப்பிக்கலாம்.தேர்வுத்துறை இயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஏப்ரலில் நடக்க உள்ள, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள், மார்ச், 11, 12ல், 'ஆன்லைன்' மூலம் சிறப்பு அனுமதி தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இதற்கான அரசு சேவை மையங்களின் முகவரி விவரம், தேர்வுத்துறையின், www.tndge.in என்ற, 'ஆன்லைன்' முகவரியில் தரப்பட்டுள்ளது.மார்ச், 12ம் தேதி மாலை, 5:00 மணி வரை இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் தேர்தல் தொடர்பாக போஸ்டர் ஒட்டினால் ஓராண்டு ஜெயில் தலைமை தேர்தல் அதிகாரி; ராஜேஷ் லக்கானி தகவல்


மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் தேர்தல் தொடர்பான போஸ்டர் ஒட்டினால் ஓராண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.பிடிபட்ட பணம்

சென்னையில் நிருபர்களுக்கு, ராஜேஷ் லக்கானி அளித்த பேட்டி வருமாறு:–சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் பறக்கும் படை மூலம் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ரூ.30.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.23.7 லட்சம் சென்னையிலும், ரூ.4.90 லட்சம் நீலகிரியில் பிடிபட்டது. மீதமுள்ள ரூ.2 லட்சம் வெவ்வேறு இடங்களில் பிடிபட்டுள்ளது.இந்த தொகை அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தேர்தல் நடத்தும் அதிகாரி விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார். பணத்தின் உரிமையாளர் அதற்கான ஆவணத்தைக் காட்டி அதைப் பெற்றுக்கொள்ளலாம்.

2020-ல் அரசு ஆரம்ப பள்ளிகளே இருக்குமா?- செய்தி


ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.


ஆசியர்கள் தகுதித் தேர்வு எழுதுது கட்டாயம் என, கல்வித்துறைஅறிவித்துள்ளது.தகுதித்
தேர்வைரத்து செய்யுமாறு
கிருஷ்ணகிரியைசேர்ந்த
ஆசிரியர் ஜோதி என்பவர்முதல்வரின் தனிப்பிரிவில் மனு
அளித்திருந்தார்.

PGTRB:பேரவை தேர்தலுக்குப் பிறகே முதுகலை பட்டதாரிஆசிரியர் தேர்வு நடத்தப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு.


ரயிலில் தனியாக பெண் பயணமா? 90031 60980ஐ கூப்பிடுங்க...

 ரயில் பயணத்தின் போது, பல
ஆண்களுடன் பெண், ஒருவர் தனியாக பயணிக்க நேரிடுகிறது. அந்த பெண்ணுக்கு மற்ற பயணிகளால் அசவுகரியமான சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த சூழலில், அதிகாரியை அழைத்து புகார் தெரிவிக்கும் வசதியை, தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.

மாநில கணக்காயர் கணக்கிற்கு தொடக்கக்கல்வித்துறையில் உள்ள் ஆசிரியர்கள் கணக்கினை மாற்றம் செய்ய இயக்குனர் உத்தரவு!!!


Tuesday, March 8, 2016

746 மெட்ரிக். பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட தாற்காலிக அங்கீகாரம் நீட்டிக்கப்படாது:

உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி
நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத 746 மெட்ரிக். பள்ளிகளுக்கு மே 31-ஆம் தேதி வரை வழங்கப்பட்ட தாற்காலிக அங்கீகாரம் மேலும் நீட்டிக்கப்படாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு திங்கள்கிழமை உறுதியளித்தது.
 அரசு விதித்த நிபந்தனைகளின்படி, குறைந்தபட்ச நில அளவு, பிற கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத 746 மெட்ரிக். பள்ளிகள் வரும் மே 31-ஆம் தேதி வரை தொடர்ந்து செயல்பட பள்ளிக்கல்வித் துறை தாற்காலிக அங்கீகாரம் வழங்கியது. இதுதொடர்பாக 2015 ஆகஸ்ட் 18-இல் 2 அரசாணைகள் வெளியிடப்பட்டிருந்தன.

7-ஆவது ஊதியக் குழு பரிந்துரை: முதல்கட்டமாக ரூ.70,000 கோடி ஒதுக்கீடு


மத்திய அரசுப் பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்துவது தொடர்பான 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு முதல்கட்டமாக ரூ.70,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மத்திய அரசுப் பணியாளர்கள் சுமார் 47 லட்சம் பேர் மற்றும் 52 லட்சம் ஓய்வூதியதாரர்கள் ஆகியோரது ஊதியத்தை உயர்த்துவது குறித்து 7-ஆவது ஊதியக் குழு சில பரிந்துரைகளை முன்வைத்தது. அந்தப் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசுச் செயலர் பி.கே.சின்ஹா தலைமையிலான குழுவை கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு அமைத்தது.

SLAS 2015-16 Result Overall for Tamilnadu state. SLAS 2015-16 Result ...


பத்தாம் வகுப்பு-மார்ச்-2016 - தனித்தேர்வர் மற்றும் தட்கல் தனித்தேர்வர் தேர்வு கூடம் நுழைவு சீட்டு பதிவிறக்கம்.


SSLC EXAM - MAR – 2016 - PRIVATE CANDIDATE HALL TICKET click here ...

Bharathiyar University School of Distance Education


Bharathiyar University
School of Distance Education

தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் ஊக்க ஊதியத்தை அதிகரிக்க வேண்டும்: கலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை


அரசு பொதுத் தேர்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊக்க ஊதியத்தை ரூ. 80-இல் இருந்து ரூ. 400ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கலை ஆசிரியர் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இச்சங்கத்தின் அவசரக் கூட்டம் கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.ராஜ்குமார் தலைமை தாங்கினார். பொதுச்செயலர் முரளி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

170 உதவி பேராசிரியர் பணியிடம்:15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


மத்திய அரசு கல்லுாரிகளில், 170 உதவி பேராசிரியர் பணிகளுக்கு, 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய செய்திக்குறிப்பு:- மத்திய அரசு கல்லுாரிகளில், தாவரவியல் பாடத்தில், 16 உதவி பேராசிரியர்கள், வேதியியலில், 20 பேர், பொருளாதாரத்தில், 20 பேர், ஆங்கிலத்தில், 29, கணிதத்தில், 15, இயற்பியலில், 17, வரலாறு, எட்டு, தமிழ் உதவி பேராசிரியர், நான்கு உட்பட பல பாடப் பிரிவுகளுக்கு, 170 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். விண்ணப்பதாரர்கள், 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பாடப்பிரிவில், 55 சதவீதம் மதிப்பெண் பெற்று, 'நெட் அல்லது செட்' தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி


சென்னையில் நேற்று, தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான, சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.
ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், தலா இரண்டு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, தலைமை தாங்கினார். தேர்தல் கமிஷனில் இருந்து வந்திருந்த அதிகாரிகள், பயிற்சி அளித்தனர்.

Monday, March 7, 2016

அனைத்து தனியார் பள்ளிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம்


தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும், காலை நேர பிரார்த்தனைக் கூட்டத்தின் போது தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் தனிப்பட்ட நபரை விமர்சனம் செய்பவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும


சமூக வலைதளங்களில் தனிப்பட்ட நபரை விமர்சனம் செய்பவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். தனிப்பட்ட முறையில் ஒருவரை ஒருவர் விமர்சித்தால் சட்டப்படி ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்படும். இதில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.

நடைபயிற்சியால் ஆரோக்கியம் மட்டுமல்ல, ஆயுள் காலமும் அதிகரிக்கும்:

ஆய்வில் புதிய தகவல்
ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்யும் நடைபயிற்சி நமது ஆயுட்கால நீட்டிப்புக்கும் உறுதுணையாக உள்ளதாக சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

பி.எஃப். மீதான வரிவிதிப்பை கைவிட வாய்ப்பு: மத்திய அரசு தீவிர பரிசீலனை


சர்ச்சைக்குரிய பி.எஃப். வரிவிதிப்பு குறித்த அனைத்து தெரிவுகளும் பரிந்துரைகளும் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனையடுத்து பி.எஃப். மீதான வரிவிதிப்பை முற்றிலும் கைவிடவும் வாய்ப்புள்ளதாக மூத்த அதிகாரிகள் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவித்துள்ளனர்.

எஸ்.எஸ்.சி. ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வு நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு


மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வு நிலை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதல்முறையாக கேரள அரசு தலைமை செயலகத்தில் இலவச வைபை சேவை


கேரளாவில் அரசு துறையில் பெரும்பாலான சேவைகள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு வீண் அலைச்சல் தவிர்க்கப்பட்டுள்ளது. அரசு சேவைகளை அவர்கள் மிக எளிதாக பெற முடிகிறது.இதனால் இந்தியாவிலேயே முதல் ‘டிஜிட்டல்’ மாநிலம் என்ற பெருமை கேரளாவுக்கு கிடைத்துள்ளது. சமீபத்தில் கேரளாவில் சுற்றுப்பயணம் செய்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இதை முறைப்படி அறிவித்து கேரள அரசை பாராட்டினார்.இந்த நிலையில் அடுத்த மைல் கல்லாக கேரள அரசு தலைமை செயலகத்தில் இலவச ‘வைபை’ சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

