நாடு முழுவதும் அனைத்து அவசர அழைப்புகளுக்கும் எண் 112ஐ அறிமுகம் செய்யலாம் என தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரையை தொலைத்தொடர்பு கமிஷன் ஏற்றுள்ளது. இது. ஒருசில மாதங்களில் நடைமுறைக்கு வர உள்ளது. இந்தியாவில் தற்போது காவல்துறை உதவிக்கு 100, மருத்துவ உதவிக்கு 108, மேலும் 101, 102 என பல்வேறு எண்கள் அவசர கால அழைப்புகளுக்காக செயல்பட்டு வருகிறது. ஆனால் அமெரிக்காவில் எந்த ஒரு அவசர அழைப்பாக இருந்தாலும் 911, இங்கிலாந்தில் 999 போன்ற எண்களை அவசர உதவிக்காக செயல்படுத்தி வருகின்றன.
எனவே இந்தியாவிலும் தனித்தனியாக காவல், தீ அணைப்பு, மருத்துவம், விபத்து, அவசர கால உதவி போன்றவற்றிற்கு இருப்பதை பற்றி ஒரே எண்ணாக அறிவிக்கலாம் என்று டிராய் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதற்காக 112 என்ற எண்ணை டிராய் பரிந்துரை செய்திருந்தது.
தற்போது பயன்பாட்டில் உள்ள அவசர கால உதவி எண்களை அப்படியே இரண்டாம் நிலை எண்களாக மாற்றி, அதன் மூலம் அழைத்தாலும் 112க்கு செல்வது போல மாற்றலாம் எனவும் இந்த பரிந்துரையில் குறிப்பிட்டிருந்தது. இதை தொலைத்தொடர்பு கமிஷன் ஏற்றுள்ளது.
இதுகுறித்து தொலைத்தொடர்பு துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘அனைத்து அவசர உதவிக்கும் 112 என்ற எண்ணை அமல்படுத்த வேண்டும் என்று டிராய் பரிந்துரைத்திருந்தது. இதை தொலைத்தொடர்பு கமிஷன் ஏற்றுள்ளது. இதற்கான வரைவு அறிக்கையை தொலைத்தொடர்பு துறை தற்போது தயாரித்து வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஒப்புதலுக்கு பிறகு நடைமுறைக்கு வரும்’’ என்றார். செல்போனில் அழைப்பு வசதி நிறுத்தப்பட்டிருந்தாலும், வேறு வகையில் தடை செய்யப்பட்டிருந்தாலும், எந்த சூழலிலும் இந்த 112ஐ எண்ணை மட்டும் அழைக்கும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என டிராய் பரிந்துரையில் வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment