அரசு கல்லுாரி, பள்ளிகளில் ஆண்டு விழா, பட்டமளிப்பு விழா நடத்த தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதன்காரணமாக அரசு பள்ளி, கல்லுாரிகளில் ஆண்டு விழா நடத்தவும், பட்டமளிப்பு விழா நடத்தவும் தடை விதிக்கபட்டுள்ளது. விழாவாக நடத்தாமல் மாணவர்களுக்கு கல்லுாரி முதல்வர்களே பட்டங்கள் வழங்கலாம், என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment