Pages

Tuesday, March 8, 2016

தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி


சென்னையில் நேற்று, தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான, சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.
ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், தலா இரண்டு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, தலைமை தாங்கினார். தேர்தல் கமிஷனில் இருந்து வந்திருந்த அதிகாரிகள், பயிற்சி அளித்தனர்.


வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, கவனிக்க வேண்டிய சட்ட விதிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், சட்டசபை தேர்தலுக்காக, பல்வேறு புதிய சாப்ட்வேர்களை, தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்தி உள்ளது.
அவற்றின் செயல்பாடு, கம்ப்யூட்டர் மூலம் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முகாமில் கலந்து கொண்ட, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவட்டத்தில் உள்ள, மற்ற
அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பர்.
அதேபோல், சென்னையில், போலீஸ் டி.எஸ்.பி.,க்களுக்கான பயிற்சி வகுப்பும் நடந்தது. இப்பயிற்சி வகுப்பில், ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி, ஆன்லைனில் விண்ணப்பிப்போருக்கு, எப்படி ஆன்லைனில் அனுமதி வழங்குவது என, பயற்சி அளிக்கப்பட்டது.
இதேபோல் அனைத்து மாவட்டங்களிலும், பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டு
உள்ளது..

No comments:

Post a Comment