ஏப்.11 முதல் மத்திய அரசு ஊழியர் 'ஸ்டிரைக்': சமரச பேச்சு தோல்வி


அரசுடன் பேச்சு தோல்வி அடைந்ததால் திட்டமிட்டபடி ஏப்.,11 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடக்கும்' என மத்திய அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், குறைந்தபட்சஊதியம் ரூ.26 ஆயிரம், 52 வகையான படிகளை ரத்து செய்யக்கூடாது, ஐந்து முறை பதவி உயர்வு உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.,11 முதல், மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர்.

விரிவுரையாளர் தேர்வுக்கான பாடத்திட்டம் வெளியீடு.


ஆசிரியர் பயிற்சி மையங்களில், காலியாக உள்ள, 222 விரிவுரையாளர் பணி தேர்வுக்கான பாடத் திட்டத்தை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.பள்ளிக் கல்வித் துறையின் கீழ், மாவட்டந்தோறும், 'டயட்' எனப்படும், மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், ஆசிரியர்
பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன.இந்த மையங்களில், பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சியும், பிளஸ் 2 முடித்தவர்களுக்கு, டிப்ளமோ ஆசிரியர் பயிற்சிபடிப்பும் நடத்தப்படுகின்றன.

மூன்றாம் பருவ தேர்வு அட்டவணை !


2016 ஆம் ஆண்டின் மூன்றாம் பருவ தேர்வு..

தொடக்கக்கல்வி
1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளுக்கு

ஏப்ரல் 22 (வெள்ளி) தமிழ்.

ஏப் 25(திங்கள்)ஆங்கிலம்.

ஏப. 26 (செவ்வாய்)
கணிதம்.

ஏப் 27 (புதன்)
அறிவியல்.

ஏப் 28(வியாழன்)
சமூகவியல்.

ஏப் 29 (வெள்ளி) உடற்கல்வி.

ஏப் 30 (சனிக்கிழமை) பள்ளி வேலைநாள்.
இந்த கல்வியாண்டின் இறுதி நாள்.

மே மாதம் கோடைவிடுமுறை

மே 16 தேர்தல்.
மே 19 ,வாக்கு எண்ணிக்கை.

பொதுத்தேர்வு மாணவர்களை கலங்கடிக்காதீங்க!


பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பீதி ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது' என, பறக்கும் படையில் உள்ள ஆசிரியர்களுக்கு, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. பிளஸ் 2 பொதுத்தேர்வில், முறைகேடுகளை கண்டுபிடிக்க, 3,000 பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்கள்; 15 ஆயிரம் முழு நேர உடற்கல்வி ஆசிரியர்கள்; 2,000 தொழிற்கல்வி ஆசிரியர்கள், பறக்கும் படையில் நியமிக்கப்பட்டு உள்ளனர். உடற்கல்வி ஆசிரியர்கள், 'டிரில்' மாஸ்டராக இருப்பதால், மாணவ, மாணவியரிடம் கடுமையாக நடந்து கொள்வதாக, சில மாவட்டங்களில் புகார் எழுந்தது.இதையடுத்து, 'மாணவ, மாணவியரை மிரட்டும் வகையில், அவர்களுக்கு பீதி ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது' என, பறக்கும் படையில் உள்ள ஆசிரியர்களுக்கு, கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 'மாணவர்களை பெயரளவில் பிடித்து, காப்பியடித்ததாக பதிவு செய்யக்கூடாது. அதற்கான சாட்சி மற்றும் நடைமுறை விதிகளை பின்பற்றியே, பிடிக்க வேண்டும்' என்றும் அறிவுறுத்தி உள்ளனர். ஒரு மாணவர் காப்பியடித்தோ, 'பிட்' அடித்தோ பிடிபட்டால், அந்த மாணவரின் துண்டுத்தாள் அல்லது காப்பியடித்த தாளை, மாணவரின் கையெழுத்துடன், ஆவணமாக்க வேண்டும் மாணவர் அமர்ந்த அறையில், அந்த இடத்தின் வரைபடம் வரைந்து தர வேண்டும் மாணவர் பிடிபடும் போது இருந்த சாட்சிகளை, அடையாளம் காண வேண்டும்; தேர்வு அறை கண்காணிப்பாளரின் சாட்சி கட்டாயம் தேவை தேர்வுத் துறை ஒழுங்கு நடவடிக்கை குழு கூடி விசாரிக்கும் போது, சரியான வகையில், சாட்சிகள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கிடுக்கிப்பிடி விதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பெயரளவில் பார்வையிடவே முடிகிறது:இதுகுறித்து, உடற்கல்வி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், ஏற்கனவே எங்களை, 'ஆர்டர்லி' என்ற ஊழியர் போல் நடத்துகின்றனர். எங்களை பறக்கும் படையில் நியமித்துள்ள நிலையில், முறைகேட்டில் ஈடுபடும் மாணவரை பிடித்தால், அந்த அறையின் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க, நாங்கள் பரிந்துரைக்க முடியும். ஆனால், கண்காணிப்பாளர்கள், எங்களிடம் வாக்குமூலம் தர மறுக்கின்றனர். அவர்களில் பலர் தான் எங்களுக்கு உயரதிகாரிகள் என்பதால், பெயரளவில் தேர்வு அறையை பார்வையிடவே எங்களால் முடிகிறது. இதுபோன்ற கிடுக்கிப்பிடி உத்தரவுகளால், முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களை பிடிக்க முடியாத சூழல் தான் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Saturday, March 5, 2016

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவிப்பு


சென்னை:''தமிழகம் முழுவதும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன. வாகன சோதனை துவங்கி உள்ளது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்து உள்ளார்.

பிளஸ் 2 தேர்வு: காலால் எழுதிய மாணவன்


குமாரபாளையம்: நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நேற்று பிளஸ் 2 தேர்வு நடந்தது. தமிழ் முதல் தாள் தேர்வை, அரசு உதவிபெறும் பள்ளியான குமாரபாளையம் நேரு நினைவு சம்பூரணியம்மாள் மாற்றுதிறனாளிகள் பள்ளியை சேர்ந்த மகேஷ்குமார், 18, என்ற மாணவர், தன் இரு கைகளும் இல்லாத நிலையில், தன் காலால் தேர்வு எழுதினார். இவரது தந்தை மஞ்சுநாதன்,
கிருஷ்ணகிரி மாவட்டம், பல்லேருஹள்ளி கூலி தொழிலாளி. 2014ல் நடந்த, 10ம் வகுப்பு தேர்வில், காலால் எழுதி, 500க்கு, 273 மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

125 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியர் பதவி உயர்வு


மதுரை:தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் 125 பேருக்கு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு அளித்து கல்வித்துறை உத்தரவிட்டது.கடந்த மாதம் 40:35 என்ற விகிதாசாரம் அடிப்படையில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் 29 பேருக்கு டி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

'ஆன்-லைன்' பதிவு அறிமுகம் ஆகிறது எப்.ஐ.ஆர்.,படிவம் சப்ளை நிறுத்தம்:காவல்துறை புதுத்திட்டம்


சிவகங்கை:அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் பதிவாகும் எப்.ஐ.ஆர்.,விபரங்களை ஆன்-லைனில் பதியும் திட்டத்தால் எப்.ஐ.ஆர்., படிவங்கள் சப்ளையை நிறுத்த அரசு திட்டமிட்டுள்ளது.ஸ்டேஷன்களில் வழக்கு பதிய முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.,) என்ற 'பிரின்ட் அவுட்' படிவம் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் தமிழ்நாடு காவல்துறை சார்பில், இது சப்ளை செய்யப்படுகிறது. இதில் வரிசை எண், எப்.ஐ.ஆர்.,நகல் எண் உட்பட பல்வேறு விபரங்கள் அடங்கியிருக்கும்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கூடுதல் வசதி :அதிகாரிகள் தகவல்


மானாமதுரை:'வரும் சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் நேரம்,தேதி பதிவு செய்யும் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது,' என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் வாக்குப்பதிவிற்கு அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

'இ - சேவை' மையங்களில் பாட புத்தகங்களை 'ஆர்டர்' செய்யலாம்:வீட்டிற்கே 'டோர் டெலிவரி' செய்ய முடிவு


தமிழக அரசின் பாடநுால் கழக புத்தகங்களை, பெற்றோர், இனி நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்க வேண்டியதில்லை. அரசின், 'இ - சேவை' மையங்களில், புக் செய்தால், மாணவர்களின் வீட்டிற்கே இலவச, 'டோர் டெலிவரி' செய்யும் திட்டத்தை, தமிழ்நாடு பாடநுால் கழகம் துவங்கியுள்ளது.

