Pages

Wednesday, March 2, 2016

ஏப்ரல் முதல் வாகனங்களில் வேக கட்டுபாடு கருவி கட்டாயம்


சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடு கருவி ஏப்ரல் 01 முதல் கட்டாயமாக்கப்பட உள்ளது.

சாலை விபத்துகளில் ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். விபத்துக்கள் அதிகம் நடக்க வாகனங்கள் அதிவேகமாக செல்வதே காரணம். இதை தொடர்ந்து வாகனங்களில் வேக கட்டுப்பாடு கருவி பொருத்த போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.


ஏற்கனவே பள்ளி வாகனங்களில் வேககட்டுப்பாடு கருவி கட்டாயம் என்பது நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது கார், லாரி, வேன் உட்பட கனரக வானங்கள், சரக்கு வாகனங்கள், இலகு ரக வாகனங்கள், ஒன்பது இருக்கைகளுக்கு மேல் உள்ள வாகனங்கள் அனைத்திலும் வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதனால் விபத்துக்கள் குறையும் வாய்ப்புள்ளது. இதை தொடர்ந்து தற்போது வாகனங்களில் வேககட்டுப்பாடு கருவி பொருத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றது.

No comments:

Post a Comment