Pages

Thursday, March 3, 2016

டிஜிட்டல் கல்வியறிவு:கிராமப்புறங்களில் புதிய திட்டம் அறிமுகம்


கிராமப்புறங்களில் டிஜிட்டல் கல்வியறிவைப் பரப்பும் வகையில் புதிய திட்டம் தொடங்கப்படும்.

மத்திய பட்ஜெட்டில் இது குறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

டிஜிட்டல் கல்வியறிவைப் பரவலாக்க மத்திய அரசு ஏற்கெனவே, தேசிய டிஜிட்டல் கல்வியறிவுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதைப் பரவலாக்கத் தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.



தனது பட்ஜெட் உரையில் ஜேட்லி குறிப்பிட்டதாவது:

கிராமப்புறங்களிலும் டிஜிட்டல் கல்வியறிவு பரவச் செய்ய வேண்டும். நாட்டில் 16.8 கோடி கிராமப்புற வீடுகளில் 12 கோடி வீடுகளில் கணினி வசதி கிடையாது.

எனவே அவர்கள் டிஜிட்டல் கல்வியறிவு பெறுவது என்பது இயலாததாக உள்ளது. அதனால் அப்பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த மூன்று ஆண்டுகளில் கிராமப்புறங்களில் டிஜிட்டல் கல்வியறிவைப் பரப்பும் திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்தத் திட்டத்தின் மூலம் 6 கோடி பேர் பயனடைவார்கள். இந்தத் திட்டம் குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினி பயன்பாடு, மடிக்கணினி, டேப்லட் கணினி, ஸ்மார்ட்போன் உள்ளிட்டவற்றை முறயாகப் பயன்படுத்தத் தெரிந்திருப்பதே டிஜிட்டல் கல்வியறிவு எனப்படுகிறது.

No comments:

Post a Comment