பிளஸ் 2 தமிழ்: ஆரம்பமே அசத்தல்! மாணவர்கள் உற்சாகம்


மதுரை;'பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வு எளிதாக இருந்ததால் இந்தாண்டு தேர்வு ஆரம்பமே அசத்தலாக அமைந்துள்ளது,' என தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.
மதுரையில் தேர்வு எழுதிய மாணவர்கள் கூறியதாவது:அர்ச்சயா, கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி: எதிர்பார்த்தது போல் தமிழ் தேர்வு எளிதாக இருந்தது. ஒரு மதிப்பெண் பகுதியில் நான்கு வினாக்கள் நன்றாக படிப்பவர் மட்டும் எழுதும் வகையில் இருந்தது.

'மேப்' மாட்டாதஆசிரியர்கள் மீது நடவடிக்கை


அரசு மற்றும் உதவிபெறும் தொடக்கப் பள்ளி மாணவர்கள், தங்களின் நாடு, மாநிலம், வசிக்கும் பகுதியை புவியியல் ரீதியாக அறிந்து கொள்ள, ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டுமென, உத்தரவிடப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக, வகுப்பறை சுவர்களில் வரைபடங்களை மாட்ட அதிகாரிகள் முடிவு செய்தனர்.மூன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, புவியியல் வரைபடங்கள், அரசின் சார்பில் இலவசமாக வினியோகம் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் தேதியால் பள்ளி தேர்வுகளுக்கு பாதிப்பு இல்லை : பள்ளி கல்வித்துறை


சென்னை: தேர்தல் தேதியால் பள்ளி தேர்வுகளுக்கு பாதிப்பு இல்லை என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்தல் தேதிக்கு முன்பாக பள்ளி தேர்வுகள் அனைத்தும் முடிந்துவிடும் என பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா தெரிவித்துள்ளார்

Friday, March 4, 2016

Tnpsc - VAO -2016 Tentative Key Answers download

TENTATIVE ANSWER KEYS

 Sl.No.
Subject Name
VILLAGE ADMINISTRATIVE OFFICER IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE FOR THE YEAR 2014-2015
(Date of Examination:28.2.2016 FN)
       1
GENERAL TAMIL
       2
GENERAL ENGLISH
       3
GENERAL STUDIES & BASICS OF VILLAGE ADMINISTRATION
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 10th March 2016 will receive no attention.

பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவக்கம்:8.82 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்பு


தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று துவங்குகிறது. தேர்வுகளை கண்காணிக்க, அண்ணா பல்கலை பேராசிரியர்கள் தலைமையில் ஆய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

30 ஏ.இ.இ.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு


சென்னை : பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வு மூலம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். இதில், 3 சதவீதம் மட்டும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் உதவி மற்றும் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

வி.ஏ.ஓ., தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு


.ஏ.ஓ., தேர்வுக்கான விடைக்குறிப்புகளை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.தமிழக வருவாய் துறையில் காலியாக உள்ள, 813, வி.ஏ.ஓ., காலிப் பணியிடங்களுக்கு, கடந்த, 28ம் தேதி தேர்வு நடந்தது. இதில், 10.28 லட்சம் பேர் விண்ணப்பித்து, 7.70 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வின் வினாத்தாள் மிக எளிமையாக இருந்ததாக,
தேர்வர்கள் தெரிவித்தனர்.இதற்கான விடைக்குறிப்புகள் தேர்வர் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தவறு அல்லது ஆட்சேபனை இருந்தால், மார்ச், 10க்குள், டி.என்.பி.எஸ்.சி.,க்கு தெரிவிக்கலாம்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கானதண்டனைகளை, தேர்வுத்துறை பட்டியலிட்டுள்ளது அதன் விவரம்:


1.துண்டுத்தாள், புத்தகம், விடைக்குறிப்புகள் வைத்திருந்து, அதை கண்காணிப்பாளர் கவனிக்கும் முன், மாணவர் தானாகவே முன் வந்து, கண்காணிப்பாளரிடம் கொடுத்தால், மாணவரைஎச்சரிக்கை செய்து தேர்வு எழுத அனுமதிக்கலாம். அதன் பின் குறிப்புகள் வைத்திருந்தால், விளக்கம் எழுதி வாங்கி விட்டு, தேர்வை எழுத தடை செய்து வெளியேற்றப்படுவர்.


2. துண்டுத்தாள், விடைக்குறிப்பு வைத்திருப்பதை கண்காணிப்பாளர் கண்டுபிடித்தால், உடனடியாக மாணவரை வெளியேற்ற வேண்டும். துண்டுத்தாளை, மாணவர் பெயர் விவரத்துடன் மண்டல துணை இயக்குனரிடம் ஒப்படைக்க வேண்டும். மாணவர் விடைக்குறிப்பை பயன்படுத்தாவிட்டால், மறு நாள் தேர்வு எழுதலாம். துண்டுத்தாளை பயன்படுத்தியிருந்தால், அன்றைய தேர்வுக்கான விடைத்தாள் நிறுத்தம்செய்யப்படும். ஓர் ஆண்டு அல்லது அடுத்து வரும், இரண்டுபருவ தேர்வுகளுக்கு தடை விதிக்கப்படும்.

3. ஒரு மாணவரை பார்த்து மற்றொரு மாணவர் எழுதினால், உடனேவெளியேற்றப்படுவார். பார்த்து எழுதியதற்கு சாட்சி இருந்தால், அந்த மாணவர் அடுத்து வரும், இரண்டு பருவ தேர்வுகள் அல்லது, ஓர் ஆண்டுக்கு, குறிப்பிட்ட பாடத்தைஎழுத முடியாது.

4.மாணவர் முழுவதுமாக காப்பியடித்தது தெரிந்து,தவறு நிரூபிக்கப்பட்டால், அனைத்து தேர்வுகளையும் எழுத முடியாது. அடுத்து வரும், இரண்டு பருவ தேர்வுகள் ரத்துசெய்யப்படும்.

5. அறை கண்காணிப்பாளரின் உதவியுடன் மாணவர் காப்பியடித்து, அது சாட்சியுடன் நிரூபிக்கப்பட்டால், அடுத்து வரும் தேர்வுகளை எழுத முடியாது.

6.விடைத்தாளை எடுத்து சென்றாலோ, கிழித்து விட்டாலோ, அந்த தேர்வு முழுவதையும் எழுத முடியாது.

7.ஆள்மாறாட்டம் செய்து நிரூபிக்கப்பட்டால்,நிரந்தரமாக தேர்வு எழுத முடியாது.

8.தன்னை தேர்ச்சி பெற செய்யும்படி, தேர்வு தாளிலோ, கடிதம் மூலமோ தேர்வுத்துறை அலுவலகத்துக்கோ, அல்லது தேர்வுத்துறை அதிகாரிகளுக்கோ கடிதம் எழுதினால், அந்த மாணவரின் தேர்வு ரத்து செய்யப்படும்.

9. தேர்வுத்துறை அதிகாரிகள், தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் மாணவரை காப்பியடிக்க விடாமல் தடுத்து, அவர்களை தேர்வு மையத்துக்கு வெளியே அனுப்பிய பின், தேர்வு மையத்திற்கு வெளியே, அதிகாரிகள், ஆசிரியர்களை மாணவர் மிரட்டி,திட்டினால், அந்த மாணவரின் தேர்வு ரத்து செய்யப்படும்.

10.மாணவர் வினாத்தாளை வெளியே, ‘லீக்’ செய்தால், மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.

11. முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு, விளக்கம் தர மறுத்தால், அந்த பருவத்தின் தேர்வு முழுவதும் ரத்து செய்யப்படும்.

12.விடைத்தாள் திருத்தத்தில், காப்பியடித்தது தெரிய வந்தால், அந்த மாணவர் இரண்டு பருவ தேர்வுகளை எழுத முடியாது.

13.விடைத்தாளை மாற்றினால், ஐந்து ஆண்டுகள்தேர்வு எழுத தடைவிதிக்கப்படும்.

14.விடைத்தாளில் பெயர், ‘இனிஷியல்’, அல்லது ரகசிய குறியீடு இட்டால், தேர்வு முடிவுகள் ரத்தாகும்.

15.வினாத்தாளில் விடை குறிப்பிட்டு பிற மாணவருக்கு கொடுத்தால், கொடுத்த மாணவரின் அன்றைய தேர்வு ரத்து செய்யப்படும்.

'அரசு பள்ளி ஆசிரியர்கள் இயந்திரத்தனமாக உள்ளனர்'


ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் தலைமையில் நடந்தது. இதில், பள்ளி கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் பேசியதாவது:சென்னை உள்ளிட்ட, நான்கு மாவட்டங்களில் மழை வெள்ளப் பாதிப்புகளால், ஒரு மாதம் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு நியமன ஆணை வழங்கிவிட்டு ரத்து செய்யக்கூடாது: அரசு தேர்வுத் துறைக்கு தலைமை ஆசிரியர்கள் வேண்டுகோள்


பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் மையத்துக்கான உதவி முகாம் அலுவலர் பணிக்கு நியமன ஆணை வழங்கிவிட்டு பின்னர்ரத்து செய்யக்கூடாது என்று அரசு தேர்வுத் துறைக்கு தலைமை ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இது தொடர்பாக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் சாமி.சத்தியமூர்த்தி, மாநில பொதுச் செயலாளர் பி.நடராஜன் ஆகியோர் அரசு தேர்வுகள் இயக்குநருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

GO(MS)No.80 Dt: March 02, 2016 கருணை அடிப்படையில் பணி நியமனம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு - 1.2.2016 வரை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியை வரன்முறைப்படுத்துதல் - ஆணை மற்றும் வழிமுறைகள் - வெளியிடப்படுகின்றன.

