Pages

Wednesday, March 2, 2016

ஆசிரியர்கள் அதிர்ச்சி:மெட்ரிக் அதிகாரிக்கு பொதுத்தேர்வு பொறுப்பா?


தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் நிறைந்த நாமக்கல் மாவட்டத்திற்கு, பொதுத்தேர்வு பொறுப்பு அதிகாரியாக, மெட்ரிக் பள்ளி இணை இயக்குனரை நியமித்துள்ளது, அரசு பள்ளி ஆசிரியர்களை அதிர்ச்சியடையச் செய்து உள்ளது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 'மாநில ரேங்க்'
பெறுவதிலும், தேர்ச்சி சதவீதத்திலும், 10 ஆண்டுகளாக, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.


இந்நிலையில், நாமக்கல் மாவட்ட தேர்வு பொறுப்பு அதிகாரியாக, மெட்ரிக் பள்ளிகளின் இணை இயக்குனர் ஸ்ரீதேவி நியமிக்கப்பட்டு உள்ளார். இது, அரசு பள்ளி ஆசிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:தனியார் மெட்ரிக் பள்ளி கள் விதிமீறல்கள் மீது, மெட்ரிக் அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அங்கீகாரம் இல்லாமல், நுாற்றுக்கணக்கான பள்ளிகள் இயங்குவதை தடுக்க முடியவில்லை. எனவே, தேர்வு பணியில் இருந்து, மெட்ரிக் பள்ளி அதிகாரியை நீக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இயக்குனர் பதவிக்கு புதிய அதிகாரி :பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனராக பிச்சை பணியாற்றினார். 2013ல் இப்பொறுப்புக்கு வந்த பிச்சை, நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். காலியான பணியிடத்தில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யின் இயக்குனர் ராமேஸ்வர முருகனுக்கு, கூடுதல் பொறுப்பு தரப்பட்டு உள்ளது. ஏற்கனவே, பாடநுால் கழக செயலராக இருந்த பிச்சைக்கு, கூடுதல் பொறுப்பு அளித்த பின்னரே, முழு பொறுப்பு தரப்பட்டது. அதே போல், ராமேஸ்வர முருகனுக்கும் விரைவில் முழு பொறுப்பு அளிக்கப்படும் என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.-

No comments:

Post a Comment