பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கும் வசதி தொடக்கம்.
பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைக்கல்வி மையத்தில் பயிலும் மாணவர்கள் தேர்வு விண்ணப்பத்தினை இணைய வழியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் வசதி பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை தொடங்கப்பட்டது.தொலைக்கல்வி மையத்தில் நடைபெற்ற விழாவில் துணைவேந்தர் வெ.மா. முத்துக்குமார் மேற்கண்ட வசதியினைதொடக்கி வைத்து பேசியதாவது:
கடந்த பருவத்தின்போது தொலைக்கல்வி மையத்தில் இணைய வழியாக நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி தொடங்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பயனுற்றனர்.
தற்போது தொலைக்கல்வி மைய மாணவர்களுக்காக இணைய வழியாக தேர்வு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏப்ரல் பருவத்தில் பயிலும் 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைவர். மேலும், வரும் கல்வியாண்டு (2016-2017) முதல் இணைய வழியாக மாணவர் சேர்க்கை முறையினை தொலைக்கல்வி மையம் அறிமுகப்படுத்தவுள்ளது என்றார் அவர். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் சி. திருச்செல்வம், தொலைக்கல்விமைய இயக்குநர் பெ.கி. மனோகரன், தேர்வாணையர் (பொறுப்பு) இரா. திருமுருகன், துணை தேர்வு நெறியாளர் அ. சிவகாமி உடனிருந்தனர்.
No comments:
Post a Comment