Pages

Tuesday, March 22, 2016

பாடப்புத்தகத்தில் இல்லாத, தவறான கேள்விகள்: பிளஸ்-2 வேதியியல் தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் - அரசு தேர்வுத்துறைக்கு ஆசிரியர்கள் வேண்டுகோள்


வேதியியல் தேர்வில் பாடப்புத்தகத்தில் இல்லாத கேள்விகளும் தவறான கேள்வி களும் கேட்கப்பட்டிருப்பதால் அவற்றுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறைக்கு ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரி யர் கழக மாநிலத் தலைவர் கே.பி.ஓ.சுரேஷ், மாநிலப் பொதுச்செயலாளர் சி.வள்ளி வேலு ஆகியோர் அரசு தேர்வுத்துறை இயக்குநரிடம் நேற்று அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-


நடந்து முடிந்த பிளஸ்-2 வேதி யியல் மற்றும் கணிதத் தேர்வு களில் வினாத்தாள்கள் மிகவும் கடினமாக இருந்தன. குறிப்பாக, வேதியியல் வினாக்களில் சில பாடப்புத்தகத்தில் இல்லாததாக வும் சில வினாக்கள் மாணவர் களை குழப்பும் வகையிலும் அமைந்திருந்தன. எனவே, ஒட்டுமொத்த மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் விடைத்தாள் திருத்தும்போது, தேர்ச்சி வீதத்தைப் பாதுகாக்கும் வகையில், திட்டமிட்ட வேண்டு கிறோம்.

வேதியியல் வினாத்தாளில், வினா எண் 18 (ஏ வரிசை), வினா எண் 17-பி (பி வரிசை) பாடப்புத்த கத்தில் இருந்து வெளியே கேட்கப் பட்டுள்ளது. எனவே, இந்த கேள் விக்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும். அதேபோல் 10 மதிப் பெண் வினா பகுதியில் வினா எண் 64 (ஏ) கேள்விக்கு பாடப் புத்தகத்தில் 2 வரிகளில் மட்டுமே பதில் உள்ளது. மாணவர்கள் இந்த கேள்வியை 5 மதிப்பெண் கேள்வியாக நினைத்து சரிவர எழுதியிருக்க மாட்டார்கள். எனவே இந்த கேள்விக்கு விடை யளிக்க முயற்சி செய்திருந்தாலே 5 மதிப்பெண் வழங்க வேண்டும். அதேபோல், வினா எண் 70 (பி)-யில் தொகுதி எண் ரோமன் எண்ணில் அச்சிடப்பட்டுள்ளதால் மாணவர்கள் குழப்பத்துக்கு ஆளாகி வேறு பதிலை எழுதியிருக்க வாய்ப்புள்ளது. இந்த கேள்விக்கும் விடையளிக்க முயற்சித்திருந்தாலே 5 மதிப்பெண் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

தேர்வுத்துறை இயக்குநர் அலு வலகத்தில் மனுவை அளித்து விட்டு வெளியே வந்த மாநிலத் தலைவர் சுரேஷ் நிருபர்களிடம் கூறுகையில், பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ல் முடிவடைகிறது. தேர்வு முடிவடைதற்குள் ஏற்கெனவே நடந்து முடிந்த தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்த ஆரம்பித்துவிட்டனர். தேர்வு முடிவடைவதற்குள் விடைத்தாள் திருத்தும் பணியை தொடங்குவது தேர்வு நடைமுறைகளை பாதிப் பதாக உள்ளது. எனவே, ஒட்டு மொத்தமாக அனைத்து தேர்வு களும் முடிவடைந்த பின்னரே விடைத்தாள்களை திருத்த தொடங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment