பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 4ம் தேதி துவங்கியது. தமிழ் மற்றும் ஆங்கில தேர்வுகள் நிறை வடைந்துள்ளன. முக்கியத் தேர்வுகளான, அறிவியல் பாடப்பிரிவுத் தேர்வுகள் நேற்று முதல் துவங்கின.
சென்டம் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க, இம்முறை, பாடங்களின் கருத்தை மையமாகக்கொண்டு வினாக்கள் கேட்கப்படும் என கல்வித்துறை தேர்வுக்கு முன்னரே அறிவுறுத்தியது. இதையடுத்து, பள்ளிகளிலும் மாணவர்களை, எந்தவிதமான வினாக்களுக்கும் விடையளிக்கும் வகையில் தீவிர பயிற்சிகளால் தயார்படுத்தினர். இந்நிலையில், தமிழ் மற்றும் ஆங்கில பாடத்திலும் கருத்துகளை மையமாகக் கொண்ட வினாக்கள் வர துவங்கின. இதையடுத்து நேற்று நடந்த வேதியியல் தேர்வில், பாடத்திலேயே இல்லாத வினாக்கள் வந்ததால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒரு மதிப்பெண் வினா மட்டுமல்லாமல், இரண்டு, ஐந்து மற்றும் பத்து மதிப்பெண் வினாக்களும் அதிகமாக குழப்பமான முறையில் வந்துள்ளன. பத்து மதிப்பெண் வினாவில் இறுதியான கட்டாய வினாவில், எண்களை குறிப்பிடுவதற்கு மாற்றாக ரோமன் எண்கள் அச்சிடப்பட்டுள்ளது. இதனால், என்ன விடை எழுத வேண்டும் என மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர். பலரும் விடை எழுதாமலே வந்துள்ளதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர். வினாத்தாள் முழுவதுமே மாணவர்களை குழப்பும் வகையில் வினாக்கள் கேட்கப்பட்டிருந்ததால் சென்டம்கான வாய்ப்புகளும் குறைந்துள்ளது. வேதியியல் ஆசிரியர் ஆழ்வார் கூறியதாவது: வேதியியல் தேர்வு வினாத்தாள் மாணவர்களுக்கு முற்றிலுமாகவே குழப்பமானதாகவே உள்ளது. ஒரு மதிப்பெண் வினா ஒன்றில் பாடத்தில் இல்லாத வினா வந்துள்ளதால் ஏராளமான மாணவர்கள் சென்டம் வாய்ப்புகளை இழக்க நேரிடும். அதிர்ஷ்டவசமாக சரியான விடையை தேர்வு செய்திருந்ததால், அந்த வினாவுக்கான மதிப்பெண் பெற முடியும் என மாணவர்களே கூறுகின்றனர். பத்து மதிப்பெண் வினாவிலும் குளறுபடி இருப்பதால், இத்தேர்வு மாணவர்களுக்கு கடினமாகவே உள்ளது. இவ்வாறு, ஆசிரியர் கூறினார்.
No comments:
Post a Comment