பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வின் முதல் நாளான, நேற்று வினாத்தாள் எளிமையாக இருந்தது. ஆனால், 'ப்ளூ பிரின்ட்' படி கேட்க வேண்டிய திருக்குறள் கேள்வி இடம் பெறவில்லை.தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. இதை, 10.72 லட்சம் பேர் எழுதினர். முதல் நாளான நேற்று, வினாத்தாள் மிக எளிமை யாகவே இருந்தது. நன்றாக படிக்கும் திறனுள்ள மாணவர்கள், 100 மதிப்பெண் பெற முடியும் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
வினாத்தாளில் மொத்தம், 100மதிப்பெண்களுக்கு, சாய்ஸ் அடிப்படையில், 49 வினாக்கள்இடம் பெற்றன. வினாக்களை பொறுத்தவரை, எளிதாக விடையளிக்கும் வகையிலும், குறிப்பிட்ட நேரத்துக்கு, 30 நிமிடங்கள் முன் முடிக்கும் வகையிலும் எளிமையாகவேஇருந்தன.
சில கேள்விகள், 'ப்ளூ பிரின்ட்'க்கு மாறாக அமைந்திருந்தன.அதாவது, மனப்பாட பாட்டு பகுதியில், ஆறு மூன்று மதிப்பெண்ணுக்கான வாழ்த்துப் பாடல், ஆறு மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்டிருந்தது. அதனால், மாணவர்களுக்கு, மூன்று மதிப்பெண்கள் கூடுதலாக கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. எட்டு மதிப்பெண்ணுக்கான நெடுவினாவில், செய்யுளில் இரண்டு வினாக்களில், ஒன்று கண்டிப்பாக திருக்குறள் கொடுக்கப்பட்டு, அதன் விளக்கத்தை மாணவர்கள் எழுத வேண்டும். ஆனால், நேற்றைய கேள்வித்தாளில் நெடுவினாவில், திருக்குறளே இடம்பெறவில்லை. அதனால், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். திருக்குறளுக்கு பதில், கம்ப ராமாயணமும், சீறாப்புராணமும் இடம் பெற்றது.
No comments:
Post a Comment