Pages

Monday, March 7, 2016

அனைத்து தனியார் பள்ளிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம்


தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும், காலை நேர பிரார்த்தனைக் கூட்டத்தின் போது தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பள்ளிகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவதை கட்டாயமாக்கக் கோரி முன்னாள் ராணுவ வீரர் என். செல்வதிருமலை என்பவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கௌல் மற்றும் நீதிபதி எம்எம் சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், தனியார் பள்ளிகள் தேசிய கீதம் இசைப்பதை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment