தேர்தல் பணியில் சிறுவர்களை பயன்படுத்தினால், குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ், அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்படும்' என்று தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, மாவட்ட தேர்தல்
அதிகாரிகளுக்கு அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:வட மாநிலத்தில், குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தி, ஓட்டுச்சாவடி இயந்திரங்களை வாகனங்களில் ஏற்றிய சம்பவம்
சர்ச்சையை ஏற்படுத்தியது.எனவே, இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் கண்காணிக்க வேண்டும். தேர்தல் பணியில் எக்காரணத்தைக் கொண்டும் குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தியது தெரிய வந்தால், அந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தண்டனை வழங்கப்படும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டு
உள்ளது.
No comments:
Post a Comment