விளையாட்டு பல்கலை துணைவேந்தர் மூர்த்தி, சென்னையில் நேற்று அளித்த பேட்டி: விளையாட்டு பல்கலை பட்டமளிப்பு விழா, நாளை, கவர்னர் தலைமையில், ராஜ்பவனில் நடக்கிறது. இதில், பல்கலை மற்றும்அதன், 11 உறுப்புக் கல்லுாரிகளில் படித்த, 2,308 மாணவ, மாணவியரில், 161 பேர் பட்டம் பெறுகின்றனர்.
தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலையை, '12 பி' அந்தஸ்துக்கு உயர்த்தும், மத்திய அரசின் ஆய்வு முடிந்து விட்டது. 12 பி அங்கீகாரம் கிடைத்ததும், கிராம பள்ளி மாணவ, மாணவியரை தத்தெடுத்து, அவர்களுக்கு அறிவியல் ரீதியாக பயிற்சி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment