தமிழகம் முழுவதும் 6 லட்சத்துக் கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதியுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியாகவுள்ளது.
துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர் (கிரேடு-2), சிறைத் துறை நன்னடத்தை அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய் வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 1,241 காலியிடங்களை நிரப்பும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறி விப்பு வெளியிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, முதல்கட்ட தேர்வான முதல்நிலைத்தேர்வு ஜூலை 26-ம் தேதி நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்ட தாரிகள் தேர்வெழுதினர்.
டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட வருடாந்திர தேர்வுகால அட்ட வணையில், குரூப்-2 முதல் நிலைத்தேர்வுக்கான முடிவுகள் மார்ச் முதல் வாரத்தில் வெளி யிடப்படும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. மார்ச் மாதம் முடிவடையும் நிலையில், தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப் படவில்லை. தேர்வெழுதிய 6 லட்சம் பட்டதாரிகள் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு தயாராகும் நிலையில் உள்ளனர்.
தாமதமா?
இதற்கிடையே, சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஆகிறதோ என்றும் சில தேர்வர்கள் எண்ணத் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “குரூப்-2 தேர்வு வினாத்தாள்கள் மதிப்பீடு உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிவடைந்து தேர்வு முடிவு தயாராக உள்ளது. எனவே, தேர்வு முடிவுகள் வெகுவிரைவில் வெளியிடப்படும். ஆனால் காலவரை நிர்ணயித்து சொல்ல இயலாது” என்று தெரிவித்தார்.
தேர்வு முடிவுகள் தயாராக இருப்பதால் எப்போது வேண்டு மானாலும் முடிவுகள் வெளி யிடப்படலாம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. அனேகமாக இந்த மாத இறுதிக்குள் முடிவுகள் வெளியிடப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம், இந்திய அரசியல் சாசன அமைப்பாக இருப்பதால் புதிய பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியிடவும், தேர்வுகள் நடத்தி முடிவுகளை வெளியிடவும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் கட்டுப்படுத்தாது என்பது குறிப் பிடத்தக்கது.
No comments:
Post a Comment