சென்னையில் கடந்த சில வாரங்களாக, முன்னறிவிப்பின்றி மின்தடை நிலவுகிறது. இதன் பின்னணியில் பல காரணங்கள் கூறப்படுகின்றன.
சென்னை, ஆர்.கே.நகரில் நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர், ''பல மணிநேரம் மின்வெட்டு என்ற நிலையை மாற்றி, இன்றைக்கு தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளோம்,'' என்றார்.இந்த நிலையில், சென்னையில் கடந்த சில வாரங்களாக, முன்னறிவிப்பின்றி, கண்ட கண்ட நேரங்களில் மின்தடை ஏற்படுகிறது. சென்னையில் உள்ள, கணினி மின்தடை நீக்கும் மையத்திற்கு, தினமும், 1,000 புகார்கள் வரும். கடந்த இரு வாரங்களாக, 1,500க்கும் மேற்பட்ட புகார்கள் வருகின்றன. அதேபோல், பிரிவு அலுவலக உதவி பொறியாளர்களுக்கும், மின்தடை சம்பந்தமாக, அதிக புகார்கள் வர துவங்கி உள்ளன.
எங்கெங்கு...
கடந்த, மூன்று நாட்களாக திருவொற்றியூர், எர்ணாவூர், எண்ணுார் பகுதிகளில், நள்ளிரவு, 11:30 முதல் அதிகாலை 3:00 மணிக்குள் ஏதேனும் ஒரு மணிநேரத்தில் மின்தடை நிலவுகிறது. முதல் நாள் 10 நிமிடங்களாக இருந்த இந்த மின்தடை, இரண்டாவது நாள், 35 நிமிடங்களாக அதிகரித்தது. நேற்று முன்தினம் இரவு, ஒரு மணிநேரம் மின்தடை ஏற்பட்டது.
திருவொற்றியூர் அம்பேத்கர் நகர், சரஸ்வதி நகர், ராஜா சண்முகம் நகர், சண்முகபுரம் விஸ்தரிப்பு என, திருவொற்றியூர் மேற்கு பகுதியில் இருக்கும், 30க்கும் மேற்பட்ட இடங்களில், இரவில் அறிவிக்கப்படாத மின்தடை நிலவுகிறது.அதேபோல், வளசரவாக்கத்தில் ராமகிருஷ்ணன் நகர், காமராஜர் சாலை, ராதா கிருஷ்ணன் சாலை உள்ளிட்ட பகுதிகளில், கடந்த 27ம் தேதியன்று அறிவிக்கப்படாத மின்தடை நிலவியது. புளியந்தோப்பு, வ.உ.சி., நகர் உள்ளிட்ட பல இடங்களில்,நேற்று முன்தினம் இரவு, 11:00 முதல், நேற்று காலை, 11:00 மணி வரை அறிவிக்கப்படாத மின்தடை நிலவியது. இரவில் புழுக்கம் காரணமாக, பலர் வீடுகளின் வெளியே நடைபாதையில் துாங்கினர்.
வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர், பெசன்ட் நகர், நங்கநல்லுார், ராயபுரம் சுற்றுவட்டார பகுதிகள், பாரிமுனை, பிரோட்வே, போர்ச்சுகீஸ் தெரு, பிடாரியம்மன் கோவில் தெரு, அம்மன் கோவில் தெரு, தங்கசாலை, வால்டாக்ஸ் சாலை, மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெரு, கோவிந்தப்ப நாயக்கன் தெரு, என்.எஸ்.சி., போஸ் தெரு, லிங்கி செட்டி தெரு, யானைகவுனி ஏகாம்பர ஈஸ்வரர் தெரு, சவுகார்பேட்டை வீரப்பன் தெரு, தேவராஜ முதலி தெரு ஆகிய பகுதிகளிலும் அடிக்கடி மின்தடை நிலவுகிறது.மின்தடையோடு, நகரின் பல பகுதிகளிலும், குறைந்த மின்னழுத்த பிரச்னையும் நிலவுகிறது. அதனால், வீடுகளில் வீட்டு உபயோகப் பொருட்கள் பழுதடைந்து விடுகின்றன.
காரணம் என்ன...
* குடிநீர் வாரியம், நெடுஞ்சாலை துறை, மின்வாரியம், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவை துறைகள், சாலை ஓரங்களில் பல காரணங்களுக்காக தோண்டும் போது, பூமிக்கடியில் பதிக்கப்பட்டுள்ள மின்வடம் சேதம் அடைகிறது. சாலை தோண்டும் பணியை மேற்கொள்ளக் கூடாது என, மாநகராட்சி அறிவுறுத்தியும் பலனில்லை.
* மின்வாரிய ஊழியர்களுக்கு தெரிந்தே, நகரின் பல பகுதிகளில், கடைகள், குடியிருப்புகளுக்கு, கொக்கி போட்டு மின்சாரம் திருடப்படுகிறது. மின்வாரியம் சார்பில், மின்திருட்டை தடுக்க போதிய நடவடிக்கை இல்லை
* சட்டசபை தேர்தல் நெருங்குவதால், அனைத்துக் கட்சிகளும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. அவற்றில் பொது நிகழ்ச்சிகள், பிரதான சாலைகளில் மேடை போட்டு நடக்கின்றன. அவற்றுக்கான மின்சாரம், வழக்கம் போல் கொக்கி போட்டு திருடப்படுகிறது. இதையும் மின்வாரியம் கண்டுகொள்வதில்லை
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோடைக் காலத்தில், 'ஓவர்லோடு' காரணமாக மின்தடை ஏற்படாமல் இருக்க, பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கும் முன், மின் சாதனங்களில் பராமரிப்பு செய்ய திட்டமிடப்பட்டது. பிளஸ் 2 தேர்வு துவங்க, மூன்று நாட்களே மட்டும் அவகாசம் உள்ளதால், பராமரிப்பு பணிக்காக, மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. மார்ச், 3ம் தேதி முதல் (நாளை), இந்த பிரச்னை இருக்காது. மின்தடை புகார் வந்தால், உடனே சரி செய்யும்படி, ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மூன்று நாட்களாக மின்தடை நிலவுகிறது. குறிப்பாக, இரவில் ஏற்படும் மின்தடையால், நாங்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறோம். 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் பொதுத்தேர்வு நடக்க உள்ள நிலையில், மின்தடையால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. இரவில் மின்தடை குறித்து, மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டால், அழைப்பை ஏற்பதில்லை.
எஸ். பாலமுருகன், 40
-தனியார் நிறுவன ஊழியர், திருவொற்றியூர்
பல மணிநேரம், அறிவிக்கப்படாத மின்தடை நிலவுவதால், தொழில் செய்ய முடியவில்லை, வணிக வளாகங்களில் கடை நடத்தி வரும், பெரிய அளவில் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளிடம், ஜெனரேட்டர் மூலம் மின் இணைப்பை பெற்று, வேலை
No comments:
Post a Comment