தமிழகத்தில், அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ஏப்., 22ம் தேதி முதல் மற்றும் 5ம் வகுப்பு வரை உள்ள துவக்கப் பள்ளிகளுக்கு, மே 1ம் தேதி முதல், கோடை விடுமுறை துவங்குகிறது. தமிழகத்தில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன.
பிளஸ் 2வுக்கு, ஏப்., 1ம் தேதி தேர்வுகள் முடிகின்றன. 10ம் வகுப்புக்கு, ஏப்., 11; விருப்ப பாடம் எழுதுவோருக்கு, ஏப்., 13ம் தேதி தேர்வுகள் முடிகின்றன. 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு, ஏப்., 15ம் தேதிக்குள் தேர்வுகள் முடிகின்றன. அதே போல், 6ம் வகுப்பு - 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஏப்., 21; மாநகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில், ஏப்., 30ம் தேதி தேர்வுகள் முடிகின்றன. எனவே, ஏப்., 22ம் தேதி முதல், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும்; மே 1ம் தேதி முதல், துவக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும், கோடை விடுமுறை துவங்குகிறது. ஜூன் 1ம் தேதி, அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனரகம், விரைவில் வெளியிடும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்
No comments:
Post a Comment