மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1992ம் ஆண்டு போடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதம், கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 44 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில், 29 சுங்கச் சாவடிகளில் தனியாரும், 12 சுங்கச் சாவடிகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் கட்டணம் வசூலிக்கின்றன. இந்த சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து ஆண்டிற்கு ஒரு முறை 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் 26 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழகத்தில் சூரப்பட்டு (திருவள்ளூர்), வானகரம்(திருவள்ளூர்), பரனூர்(விழுப்புரம்), ஆத்தூர்(சேலம்), கிருஷ்ணகிரி, சாலைபுதூர்(தூத்துக்குடி), பள்ளிகொண்டா (வேலூர்), வாணியம்பாடி(வேலூர்), எட்டூர் வட்டம்(நெல்லை), கப்பலூர்(நெல்லை), நாங்குநேரி(நெல்லை), புதுக்கோட்டை, சிட்டம்பட்டி(திருச்சி), பூதக்குடி(மதுரை), லெம்பலாக்குடி(புதுக்கோட்டை), லட்சுமணப்பட்டி (புதுக்கோட்டை), ஸ்ரீபெரும்புதூர்(காஞ்சிபுரம்), சென்னசமுத்திரம்(காஞ்சிபுரம்) ஆகிய 18 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி 64 கி.மீ நீளமுள்ள சாலைகளுக்கு ஒரு தடவை செல்ல 75லிருந்து 85 ஆகவும், லாரி, ஆம்னி பஸ் 255லிருந்து 280 ஆகவும். கார் போன்ற இலகுரக வாகனங்களுக்கு 120லிருந்து 135 ஆகவும் உயருகிறது.
No comments:
Post a Comment