Pages

Monday, March 7, 2016

எஸ்.எஸ்.சி. ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வு நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு


மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வு நிலை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறை களில் உதவியாளர், உதவி பிரிவு அதிகாரி (ஏஎஸ்ஓ), வருமான வரி ஆய்வாளர், மத்திய கலால் ஆய்வாளர், தடுப்பு ஆய்வாளர், தேர்வு ஆய்வாளர், உதவி அம லாக்க அதிகாரி என பல்வேறு விதமான பணியிடங்கள் பணி யாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) மூலமாக நிரப்பப்படு கின்றன.

இதற்கு அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வு நிலை தேர்வு (Combined Graduate Level Examination) நடத்தப்படுகிறது. இதில் முதல் நிலை, இரண்டாம் நிலை என இரு நிலைகள் உண்டு. குரூப்-பி, குரூப்-சி பணிகளுக்கு நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருப்பதால் இந்த ஆண்டிலிருந்து நேர்முகத்தேர்வு கிடையாது. எனவே, எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றாலே பணி உறுதி.

இத்தேர்வு எழுத பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு பணிகளுக்கு தக்கவாறு அதிகபட்சம் 27, 30, 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மத்திய அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. காலியிடங்களின் எண்ணிக்கை அறிவிக்கப்படவில்லை என்றா லும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இந்தத் தேர்வு மூலமாக நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்நிலை தேர்வு மே மாதம் 8 மற்றும் 22-ம் தேதி களில் நடத்தப்பட உள்ளது. இதற்கு மார்ச் மாதம் 10-ம் தேதிக்குள் ஆன்லைனில் (http://sscregistration.nic.in) விண்ணப்பிக்க வேண் டும் என ஏற்கனவே அறி விக்கப்பட்டிருந்தது. தற்போது விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதி மார்ச் 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விவரங்களை www.ssc.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment