Pages

Saturday, March 12, 2016

அரசியல் கட்சிகளுக்கு சாதகமாக அரசு ஊழியர்கள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை; ராஜேஷ் லக்கானி எச்சரிக்கை


சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு சாதகமாக அரசு ஊழியர்கள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குட்டிக்கதை

சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி பொறியியல் கல்லூரியில், வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பேசியதாவது:-


10 ஆண்டுகளுக்கு முன்பு வாசித்த குட்டிக்கதை ஒன்று சில தினங்களுக்கு முன்பு ஞாபகத்துக்கு வந்தது. அதை உங்களுக்கு கூறி, கேள்வி ஒன்றை கேட்க விரும்புகிறேன். அதற்கு நீங்கள் பதிலளிக்கவேண்டும்.

கிடைக்கும் வாய்ப்பு

ஒருவர் கடன் வாங்கியிருந்தார். அதற்கான வட்டியைக் கட்டமுடியாமல் தவித்தார். எனவே கடன் கொடுத்தவர் அவரிடம் வந்து, உங்களால் வட்டியையும் அசலையும் திருப்பித் தர முடியவில்லை. எனவே உங்களின் 20 வயது மகளை எனக்குத் திருமணம் செய்து வையுங்கள் என்று கூறினார்.

ஆனால் தகப்பனுக்கு தர்மசங்கடமாக இருந்தது. 50 வயதுடையவருக்கு 20 வயதுடைய மகளை எப்படி திருமணம் செய்து கொடுப்பதென்று தயங்கினார். எனவே கடன் கொடுத்தவர், அந்த கடனாளிக்கு மற்றொரு வாய்ப்பு ஒன்றைக் கொடுத்தார். ஒரு பையில் கருப்புக் கல்லும், வெள்ளைக் கல்லும் வைக்கப்பட்டு இருக்கும். அதற்குள் உங்கள் மகள் கைவிட்டு ஒரு கல்லை எடுக்க வேண்டும்.

நோட்டாவும் ஒரு வாய்ப்பு

கருப்புக் கல்லை எடுத்தால் என்னை திருமணம் செய்ய வேண்டும். வெள்ளைக் கல் வந்தால் என்னை திருமணம் செய்ய வேண்டாம். கடனும் தள்ளுபடி ஆகிவிடும் என்றார். எனவே கடனில் இருந்து தப்பிப்பதற்கு ஒரு பாதியளவு வாய்ப்பு கிடைத்திருக்கிறதே என்று கடனாளி மகிழ்ச்சி அடைந்தார். அதற்கு ஒப்புக் கொண்டார்.

இதுபோன்ற வாய்ப்பை தேர்தல் கமிஷனும் உங்களுக்கு வழங்கியுள்ளது. நீங்கள் யாருக்கு ஓட்டுபோட விரும்பவில்லை என்றாலும் கூட, நோட்டா என்ற ஒரு வாய்ப்பை ஓட்டளிப்பதற்காக வழங்கப்பட்டிருக்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

உங்கள் முடிவு என்ன?

ஆனால் கடன் கொடுத்தவர்கள் எப்போதுமே விட்டுக் கொடுத்துவிடுவதில்லை. எனவே, சமயம் பார்த்து அந்தப் பையில் 2 கருப்பு கற்களைப் போட்டுவிட்டார். இதை யாரும் கவனிக்கவில்லை என்றாலும் அந்தப் பெண் பார்த்துவிட்டார்.

இப்போது நீங்கள் அந்த பெண்ணின் இடத்தில் இருந்தால் என்ன செய்வீர்கள் என்று அங்கிருந்த மாணவிகளிடம் ராஜேஷ் லக்கானி கேட்டார்.

பாராட்டு

அப்போது நெய்வேலியைச் சேர்ந்த லாவண்யா என்ற மாணவி எழுந்து, “அந்தப் பெண் தன்னையும், தனது தந்தையையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்கு, சாதுர்யமாக சிந்தித்து, ஒரு கல்லை எடுத்து யாருடைய கண்ணுக்கும் தெரியாதபடி தூர வீசிவிட்டாள். மற்றவர்கள் வந்து அந்த பையை பார்த்தனர். அங்கு கருப்புக் கல் இருந்தது. அப்படியானால், அந்தப் பெண் முதலில் எடுத்து தூர வீசியது வெள்ளைக் கல்தான் என்று முடிவு செய்தனர். வெள்ளைக் கல்லை எடுத்தால், கடனை திருப்பிச் செலுத்தவும் வேண்டாம், கடன் கொடுத்தவரை திருமணமும் செய்ய வேண்டாம் என்பதால், தன்னை காப்பாற்றியதோடு தந்தையையும் காப்பாற்றி விட்டார்’’ என்று பதிலளித்தார். அந்த மாணவியை ராஜேஷ் லக்கானி வெகுவாகப் பாராட்டினார்.

வேலையை ஒதுக்குங்கள்

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ராஜேஷ் லக்கானி கூறியதாவது:-

நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்கவேண்டும் என்று ஆணையம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மே 16-ந் தேதி நடைபெறும் தேர்தலில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்கவேண்டும்.

எந்த வேலையில் இருந்தாலும் அதனை ஒதுக்கி வைத்துவிட்டு ஜனநாயக கடமையை செய்ய வாக்களிக்கவேண்டும். இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய ஆணையம் எல்லா முயற்சிகளையும் செய்துவருகிறது.

குறைவான வாக்குப்பதிவு

தமிழகத்தில் மொத்தம் 65 ஆயிரத்து 616 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் கடந்த 2 தேர்தல்களில் எந்தெந்த வாக்குச்சாவடிகளில் வாக்குகள் குறைவாக பதிவாகி இருக்கிறது என்று கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

அங்கு வாக்குப்பதிவு குறைந்ததற்கு காரணம் என்ன? என்று கண்டறியப்படும். அந்த காரணங்களை களைந்து அத்தகைய வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை அதிகரிப்பதற்கு குழு அமைக்கப்படும். அந்த குழுவினர் ஓட்டுப்போடுவதின் முக்கியத்துவம் குறித்து அந்த பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அரசு ஊழியர்கள்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 90 சதவீத எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

அரசியல் கட்சிகளுக்கு சாதகமாக

No comments:

Post a Comment