Pages

Thursday, March 24, 2016

புதிய வண்ணத்தில் பிளஸ் 2 சான்றிதழ்


இந்த ஆண்டுக்கான, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் நவீன, '2 டி பார்கோடு' மற்றும், 'வாட்டர் மார்க்' என்ற, ரகசிய குறியீடுடன் பளிச்சிடும் வண்ணத்தில் தயாராக உள்ளது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. தேர்வு முடிவுகளை, சட்டசபை தேர்தலுக்கு முன் வெளியிட, பள்ளிக்கல்வித் துறையும் மற்றும் தேர்வுத் துறையும் திட்டமிட்டு உள்ளன.


* இந்த ஆண்டுக்கான மதிப்பெண் சான்றிதழ், பல பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக இருக்கும்

* வெயில் மற்றும் மழையால் பாதிக்கப்படாத வகையில், வழவழப்பான கனமான தாளில் தயாரிக்கப்படும்

* பச்சை நிறத்தில் குறுக்கு கட்டம் போட்ட தாளில், மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கப்படும்

* 'வாட்டர் மார்க்' என்ற ரகசிய குறியீடு, '2 டி பார்கோடு' மற்றும் மதிப்பெண் பட்டியலுக்கு தனி எண், பதிவு எண் போன்றவை இடம் பெறும்

*தமிழக அரசு முத்திரையுடன், நடப்பு ஆண்டை குறிக்கும் ரகசிய எண்ணும், சான்றிதழில் இணைக்கப்படும். இந்த சான்றிதழ் உண்மையா, பொய்யா என ஆய்வு செய்யும் வகையில், சென்னை, அண்ணா பல்கலையிலுள்ள தேர்வுத் துறையின், கணினி வழி சான்றிதழ் ஆய்வு மையத்தில், சரிபார்க்க அதிகாரம் வழங்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment