இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான, ஒருங்கிணைந்த பொது நுழைவு தேர்வான ஜே.இ.இ., தேர்வுக்கான, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, ஐ.ஐ.ஐ.டி., தேசிய கல்வி நிறுவனமான, என்.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.டி., போன்றவற்றில் சேர, ஜே.இ.இ., தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இதில், ஐ.ஐ.டி.,க்கு மட்டும், ஜே.இ.இ., மெயின் மற்றும், அட்வான்ஸ் என, இரண்டிலும் தேர்ச்சி பெற வேண்டும்.
ஐ.ஐ.டி., மெயின் தேர்வு, ஏப்ரலில் நடக்க உள்ளது. அதற்கான, &'ஹால் டிக்கெட்&' நேற்று வெளியிடப்பட்டது. மாணவர்கள் தங்களின் விண்ணப்ப எண் மற்றும், &'பாஸ்வேர்ட்&' மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.
No comments:
Post a Comment