Pages

Tuesday, March 29, 2016

இன்ஜி., விண்ணப்பம் எப்போது?ஒருங்கிணைப்பு குழு இன்று ஆலோசனை.


இன்ஜி., படிப்புக்கான விண்ணப்ப வினியோகம் எப்போது என்பது குறித்து, இன்று நடக்கும் இன்ஜி., மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், ஆலோசனை நடத்தப்பட உள்ளது.அண்ணா பல்கலை இன்ஜி., மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம், உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா தலைமையில், தலைமை செயலகத்தில், இன்று காலை நடக்கிறது.


இதில், பல்கலை துணைவேந்தர் ராஜாராம், மாணவர் சேர்க்கை செயலர் இந்துமதி, தொழில்நுட்பக் கல்வி இயக்கக கமிஷனர்மதுமதி, கல்லுாரிகள் இணைப்பு பிரிவு இயக்குனர் மதுசூதனன், 'டான்செட்' நுழைவுத்தேர்வு இயக்குனர் மல்லிகா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.கடந்த ஆண்டில், மே, 6ம் தேதி, விண்ணப்ப வினியோகம் துவங்கியது. இந்த ஆண்டு, சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், ஏப்ரல் இறுதி வாரம் துவங்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட உள்ளன. விண்ணப்ப விலையில் மாற்றம் இருக்காது என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment