மதுரை:தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் 125 பேருக்கு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு அளித்து கல்வித்துறை உத்தரவிட்டது.கடந்த மாதம் 40:35 என்ற விகிதாசாரம் அடிப்படையில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் 29 பேருக்கு டி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
பதவி உயர்வு பெற்ற பின் அப்பணியிடங்கள் உட்பட 100க்கும் மேல் அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.அதேநேரம் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான தகுதி பட்டியல் தயார் நிலையில் இருந்தும் அவர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதில் இழுபறி நீடித்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இந்நிலையில் தகுதி பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் 125 பேருக்கு, தலைமையாசிரியர் பதவி உயர்வு அளித்து இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டார்.
ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், "தலைமையாசிரியர் பணியிடம் பெரும்பாலும் சொந்த மாவட்டத்திலேயே வழங்கப்பட்டது மகிழ்ச்சி. உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் விரைவில் பதவி உயர்வு அளிக்க வேண்டும்," என்றனர்.
No comments:
Post a Comment