2016-17ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். அதன் சிறப்பு அம்சங்கள் வருமாறு:
* வரி சீர்திருத்தம் கொண்டு வருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
* நிதிக் கொள்கை குழு அமைக்க ஆர்பிஐ சட்டம் திருத்தப்படும்.
* புதிதாக நிறுவனம் தொடங்குபவர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு வரி விடுமுறை.
* தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க மையம் உருவாக்கப்படும்.
* வருமான வரி விலக்கிற்கான வீட்டு வாடகைத் தொகை கழிவு 24 ஆயிரம் ரூபாயிலிருந்து 60 ஆயிரமாக உயர்வு.
* 60 சதுர மீட்டர் குறைவான பெரிய வீடுகளுக்கு சேவை வரியில் விலக்கு அளிக்கப்படும்.
* நாடு முழுவதும் 3 ஆயிரம் குறைந்த விலை மருந்தகங்கள் உருவாக்கப்படும்.
* வருமான வரிச் சலுகையால் ஒரு கோடி பேர் பயன் பெறுவர்.
* வீட்டுக் கடனுக்கு செலுத்தும் வட்டியில் மேலும் 50 ஆயிரம் ரூபாய் வரை கழிவு அனுமதிக்கப்படும்.
* ஆபரணங்கள், ஆயத்த ஆடைகள் தயாரிப்பு துறையில், கலால் வரி விதிப்பில் மாற்றம்.
* பிரதமர் முத்ரா வங்கி திட்டத்திற்கு ரூ.1,80,000 கோடி நிதி ஒதுக்கீடு.
* இபிஎஃப் திட்டத்தில் இணையும் புதிய தொழிலாளர்களுக்கு 8.3 விழுக்காடு மத்திய அரசு பங்களிப்பு அளிக்கும்.
* ரூ.3 லட்சம் கிடைக்கும் வகையில் மூத்த குடிமக்களுக்கு கூடுதல் காப்பீடு திட்டம்.
* அணுசக்தி திட்டத்துக்கு ரூ.3000 கோடி நிதி ஒதுக்கீடு.
* தொழில் தொடங்குவதை எளிதாக்கும் வகையில் கம்பெனி சட்டத்தில் திருத்தம்.
* உணவு பதப்படுத்தும், தயாரிக்கும் தொழிலில் அந்திய நோடி முதலீட்டை அனுமதிக்க திட்டம்.
* அரசு பொதுத்துறை வங்கிகளுக்கு கூடுதல் மூலதனமாக ரூ.25000 கோடி வழங்கப்படும்.
* 5 லட்சம் ரூபாய்க்கு குறைவான வருவாய் கொண்டவர்களுக்கு வரிச்சலுகை.
* வரி வசூலிப்பை எளிமையாக்கவும், அதிகமாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* வருமான வரி விலக்கிற்கான வீட்டு வாடகைத் தொகை கழிவு, ரூ.24,000 லிருந்து ரூ.60000 ஆக உயர்வு
* வருமான வரிக் கழிவு ரூ.2000யில் இருந்து ரூ.5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* கிராம பஞ்சாயத்துகளுக்கும், நகராட்சிகளுக்கும் சென்ற ஆட்சியை விட 225 சதவீதம் அதிக நிதி ஒதுக்கீடு.
* மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும்.
* குரு போபிந்த் சிங்கின் 300வது பிறந்தநாள் மற்றும் தீன் தயாள் உபாத்யாவின் பிறந்தநாளை கொண்டாட ரூ100 கோடி ஒதுக்கீடு.
* ஊரக ஏழைக் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு வழங்கும் புதிய சுகாதார திட்டம் செயல்படுத்தப்படும்.
* அனைத்து குடும்பத்திற்கும் ஒரு லட்சம் காப்பீடு வழங்கும் திட்டத்திற்கு ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
* இந்தியாவில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை சந்தைப்படுத்த 100 விழுக்காடு அந்திய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும்.
* 75 லட்சம் குடும்பங்கள் சமையல் எரிவாயு மானியத்தை கைவிட்டுள்ளன.
* உள்ளாட்சித்துறைக்கு ரூ.87,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* சாலைப் போக்குவரத்து துறை மற்றும் ரயில்வே துறைக்கு ரூ.2.80 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 50 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு மாநில நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தப்படும்.
* சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கு ரூ.55,000 கோடி ஒதுக்கீடு.
* 10,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
* 2016-17 ல் 50,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாநில நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்படும்.
