தமிழக பி.எட்., கல்லுாரிகளில் வகுப்புகள் துவங்கி, ஆறு மாதமாகியும் பாடத்திட்டம் தெரியாமல், மாணவர்கள், ஆசிரியர்கள் தவிக்கின்றனர். உயர்கல்வித் துறையின் அலட்சியத்தால், பாடத்திட்டம் முழுமை செய்யப்படவில்லை என, மாணவர்கள் குற்றம் சாட்டிஉள்ளனர்.ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கட்டுப்பாட்டின் கீழ், மாநிலம்முழுவதும், 690 பி.எட்., கல்லுாரிகள் உள்ளன.
இவற்றில், இந்த ஆண்டு முதல், பி.எட்., படிப்பு, ஓராண்டில் இருந்து,இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது.
என்.சி.டி.இ., உத்தரவு:
அதே போல், இரண்டு ஆண்டு படிப்பில்புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த, மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சிலான, என்.சி.டி.இ.,உத்தரவிட்டது; பாடத்திட்டத்தின் அம்சங்களையும் மாநில அரசுகளுக்கு அனுப்பியது.இதன் அடிப்படையில், தமிழகத்துக்கு தேவையான பாடத்திட்டத்தை, கல்வியியல் பல்கலை கடந்த ஆண்டே தயாரித்தது.கல்லுாரிகள் எதிர்ப்பு:ஆனால், இதற்கு தமிழக அரசு உரிய நேரத்தில் அனுமதி அளிக்கவில்லை. செப்டம்பரில் மாணவர்களை சேர்த்த பின், அவசர அவசரமாக பாடத்திட்டத்துக்கு ஒப்புதல் பெற்று, கல்வியியல் பல்கலை வெளியிட்டது.புதிய பாடத்திட்டப்படி, முதல் ஆண்டு மாணவர்கள், ஒன்பது பாடங்களுக்கு தேர்வு எழுத வேண்டும். இதற்கு தனியார் கல்லுாரிகள் எதிர்ப்பு தெரிவித்தன.இதையடுத்து, பாடத்திட்டத்தை திருத்தும் பணியில் உயர்கல்வித் துறை ஈடுபட்டது.இதுவரை, 15 முறை பாடத்திட்டம் திருத்தப்பட்டும், இன்னும் பாடத்திட்டம் முடிவாகவில்லை என, கல்லுாரி நிர்வாகங்கள் தெரிவித்தன.இழுபறி நிலை:கல்லுாரி முதல்வர்கள் மற்றும் மாணவர்கள் கூறியதாவது:பாடத்திட்டத்தை, உயர்கல்வி அதிகாரிகள் தன்னிச்சையாக திருத்துவதால், மாணவர்களுக்கு எது தேவை, எது தேவையில்லை என, அவர்களுக்கு தெரியவில்லை.
பொதுவாக பாடத்திட்டத்தை உருவாக்கினால் அதற்கு, கல்வியாளர்கள்,கல்லுாரிகள், கல்வி நிறுவன பிரதிநிதிகள் கொண்ட குழு மூலம் கருத்து கேட்க வேண்டும்.கல்வியாளர் கருத்துகளின் படி, திருத்தம் செய்ய வேண்டும் அல்லது புதிய அம்சங்களை சேர்க்கவோ வேண்டும்.இதை கல்வியியல் பல்கலை அதிகாரிகள் செய்யாததால், பாடத்திட்டத்தை முடிவு செய்வதில் இழுபறி நிலை உள்ளது.தற்போதே, ஆறு மாதங்களாக மாணவர்களுக்கு என்ன பாடம் நடத்துவது என்று தெரியாமல் கல்லுாரிகள் தவிக்கின்றன. அடுத்த மாதம் தேர்வும் வந்து விடும்; அதற்குள் புதிய பாடத்திட்டம் கிடைத்து, பாடங்களை நடத்தி முடிக்க முடியுமா அல்லது தேர்வை தள்ளி வைக்க வேண்டுமா என, குழப்பத்தில் உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment