சென்னை : பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வு மூலம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். இதில், 3 சதவீதம் மட்டும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் உதவி மற்றும் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இதையடுத்து, உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளில், 2016 ஜன., 1ம் தேதிப்படி, பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதில், 2004 டிச., 31 வரை பணியில் சேர்ந்த, 30 அதிகாரிகள், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற உள்ளனர்.
No comments:
Post a Comment