SSLC & HSC NEW STUDY MATERIALS


SSLC TAMIL MATERIAL
CLICK HERE TO DOWNLOAD SSLSC TAMIL PROSE ONE MARK QUESTIONS
 CLICK HERE TO DOWNLOAD SSLSC TAMIL POEM ONE MARK QUESTIONS
CLICK HERE TO DOWNLOAD SSLSC TAMIL WORK BOOK -  II ONE MARK QUESTIONS
CLICK HERE TO DOWNLOAD SSLSC TAMIL WORK BOOK -  II ADDITIONAL  ONE MARK QUESTIONS
CLICK HERE TO DOWNLOAD SSLSC TAMIL WORK BOOK -  II ONE MARK QUESTIONS KEY ANSWERS

HSC  ENGLISH MATERIAL

ENGLISH
CLICK HERE TO DOWNLOAD PLUS TWO ENGLISH ALL SHORT CUT ONE MARK ANSWERS ……

Thursday, March 3, 2016

டிஜிட்டல் கல்வியறிவு:கிராமப்புறங்களில் புதிய திட்டம் அறிமுகம்


கிராமப்புறங்களில் டிஜிட்டல் கல்வியறிவைப் பரப்பும் வகையில் புதிய திட்டம் தொடங்கப்படும்.

மத்திய பட்ஜெட்டில் இது குறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

டிஜிட்டல் கல்வியறிவைப் பரவலாக்க மத்திய அரசு ஏற்கெனவே, தேசிய டிஜிட்டல் கல்வியறிவுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதைப் பரவலாக்கத் தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

இயக்குனரகம் - செயலகம் 'லடாய்' அபராத வட்டி கட்டும் ஆசிரியர்கள்


மத்திய அரசு திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஒவ்வொரு மாதமும், தலைமை செயலகத்தில் சம்பளத்தை இழுத்தடிப்பதால், ஆசிரியர்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

சிறப்பு பள்ளி பணியிடம் நிரப்புவதில் முறைகேடு


அரசு சிறப்பு பள்ளிகளில், விடுதி துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல பணியிடங்களை முறைகேடாக நிரப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் அரசு சிறப்பு காது கேளாதோர், பார்வை குறையுடையோர், கை, கால் ஊனமுற்றோருக்கு என, 62 பள்ளிகள் உள்ளன. இங்கு காலியாக உள்ள, 125 பணியிடங்கள் நிரப்புவது குறித்து, வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.

Wednesday, March 2, 2016

மே.2016 துறை தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது


ஏப்ரல் முதல் வாகனங்களில் வேக கட்டுபாடு கருவி கட்டாயம்


சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடு கருவி ஏப்ரல் 01 முதல் கட்டாயமாக்கப்பட உள்ளது.

சாலை விபத்துகளில் ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். விபத்துக்கள் அதிகம் நடக்க வாகனங்கள் அதிவேகமாக செல்வதே காரணம். இதை தொடர்ந்து வாகனங்களில் வேக கட்டுப்பாடு கருவி பொருத்த போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்:


TNPSC DEPARTMENTAL EXAMINATIONS MAY-2016
NOTIFICATION.

உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் பதவியிலிருந்து உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்தோர் பட்டியல் கேட்டு உத்தரவு


Manonmaniam Sundaranar University Last date for remitting examination fee of DD&CE courses of UG/PG May-2016


Manonmaniam Sundaranar University Last date for remitting examination fee of DD&CE courses of UG/PG May-2016 without penalty 09.03.16, with penalty 16.03.16 Rs.100

ஆசிரியர்கள் அதிர்ச்சி:மெட்ரிக் அதிகாரிக்கு பொதுத்தேர்வு பொறுப்பா?


தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் நிறைந்த நாமக்கல் மாவட்டத்திற்கு, பொதுத்தேர்வு பொறுப்பு அதிகாரியாக, மெட்ரிக் பள்ளி இணை இயக்குனரை நியமித்துள்ளது, அரசு பள்ளி ஆசிரியர்களை அதிர்ச்சியடையச் செய்து உள்ளது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 'மாநில ரேங்க்'
பெறுவதிலும், தேர்ச்சி சதவீதத்திலும், 10 ஆண்டுகளாக, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

ஜிப்மர் நுழைவு தேர்வு விண்ணப்பம்: 7ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவு


ஜிப்மர் நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பங்கள் வரும், 7ம் தேதி முதல், ஆன்லைனில் வினியோகிக்கப்பட உள்ளது.

சென்னையில் முன்னறிவிப்பு இன்றி... பிளஸ்2 தேர்வுக்கு முன் சரியாகுமா?


சென்னையில் கடந்த சில வாரங்களாக, முன்னறிவிப்பின்றி மின்தடை நிலவுகிறது. இதன் பின்னணியில் பல காரணங்கள் கூறப்படுகின்றன.

சென்னை, ஆர்.கே.நகரில் நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர், ''பல மணிநேரம் மின்வெட்டு என்ற நிலையை மாற்றி, இன்றைக்கு தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளோம்,'' என்றார்.இந்த நிலையில், சென்னையில் கடந்த சில வாரங்களாக, முன்னறிவிப்பின்றி, கண்ட கண்ட நேரங்களில் மின்தடை ஏற்படுகிறது. சென்னையில் உள்ள, கணினி மின்தடை நீக்கும் மையத்திற்கு, தினமும், 1,000 புகார்கள் வரும். கடந்த இரு வாரங்களாக, 1,500க்கும் மேற்பட்ட புகார்கள் வருகின்றன. அதேபோல், பிரிவு அலுவலக உதவி பொறியாளர்களுக்கும், மின்தடை சம்பந்தமாக, அதிக புகார்கள் வர துவங்கி உள்ளன.

தேர்தல் தேதி அறிவித்த பிறகு எந்த திட்டங்களையும் அறிவிக்க கூடாது: தேர்தல் கமிஷன்


தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதி இந்த வாரம் கடைசியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டு இருக்கிறது.

புதிய திட்டங்கள், அறிவிப்புகளை முன்தேதியிட்டு வெளியிடுவது உள்ளிட்ட விதிமுறை மீறல்களை முற்றிலுமாக தடுக்க அதிகாரிகளுக்கு கட்டுப்பாடுகளை தேர்தல் கமிஷன் விதித்துள்ளது.

Tuesday, March 1, 2016

2016-17ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்!


2016-17ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். அதன் சிறப்பு அம்சங்கள் வருமாறு:

வீட்டுக்கடன்களுக்கு சிறப்புச் சலுகைகள்: அருண் ஜேட்லி அறிவிப்பு


வீட்டுக்கடன்களுக்கு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.நாடாளுமன்ற மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2016 - 17ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அதில்,

ஓய்வூதிய திட்டம்: புதிய மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை அறிவிப்பு


மத்திய அரசின் புதிய ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்திற்கான பங்களிப்பில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், மத்திய அரசின் புதிய ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு அவர்கள் செலுத்த வேண்டிய 8.33% பங்களிப்பை அரசே அளிக்கும் என்று கூறினார்.ஊதியக் குழு பரிந்துரையை செயல்படுத்த இடைக்கால நிதி ஒதுக்கீடு.

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு...


பிளஸ் 2 தேர்வு முறைகேடுகள் நடந்தால் புகார் அளிக்க பெட்டி.


பிளஸ் 2 தேர்வில், முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் நடந்தால், அதுகுறித்து புகார் அளிக்க, அனைத்து தேர்வு மையங்களிலும் புகார் பெட்டி வைக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதில், பெற்றோர் மற்றும்

TNEB RECRUITMENT 2016 | தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 1475+650 பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியீடு...விரிவான விவரங்கள் ..


பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.02 குறைப்பு; டீசல் விலை ரூ.1.45 உயர்வு


மத்திய பட்ஜெட் இன்று தாக்கலான நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.02 குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.47 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

மத்திய பட்ஜெட்; கல்வி துறைக்கான முக்கிய அம்சங்கள்


பொது பட்ஜெட் உரையில் கல்வித் துறைக்கான முக்கிய அறிவிப்புகள்:

உலகத்தரத்துக்கு, 10 அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் 10 தனியார் கல்வி நிறுவனங்கள் மேம்படுத்தப்படும்.
பள்ளிச் சான்றிதழ்கள் மற்றும் பட்டயப் படிப்புச் சான்றிதழ்கள் டிஜிட்டல் ஆவணங்களாகவும் வழங்கப்படும்.

தேசிய திறனறி தேர்வு ரிசல்ட் வெளியீடு


சென்னை: பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி உதவித்தொகை பெற வேண்டுமெனில், மத்திய அரசு சார்பில் நடத்தப்படும், தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.