Pages

Saturday, March 12, 2016

அரசு பள்ளிகள்தான் தமிழை வளர்த்து வருகின்றன: சகாயம் பேச்சு


மதுரை பாத்திமா கல்லூரியில் இன்று, கல்லூரி தின விழா நடந்தது. இதில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:–அரசு பள்ளிகள்தான் தமிழை வளர்த்து வருகிறது. ஏழை, எளிய மாணவ–மாணவிகளுக்கு அது கடைசி நம்பிக்கையாகவும் இருந்து வருகிறது.நான் கிரானைட் வழக்கை விசாரிக்கும் போது நள்ளிரவில் சுடுகாட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது உங்களை ஆவிகள் ஏதும் செய்யவில்லையா? என்று கேட்டார்கள்.ஆவிகளால் எனக்கு எந்த தொந்தரவும் இல்லை. ஆனால் சில பித்தலாட்ட பாவிகளால்தான் எனக்கு அச்சம் ஏற்பட்டது. நான் கிராமத்து இளைஞர்களை சந்திக்கும் போதெல்லாம் அவர்களது ஆங்கில அறிவை வளர்க்க வேண்டும் என்பதற்காக அவர்களுடன் ஆங்கிலத்தில் உரையாடும் பழக்கத்தை கொண்டுள்ளேன்.மாணவர்கள் எந்த ஒரு செயலை செய்தாலும் பயமின்றி – சுதந்திரமாக முடிவு எடுத்தால் வெற்றி என்ற இலக்கை அடைய முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment