Pages

Thursday, March 31, 2016

மின் வாரிய தேர்வு திடீர் தள்ளிவைப்பு


தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வை, தமிழ்நாடு மின் வாரியம் திடீரென தள்ளிவைத்துள்ளது.தமிழ்நாடு மின் வாரியம், 525 தொழில்நுட்ப உதவியாளர்; 50 உதவி வரைவாளர்; 900 கள உதவியாளர் என, 1,475 காலி பணியிடங்களை நிரப்ப, சென்னை,அண்ணா பல்கலை மூலம், ஏப்., 3ல், எழுத்து தேர்வு நடத்த இருந்தது.


தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால், இந்த தேர்வை, மே, 22க்கு ஒத்தி வைப்பதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.அவகாசம் கிடைக்குமா?இந்த தேர்வு நடக்க உள்ளது குறித்த விவரம், தெரியாத பலரால் விண்ணப்பிக்க முடியவில்லை.தற்போது, தேர்வு மே மாதத்திற்கு, தள்ளி வைக்கப்பட்டு இருப்பதால், விண்ணப்பிக்கஅவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment