மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி பெற விரும்புபவர்கள் கிங் ஆராய்ச்சி மையத்தின் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.குறிப்பிட்ட வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்புவோர், நோய்த் தடுப்புக்காக மஞ்சள் காய்ச்சலுக்கான (yellow fever) தடுப்பூசி பெற விரும்புவோர் சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையதளத்தில் முன்பதிவு செய்யும் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது.
www.kipmr.org.in என்ற இணையதளத்தின் மூலம் பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்கான தேதியையும், கட்டணத்தையும் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.வாரத்தில் செவ்வாய், வெள்ளி ஆகிய இரண்டு நாள்களிலும் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி வழங்கப்படும். இந்தத் திட்டம் இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டாலும், அண்மையில்தான் செயல்படுத்தப்பட்டது.
மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதற்கு தென் தமிழக மக்கள் நீண்ட தூரம் பயணித்து, அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதால் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.வாரத்தில் இரண்டு நாள்களாக நீட்டிக்கப்பட்டுள்ள இந்தச் சேவையை வாரத்தில் ஐந்து நாள்களாக நீட்டிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment