Pages

Thursday, March 31, 2016

நாளை வங்கி வேலைநேரம் நீட்டிப்பு


வரி செலுத்துவோரின் வசதி கருதி நாளை வங்கிகளின் வேலை நேரம் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வரி வசூல் சேவை வழங்கும் வங்கிக் கிளைகள் அனைத்தும் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என ரிசர்வ் வங்கி தனது சுற்றறிக்கையில் கூறியுள்ளது.


மின்னணு முறை பரிமாற்றங்கள் அனைத்தும் நள்ளிரவு 12 மணி வரை நடக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நாளை 2015- 2016-ம் நிதியாண்டின் கடைசி நாள் என்பதால் வரி செலுத்துவதற்கான அவகாசமும் இதே நாளில் முடிகிறது.

No comments:

Post a Comment