* தேசிய திறன் மேம்பாட்டு திட்டத்தில் 76 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
* புதிதாக ரூ.1700 கோடியில் 1500 திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.
* அடுத்த 3 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு வழங்க இலக்கு.
* பிரதம மந்திரி ஊரகச் சாலைகள் திட்டத்திற்கு ரூ.19000 கோடி ஒதுக்கீடு.
* முடங்கி கிடந்த 85 சதவீத சாலைத் திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளன.
* டிஜிட்டல் முறையில் கல்வி போதிக்கும் வகையில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு 2 திட்டங்கள்
* 6 கோடி குடும்பங்கள் பலன் அடையும் வகையில் இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
* உலகத் தரத்தில் 10 அரசு கல்வி நிலையங்களும், 10 தனியார் கல்வி நிலையங்களும் உருவாக்கப்படும்.
* உயர் கல்விக்கான நிதியாக ரூ.3000 கோடி ஒருக்கீடு செய்யப்படுகிறது.
* 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்கும் வகையில் கொள்கை உருவாக்கப்படும்.
* 2018 மே மாதத்திற்குள் இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* 3 ஆண்டுகளில் 5 லட்சம் ஏக்கர் நிலம் இயற்கை விவசாயத்தின் கீழ் கொண்டு வரப்படும்.
* சரியானவர்களுக்கு மானியம் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக ஆதார் அடையாள அட்டை வழங்கும் திட்டம் தொடரும்.
* சிறுநீரகம் செயலிழப்பு ஏற்பட்டவர்களுக்கு டயாலிசிஸ் வசதியை ஊரகப் பகுதிகளுக்கும் வழங்க புதிய திட்டம்.
* உள்ளாட்சித்துறைக்கு ரூ.87,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 14வது நிதிக்குழுவின் பரிந்துரையின் படி கிராம பஞ்சாயத்துகளுக்கு 2.87 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* ரூ.38,500 கோடி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ஒதுக்கீடு.
* கிராமங்களை இணைக்கும் வகையில் 2.25 லட்சம் கிலோ மீட்டருக்கு சாலைகள் அமைக்கப்படும்.
* விவசாய திட்டங்களுக்கு கடந்த நிதியாண்டில் 8.5 லட்சம் கோடி, நடப்பு நிதியாண்டில் ரூ.9 லட்சம் கோடி ஒதுக்கீடு.
* ஏழை குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதற்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* மத்திய நிதிநிலை அறிக்கையில் விவசாயத்துறைக்கு ரூ.35,984 கோடி நிதி ஒதுக்கீடு.
* நீர் பாசனத்தை மேம்படுத்த நபார்டு வங்கி மூலம் ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* பாசன வசதிகளை மேம்படுத்தும் வகையில் அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.
* பரம்பரகட் கிரிசி விகாஷ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் 5 லட்சம் ஏக்கர் நிலங்களில் இயற்கை வேளாண்மை உருவாக்கப்படும்.
* இந்தியாவில் உள்ள அனைவரும் பலன் அடையும் வகையில் மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும்.
* பிரதம மந்திரி பயீர்க்காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த ரூ.5,500 கோடி ஒதுக்கீடு.
* 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்கும் வகையில் கொள்கை உருவாக்கப்படும்.
* 3 ஆண்டுகளில் 5 லட்சம் ஏக்கர் நிலம் இயற்கை விவசாயத்தின் கீழ் கொண்டு வரப்படும்.
* பிரதம மந்திரி ஊரக சாலைகள் திட்டத்திற்கு 19 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக உள்ளதாக உலக பொருளாதார அமைப்புகள் பாராட்டி உள்ளன.
* நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவிகிதமாக உள்ளது.
* அந்நிய செலவாணி கையிருப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு 350 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
* கிராமப்புற மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கு அதிக செலவிட அரசு முன்னுரிமை.
* வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கத் திட்டம்
* விவசாயிகளின் வருமானம் 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கப்படும்
* மத்திய பட்ஜெட்டில் விவசாயத்துக்கு ரூ.35,984 கோடி ஒதுக்கீடு
* 28.5 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு பாசனத்தின் கீழ் கொண்டு வரப்படும்
* வேளாண் மற்றும் விவசாயிகள் நலன், ஊரக வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்துகிறது.
* விவசாயிகளுக்கு வருமான வரி உத்தரவாதத்தையும் வழங்க வேண்டும்.
* இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.
* ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை கொண்டு வர மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
No comments:
Post a Comment