Pages

Saturday, March 26, 2016

இன்ஜி., கல்லூரிகளுக்கு முன்கூட்டியே தேர்வு.


சட்டசபை தேர்தலால், அனைத்து பல்கலைகளிலும் முன்கூட்டியே தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. மே மாதம் முதல் வாரத்திற்குள் தேர்வுகளை முடிக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.தமிழக சட்டசபை தேர்தல் மே, 16ல் நடக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

'மே முதல் வாரத்திற்குள் கல்லுாரி மற்றும் பல்கலை தேர்வுகளை முடித்து, கல்லுாரி கட்டடங்களை தேர்தல் பணிக்கு ஒப்படைக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியுள்ளதால், அதன்படி செயல்பட தமிழக அரசும்உத்தரவிட்டுள்ளது.


எனவே, அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 550 இன்ஜி., கல்லுாரிகள், 40 ஆர்கிடெக் கல்லுாரிகள்; தொழில்நுட்ப கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள, 100க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லுாரிகள்; கல்லுாரி கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள, 1,000க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், முன்கூட்டியே செமஸ்டர் தேர்வுகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.வழக்கமாக, மே இறுதி வாரம் வரை, செமஸ்டர் தேர்வுகள் நடக்கும். ஆனால், இந்த முறை மே, முதல் வாரத்திற்குள் தேர்வுகளை முடித்து விடுமுறை விடப்பட உள்ளது. அதற்காக, பாடங்களை விரைந்து முடிக்க, பேராசிரியர்களுக்கு கல்லுாரி நிர்வாகங்கள்உத்தரவிட்டுள்ளன.

No comments:

Post a Comment