Pages

Tuesday, March 15, 2016

எஸ்.எஸ்.சி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்.


மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உள்ள சார்நிலைப் பணிகளான (குரூப்-பி, குரூப்-சி) காலி பணியிடங்களை பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission-SSC) மூலமாக நிரப்பப்படுகின்றன. இதற்கு அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு (Combined Graduate Level Examination) நடத்தப்படுகிறது.


இந்த தேர்வு முதல்நிலை, இரண்டாம் நிலை என இரு நிலைகளில் நடைபெறுகிறது.முதல் நிலை தேர்வு: பொது அறிவு, ரீசனிங், அடிப்படை கணிதம், பொது ஆங்கிலம் ஆகிய 4 பகுதிகளிலிருந்து அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் அமைந்திருக்கும்.இரண்டாம் நிலை தேர்வு: கணிதம் மற்றும் ஆங்கிலத்திலிருந்து கேள்விகள் அமைந்திருக்கும்.

பல்வேறு துறைகளில் உதவியாளர், உதவி பிரிவு அதிகாரி (ஏஎஸ்ஓ), வருமான வரி ஆய்வாளர், மத்திய கலால் ஆய்வாளர், தடுப்பு ஆய்வாளர், தேர்வு ஆய்வாளர், உதவி அமலாக்க அதிகாரி, சிபிஐ சப்-இன்ஸ்பெக்டர், தபால்துறை ஆய்வாளர், கணக்கர், புள்ளியியல் ஆய்வாளர், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆய்வாளர், தேசிய புலனாய்வு முகமை உதவி ஆய்வாளர், உதவி தணிக்கை அதிகாரி மற்றும் குரூப்-சி நிலையில் ஆடிட்டர், கணக்கர், முதுநிலை உதவியாளர், வரி உதவியாளர், போதைப்போருள் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் என பல்வேறு விதமான பணியிடங்களுக்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டது.

இந்த பணியிடங்களுக்கான ஆன்லைனில் விண்ணப்பிப்தற்கான கடைசி தேதி 10.03.2016 வெளியிட்டிருந்தது.தற்போது அத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.  இதன்படி விண்ணப்ப படிவத்தின் 1 ஐ 21.03.2016க்குள்ளும், பகுதி 2 ஐ 24.03.2016க்குள் விண்ணப்பி்க்க வேண்டும்.மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ssc.nic.in அல்லது www.sscsr.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment