Pages

Wednesday, March 9, 2016

ரயிலில் தனியாக பெண் பயணமா? 90031 60980ஐ கூப்பிடுங்க...

 ரயில் பயணத்தின் போது, பல
ஆண்களுடன் பெண், ஒருவர் தனியாக பயணிக்க நேரிடுகிறது. அந்த பெண்ணுக்கு மற்ற பயணிகளால் அசவுகரியமான சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த சூழலில், அதிகாரியை அழைத்து புகார் தெரிவிக்கும் வசதியை, தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.


தெற்கு ரயில்வே உதவி வணிக மேலாளர் அமுதா என்ற அதிகாரியை, 90031 60980 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். உடனே, அந்த ரயிலில் பயணிக்கும் டிக்கெட் பரிசோதகருக்கு தகவல் தரப்பட்டு நிலைமை சரி செய்யப்படும். தேவைப்பட்டால், அந்த பெண் பயணிக்கு வேறு இருக்கை வசதியும் செய்து தரப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மகளிர் தினமான, நேற்று முதல், இந்த வசதி அமலுக்கு வந்துள்ளது. இப்பிரச்னை தொடர்பாக, '182' என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கும் வசதி ஏற்கனவே உள்ளது.

No comments:

Post a Comment