பத்தாம் வகுப்புக்கு, 15ம் தேதி பொதுத் தேர்வு துவங்கும் நிலையில், இன்று முதல் வினாத்தாள்கள், கட்டுக்காப்பு மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
இந்த தேர்வை, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். பிறமொழி மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல், தமிழ் கட்டாய பாடமாக மாறியுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, விலக்கு பெற்ற மாணவர்களுக்கு மட்டும், அவர்களது தாய்மொழியான பிற மொழியில், தேர்வு எழுதி அனுமதி உண்டு.
தேர்வுக்கான வினாத்தாள்கள், இன்று முதல் மாவட்ட வாரியாக வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன. வினாத்தாள்களை, துப்பாக்கி ஏந்திய போலீஸ் உதவியுடன் பாதுகாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வினாத்தாள் உறையின் சீலை எக்காரணம் கொண்டும் உடைக்காமலும், வினாத்தாள் முன்கூட்டியே ெவளியாகாமலும் பார்த்து கொள்ள, அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment