Pages

Saturday, March 12, 2016

கோவையில் பாஸ்போர்ட் முகாம் வருகிற 19–ந் தேதி நடைபெறுகிறது


கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.சசிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் பாஸ்போர்ட் முகாம் பீளமேடு பாஸ்போர்ட் சேவை மையத்தில் வருகிற 19–ந்தேதி நடக்கிறது. இந்த முகாமில் கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதில் கலந்துகொள்பவர்கள் www.https://passportindia.gov.in என்ற ஆன்லைன் முகவரியில் விண்ணப்பித்து முன்பதிவு செய்ய வேண்டும்.விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வருகிற 14–ந் தேதி பகல் 1.30 மணிக்கு பின்னர் பரிசீலனை செய்யப்பட்டு, முகாமில் கலந்துகொள்பவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முன்பதிவு செய்தவர்கள் மட்டும் முகாமில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இவர்களுடைய விண்ணப்பங்கள் முகாமில் பரிசீலனை செய்யப்பட்டு போலீஸ் விசாரணைக்கு பின்னர் பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப் படும். பாஸ்போர்ட் முகாமில் தட்கல் பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட மாட்டாது.இவ்வாறு மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சசிகுமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment