Pages

Thursday, March 17, 2016

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.07 உயர்வு


பெட்ரோல், டீசல் விலை உயர்வு புதன்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 3ரூ. 7 காசுகள் உயர்ந்தது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.60 ஆக அதிகரிக்கும்.
டீசல் விலை லிட்டருக்கு 1ரூ. 90 காசுகள் உயர்ந்தது. இதனால் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.49.50 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப உள்நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. மாதத்துக்கு இருமுறை இவ்வாறு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment