Monday, November 30, 2015
விடுமுறை .'' நாட்களுக்கு பதில், வேறு நாளில் பணிபுரிய வேண்டும், பணிபுரியாவிட்டால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்...
மழைக்கால விடுமுறையிலிருந்த பகுதி நேர ஆசிரியர்கள், அதற்குப் பதில், மாற்று நாட்களில் பணியாற்ற வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டமான, எஸ்.எஸ்.ஏ., இயக்குனரகக்
கட்டுப்பாட்டில், கணினி, ஓவியம், உடற்கல்வி உட்பட, பலபகுதி நேர பாடப் பிரிவுகளுக்கு, 16 ஆயிரம் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்கள் மறியல் போராட்டம்; மனு அளிக்க ஜாக்டோ முடிவு
ஆசிரியர்களின், 15 அம்ச கோரிக்கை குறித்தும், டிச., 28ம் தேதி மறியல் போராட்டம் குறித்தும், வரும் 1ம் தேதி ஜாக்டோ நிர்வாகிகள், தலைமைச் செயலகத்தில் மனு அளிக்க உள்ளனர்.
உதவி பேராசிரியர் தேர்வுபட்டதாரிகள் ஓராண்டு காத்திருப்பு
அரசு இன்ஜி., கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கு எழுத்து தேர்வு அறிவித்து ஓராண்டாகியும் தேர்வு நடத்தாததால், விண்ணப்பதாரர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
சென்னை பல்கலை தேர்வுகள் ஒத்தி வைப்பு
நடைபெற இருந்த சென்னை பல்கலை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலை துணைவேந்தர் தாண்டவன் அறிவித்துள்ளார்.
சென்னைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில் சேர கால அவகாசம் நீட்டிப்பு
சென்னைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில் சேர கால அவகாசம் நீட்டிப்பு
கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிய உத்தரவு: அரசு கல்லூரி பேராசிரியர்கள் அதிருப்தி
போலி கல்விச் சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளனரா என்பதைக் கண்டறிவதற்காக, அரசுக் கல்லூரி பேராசிரியர்களின் அனைத்துச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிய உயர் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Flash News :மழை காரணமாக பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று (30/11/2015) விடுமுறை விடப்பட்ட மாவட்டங்கள் விவரம்
தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
சென்னை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
அரியலூர், திருச்சி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
திருவாரூர், நாகை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
சென்னை பல்கலை.,தேர்வுகள் ஒத்திவைப்பு
தருமபுரி: பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
கரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
சென்னை பல்கலைக்கழகம் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சென்னை மாநிலக் கல்லூரி இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு
Saturday, November 28, 2015
TNPSC : குரூப்- 3 பணி தேர்வு பட்டியல் வெளியீடு:
டிச.14-ல்சான்றிதழ் சரிபார்ப்பு
கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர், நிலைய தீயணைப்பு அலுவலர்(நேர்காணல் உடைய பணிகள்), தொழிற்கூட்டுறவு சங்கங்களின் உதவி மேற்பார்வையாளர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை பண்டக காப்பாளர் (நேர்காணல் இல்லாத பணிகள்) ஆகிய பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த சார்நிலைப்பணிகளுக்கான எழுத் துத்தேர்வு (குரூப்-3 தேர்வு) கடந்த 4.8.2012 அன்று நடத்தப்பட்டது.
கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர், நிலைய தீயணைப்பு அலுவலர்(நேர்காணல் உடைய பணிகள்), தொழிற்கூட்டுறவு சங்கங்களின் உதவி மேற்பார்வையாளர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை பண்டக காப்பாளர் (நேர்காணல் இல்லாத பணிகள்) ஆகிய பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த சார்நிலைப்பணிகளுக்கான எழுத் துத்தேர்வு (குரூப்-3 தேர்வு) கடந்த 4.8.2012 அன்று நடத்தப்பட்டது.
92 ஆசிரியர் பணியிடம்: விண்ணப்பங்கள் வரவேற்பு
மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும், அரசு சிறப்பு பள்ளிகளில், 92 ஆசிரியர் பணியிடங்கள் உட்பட, 105 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை பல்கலை; தேர்வு தேதிகள் அறிவிப்பு
கனமழையின் காரணமாக, சென்னை பல்கலைகழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தேர்வுகள் டிசம்பர் 04ம் தேதி முதல் 14 ம் தேதி வரை நடைபெறும் என்று பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலன் கிடைக்காமல் போனால் அதற்குக் காரணம் செய்த முயற்சியின் கோளாறே தவிர, வேறு காரணமல்ல. தகுந்த முயற்சி இருந்தால் காரியம் கை கூடியே தீர வேண்டும். இதுவே நியதி. இப்படி பலனை அடையும் வரையில் இடைவிடாமல் முயற்சி செய்கிறவர்கள் உலகத்தில் மிகவும் சொற்பம்.
பள்ளிக்கல்வி - மாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பு - சேமிப்பு பழக்கத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு அருகில் உள்ள அஞ்சலகங்களில் மாணவர்களுக்கு சேமிப்பு கணக்கு துவங்கிட பள்ளிகளுக்கு அறிவுறுத்தல் - உயர்திரு பள்ளிக்கல்வி செயலர் திருமதி.சபிதா அவர்களின் செயல்முறைகள்
தேர்வு நேரத்தில் இடமாற்றம் ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி
அரையாண்டுத் தேர்வு நேரத்தில், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வருடாந்திர பணியிட மாற்றம் மற்றும் உபரி ஆசிரியர்கள் கலந்தாய்வு கடந்த மாதம் தான் முடிந்தது. ஆசிரியர்கள் புதிய இடத்துக்கு சென்று, பாடங்களை நடத்துகின்றனர்.
செய்முறை பயிற்சி தேர்வு உண்டா 10ம் வகுப்பு மாணவர்கள் குழப்பம்
அறிவியல் செய்முறை புத்தகம் வழங்காததால், அதற்கான பயிற்சி தேர்வு நடைபெறுமா என்ற குழப்பம், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.சமச்சீர் கல்வி பாடத்திட்டம் துவங்கிய பின், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் ஆய்வகத்தில், செய்முறை பயிற்சியும், செய்முறை தேர்வும் நடத்தப்படுகிறது. இதற்காக, 75 மதிப்பெண், 'தியரி'க்கும், 25 மதிப்பெண் அறிவியல் செய்முறை பயிற்சிக்கும் தரப்படுகிறது.
அறிவித்தபடி அரையாண்டுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வை முடித்து, அரையாண்டு விடுமுறை விட, பள்ளிகளுக்கு உத்தரவு
அரையாண்டுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வை ஏற்கனவே அறிவித்தபடி முடித்து, அரையாண்டு விடுமுறை விட, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 12 வேலை நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
பணிநிரவலால் பதறும் 2 ஆயிரம் ஆசிரியர்கள்: 'கவுன்சிலிங்' நடத்தப்படுமா
மாநிலம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்- மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, உபரி ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேர், கலந்தாய்வு இல்லாமல் விரைவில் பணிமாற்றம் செய்யப்பட உள்ளதால் கலக்கமடைந்துள்ளனர்.அரசு பள்ளிகளில் உள்ளதுபோல், உதவி பெறும் பள்ளிகளிலும் உபரி ஆசிரியர்களை கணக்கெடுத்து, ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள உதவிபெறும் பள்ளிகளில், பணிநிரவல் செய்யப்படுகின்றனர்.
இடை நின்ற மாணவர்களின் பட்டியல் தயாரிக்க உத்தரவு
பள்ளிகளில், 8ம் வகுப்புக்குள் படிப்பை நிறுத்திய மாணவர் பட்டியலை கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின், கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின் படி, 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், இலவசமாக, கட்டாயம் கல்வி வழங்க வேண்டும்; இதற்கு மத்திய அரசு மூலம் நிதி உதவி அளிக்கப்படுகிறது.
அரசு பள்ளிகளில் 3 வகை பயிற்சி
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச் முதல் வாரம் துவங்க உள்ளது. பிளஸ் 2 தேர்வில், நான்கு ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவர்கள், மாநில ரேங்க் பெறவில்லை; தேர்ச்சி சதவீதத்திலும், பின்தங்கினர். 10ம் வகுப்பு தேர்வில் மட்டும், மாநில ரேங்க் பெற்று, ஆறுதல் அளித்தனர்.ஒவ்வொரு ஆண்டும், 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்தும், அரசு பள்ளிகள் தேர்ச்சியில் பின்தங்குவது, பள்ளி கல்வித் துறை அதிகாரிகளுக்கு, தலை
குனிவை ஏற்படுத்தியது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களிடம் உறுதிமொழிஎழுதி வாங்கும் கல்வித்துறை
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக, மாணவர்களிடம், புதிதாக உறுதிமொழி எழுதி வாங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் முதல் வாரத்தில் பொதுத்தேர்வு நடக்க உள்ளது. இதற்காக, மாணவர்களிடம், புதிதாக உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து வாங்கி, தேர்வுத் துறைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.
Friday, November 27, 2015
இந்தியா வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது!
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தியாவில் உயர் கல்வியில் தரமானதாக திகழ்வது ஐ.ஐ.டி.க்கள்.
எட்டாம் வகுப்பு வரை, பள்ளிகளில் இடையில் நின்ற மாணவர்கள் விபரம் சேகரிப்பு!!!
எட்டாம் வகுப்பு வரை, பள்ளிகளில் இடையில் நின்ற மாணவர்கள் மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் விபரங்களை சேகரிக்க, கல்வி நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விருப்ப மொழிப்பாட மதிப்பெண்ணையும் சராசரியில் கணக்கிட முடிவு
விருப்ப மொழிப்பாட மதிப்பெண்ணையும் சராசரியில் கணக்கிட முடிவு: பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை
மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வுகளில் சிறுபான்மை(விருப்ப) மொழித்தாள் மதிப்பெண்ணையும் சராசரிகணக்கிட பள்ளிக்கல்வித்துறை ஒப்புதல் வழங்க ஆலோசித்து வருகிறது. தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகளின் 10ம் வகுப்பு தேர்வில் பகுதி ஒன்று மற்றும் இரண்டில் முறையே ஆங்கிலம், தமிழ் மொழித்தாள்கள், பகுதி 3ல் இதர பாடங்களும், 4ல் விருப்ப
(விருப்ப) சிறுபான்மை மொழிப் பாடமும் உள்ளன.
December -2015 Training programme
December Training programme
(30.11.2015)to (4.12.2015) - 5 days IED TRAINING for primary teachers
Another 5 days IED training for upper primary teachers
ஓட்டுச்சாவடி அலுவலர் பணிக்கு பட்டியல்
சட்டசபை தேர்தலில் ஓட்டுச்சாவடி அலுவலர் பணிக்கு அரசு ஊழியர், ஆசிரியர்கள் பட்டியல் தயாரிப்பு பணி நடந்து வருகிறது.தமிழகத்தில் 2016 சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளது. சில அரசியல் கட்சிகள்தேர்தல் வாக்குறுதி அளிக்க, தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.தேர்தல் கமிஷனும் ஓட்டு இயந்திரம் சரிபார்ப்பு, வாக்காளர் பட்டியல், அடையாள அட்டை வழங்கல் போன்ற பணிகளில் தீவிரம் காட்டிவருகிறது.
பாடம் முடிக்காமல் தேர்வா?
வட கிழக்குப் பருவ மழை காரணமாக, 9ம் தேதி முதல், பல்கலை, கல்லுாரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது; தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.
ஆசிரியர்கள் பி.எப்., கணக்கு மாயம் 81 அதிகாரிகளுக்கு 'நோட்டீஸ்'
மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில், ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு விவரம் காணாமல் போனதாக புகார் எழுந்துஉள்ளது.தொடக்கக் கல்வித் துறையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிபகுதிகளில், 5ம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில், 1.20 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
Thursday, November 26, 2015
அரையாண்டு தேர்விலும் விடுமுறையிலும் மாற்றமில்லை
அரையாண்டுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வை ஏற்கனவே அறிவித்தபடி முடித்து, கிறிஸ்துமஸ் விடுமுறை விட, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மழை வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 12 வேலை நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாறாக வி.ஏ.ஓ., தேர்வுக்கு வயது வரம்பு: வேலையில்லா பட்டதாரிகள் ஏமாற்றம்
பட்டதாரிகள் அரசு தேர்வு எழுதுவதற்கு வயது உச்சவரம்பு தேவையில்லைஎன்ற உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை, வி.ஏ.ஓ., தேர்வில் நடைமுறைப்படுத்தாததால், வேலையில்லா பட்டதாரிகள் ஏமாற்றமடைந்து உள்ளனர்.
அரசு ஊழியர்கள் சம்பளம் வாங்க 'ஆதார்' எண் கட்டாயம்? - இல்லாவிடில்,
'நவ., மாத சம்பளம் அளிப்பது தாமதமாகும்'
தமிழக அரசு ஊழியர்கள், நவ., மாத சம்பளம் வாங்க, 'ஆதார்' எண்ணை இணைக்க வேண்டும்' என, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.தமிழக அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களின் நவம்பர் மாத சம்பளபட்டியல், இன்று தயார் செய்யப்பட்டு, கருவூலங்களுக்கு அனுப்பப்படும்.
தமிழக அரசு ஊழியர்கள், நவ., மாத சம்பளம் வாங்க, 'ஆதார்' எண்ணை இணைக்க வேண்டும்' என, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.தமிழக அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களின் நவம்பர் மாத சம்பளபட்டியல், இன்று தயார் செய்யப்பட்டு, கருவூலங்களுக்கு அனுப்பப்படும்.
சென்னைப் பல்கலைக்கழக தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு
பலத்த மழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதைக் கருத்தில் கொண்டு, இணைப்புக் கல்லூரிகளுக்கான பருவத் தேர்வுகளை சென்னைப் பல்கலைக்கழகம் மீண்டும் ஒத்திவைத்துள்ளது.
சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கடந்த 8 ஆம் தேதி முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக பல்கலைக்கழகங்கள் பருவத் தேர்வுகளை ஒத்திவைத்தன. சென்னைப் பல்கலைக்கழகமும் நவம்பர் 12 முதல் 25 வரை நடக்க இருந்த இணைப்புக் கல்லூரிகளுக்கான பருவத் தேர்வுகளை ஒத்திவைத்தது.
இந்திய அரசிலமைப்பு சட்ட நாள்(26.11.15) கட்டுரை :-
இந்திய அரசியலமைப்புச் சட்ட வரலாறு
அரசியலமைப்புச் சட்டம் என்றால் என்ன?
அரையாண்டு தேர்வு திட்டமிட்டப்படி நடக்கும்: மாணவர்களின் விடுமுறையில் மாற்றம் இல்லை - கல்வித்துறை சுற்றறிக்கை
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை வெள்ளம் பாதிப்புக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன.ஆனாலும் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மொத்தம் 45 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இன்று திறக்கப்படவில்லை.19 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. இதில் 11 நாட்கள் பள்ளி வேலை நாட்களாகும். இயற்கையின் சீற்றத்தால் தவிர்க்க முடியாத காரணத்தால் பாதுகாப்பு கருதி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டன.இதனால் 10–ம் வகுப்பு, பிளஸ்–2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்பு போன்றவை நடத்தப்பட உள்ளன.பள்ளிகளுக்கு விடப்பட்ட தொடர் விடுமுறையை ஈடு செய்ய கல்வித்துறை அதிகாரிகள் பல்வேறு கட்டங்களாக ஆலோசனை நடத்தினர். அரையாண்டு தேர்வை தள்ளி வைக்கலாமா? மாணவர்களின் விடுமுறை நாட்களை குறைத்து வேலை நாட்களை அதிகரித்து இதனை சரி செய்யலாமா? என பரிசீலனை செய்தனர்.ஆனால் சென்னை உள்பட 6 மாவட்டங்களில் தான் மழை வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் தான் அதிகளவு பள்ளி, மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதனால் ஒட்டு மொத்த பள்ளி மாணவர்களும் தேர்வை தாமதப்படுத்துவது சரியாக இருக்காது என்ற முடிவை அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்தனர்.தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் ஒரே நேரத்தில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் வெள்ளம் பாதித்த 4 மாவட்டங்களுக்காக அரையாண்டு தேர்வை தள்ளி வைப்பது ஒட்டு மொத்த மாணவர்களின் நலனை பாதிக்கும் என்பதால் திட்டமிட்டப்படி அரையாண்டு தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வி முடிவு செய்துள்ளது.ஏற்கனவே அறிவித்துள்ள அரையாண்டு கால அட்டவணைப்படி தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதன்படி பிளஸ்–1, பிளஸ்–2 மாணவர்களுக்கு டிசம்பர் 7–ந்தேதியும், 10–ம் வகுப்பிற்கு டிசம்பர் 9–ந்தேதியும், அரையாண்டு தேர்வுகள் தொடங்கி நடத்தப்பட வேண்டும். இதே போல 9–ம் வகுப்புகளுக்கு 9–ந்தேதியும், 6 முதல் 8–ம் வகுப்புகளுக்கு 14–ந்தேதியும், இரண்டாம் பருவத்தேர்வுகளை நடத்த வேண்டும்.அனைத்து மாணவர்களுக்கும் டிசம்பர் 22–ந்தேதிகள் அரையாண்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விடுமுறை விடப்படும். அரையாண்டு விடுமுறையிலும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை வழக்கம் போல விடுமுறை விடப்பட உள்ளது.ஆனால் தற்போது விடப்பட்டுள்ள விடுமுறை நாட்களை சனிக்கிழமை கூடுதல் வேலை நாட்களாக பணியாற்ற வேண்டும். அனைத்து சனிக்கிழமைகளும் எதிர்வரும் காலங்களில் ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும்.குறிப்பாக பொதுத்தேர்வு எழுதும் 10–ம் வகுப்பு, பிளஸ்–2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் மற்றும் கூடுதலாக வகுப்பு நேரம் அதிகரிக்கப்பட்டு விடுப்பு நாட்களை ஈடு செய்ய கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
Wednesday, November 25, 2015
நோய் தடுப்பு: பள்ளிகளுக்கு உத்தரவு
பள்ளி வளாகங்களில், கிருமி நாசினி தெளித்து, நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க, பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.தமிழக, பொது சுகாதார இயக்குனர் குழந்தைசாமியின் ஆலோசனையின் படி, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் கணக்கெடுப்பு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் எத்தனை பேர் என்பது குறித்து தமிழகம் முழுவதும் தீவிரமாக கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
Tuesday, November 24, 2015
Flash News : கன மழை - 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (24.11.2015) விடுமுறை
*திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.
*நாகை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
*தூத்துக்குடி,ஒட்டப்பிராடம் வட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
*சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
*திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
*காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
கன்னியாகுமரி கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பு தமிழகம் முழுவதும் பரவலாக மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் கடந்த மாதம் (அக்டோபர்) 28-ந் தேதி தொடங்கியது.
அப்போது முதல் மாநிலம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்தது.
அண்ணா பல்கலை இணையதளத்தில் தேர்வு அட்டவணை
அண்ணா பல்கலைகழகத்தில் நவம்பர் 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற இருந்த தேர்வுகளின் புதிய தேர்வு தேதி அட்டவணை, பல்கலை இணையதளமான www.annauniv.eduல் வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் வேறு எந்த இணையதளத்தையும் பார்த்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன்’ மாணவர் சேர்க்கை பாரதியார் பல்கலை திட்டம்
பாரதியார் பல்கலையின் தொலைமுறைக் கல்விக்கூடம், ஆன்லைன் முறையிலான சேர்க்கையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
பாரதியார் பல்கலையின் தொலைமுறை கல்வி கூடத்தில், 51 இளங்கலை, 33 முதுகலை, 34 எம்.பி.ஏ., பாடப்பிரிவுகள், 31 முதுகலை டிப்ளமோ, படிப்புகள் மற்றும் எம்.சி.ஏ., எம்.எட்., பி.எட்., படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் இக்கல்வி முறையில் பயின்று வருகின்றனர். அங்கீகரிக்கப்பட்ட கல்வி மையங்கள் மற்றும் பல்கலையின் தொலைமுறைக் கல்வி கூடத்தில் நேரடியாக விண்ணப்பங்கள் பெற்று மாணவர்கள் சேர்க்கை புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், வெளியூர் மாணவர்களின் அலைச்சலை குறைக்கவும், சேர்க்கையை அதிகரிக்கும் விதத்திலும், ஆன்லைன் முறையில் மாணவர் சேர்க்கையை கொண்டு வர பல்கலை திட்டமிட்டுள்ளது. பல்கலை தொலைமுறை கல்விக்கூட அதிகாரி ஒருவர் கூறுகையில், தொலைமுறை கல்விக்கூடத்தில் கம்ப்யூட்டர் பிரிவானது உரிய மென்பொருள் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
தொலைமுறையில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி, அவர்களின் அலைச்சலை குறைக்க ஆன்லைன் மாணவர் சேர்க்கையை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்கென, எண்ட் டூ எண்ட் எனும் மென்பொருள் தேவைப்படுகிறது. புதிய துணைவேந்தர் பதவியேற்றவுடன், இதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும் என்றார்.
அரையாண்டு தேர்வு தள்ளிப்போகும் என்ற தகவலால் மாணவர்கள் குஷி
வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மட்டும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வை தள்ளி வைக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்துடன், அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களையும் குறைக்காமல் இருப்பது குறித்து, கல்வித்துறை பரிசீலனை செய்து வருகிறது. எனவே, மாணவர்கள் குஷியாகியுள்ளனர்.
பள்ளி வளாகங்களில் தேங்கிய நீரை அகற்ற உத்தரவு
பள்ளி வளாகங்களில் தேங்கியுள்ள மழை நீரை, 'பம்ப்செட்' மூலம் வெளியேற்றவும், கிருமி நாசினி மருந்து தெளிக்கவும், பொதுப்பணித் துறை மற்றும் சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் மழை குறைந்து மீட்பு பணி நடந்து வருகிறது. பள்ளி, கல்லுாரிகளில் சீரமைப்பு பணி துவங்கி உள்ளது. பள்ளி, கல்லுாரி வளாகங்களில் தேங்கியுள்ள நீரை, பொதுப்பணித்துறை மூலம் அகற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.
கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் தேசிய தரவரிசைப் பட்டியல்: அடுத்த ஆண்டு முதல் வெளியிடப்படுகிறது
பொறியியல், மேலாண்மைக் கல்லூரிகளுக்கு வெளியிடப்பட உள்ளதுபோல, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியல் (ரேங்க்) 2016-ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட உள்ளது.
வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மட்டும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வை தள்ளி வைக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன-DINAMALAR
வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மட்டும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வை தள்ளி வைக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்துடன், அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களையும் குறைக்காமல் இருப்பது குறித்து, கல்வித்துறை பரிசீலனை செய்து வருகிறது. எனவே, மாணவர்கள் குஷியாகியுள்ளனர்.
திறன் அடிப்படையில் சம்பளம்? ஏழாவது மத்திய சம்பளக் கமிஷன் பரிந்துரை
ஏழாவது மத்திய சம்பளக் கமிஷன், மத்திய அரசின் அனைத்து பிரிவு ஊழியர்களுக்கும், திறன் அடிப்படையிலான சம்பளம் வழங்க பரிந்துரைத்துள்ளது. ஏழாவது மத்திய சம்பளக் கமிஷன் அளித்த பரிந்துரைகள் விவரம்:
Monday, November 23, 2015
தேர்வு தேதிகள்; சென்னை பல்கலை.அறிவிப்பு
கனமழை காரணமாக, சென்னை பல்கலைகழகத்தில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இந்த தேர்வுகள், வரும் டிசம்பர் 01ம் தேதியிலிருந்து 07ம் தேதி வரை நடைபெறும் என்று சென்னை பல்கலைகழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7–வது சம்பள கமிஷன்: லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்களுக்கு அதிக உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பான 7–வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதில் 23 சதவீதம் வரை அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தனித்தேர்வு: விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்
பிளஸ் 2 தனித்தேர்வுக்கான விடைத்தாள் நகல்களை கோரியவர்கள் சனிக்கிழமை (நவ.21) காலை 10 மணி முதல் அவற்றைப் பதிவிறக்கம் செய்யலாம். இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
கன மழை :16 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு (23.11.2015) விடுமுறை
*விருதுநகர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.
*காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.
*சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
*கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
*பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
*அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
*தர்மபுரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*தூத்துக்குடி தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
*திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
*திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
*வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
*விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
*நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
*திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
*கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
*புதுச்சேரி,காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
இன்று முதல் 28-ந்தேதி வரை நடைபெற இருந்த என்ஜினீயரிங் மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு இன்று முதல் 28-ந்தேதி வரை நடைபெற இருந்த என்ஜினீயரிங் மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தேர்வுகள்
அண்ணா பல்கலைக்கழத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், தமிழகம் முழுவதும் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் கடந்த 12-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை ‘செமஸ்டர்’ தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 9-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் கனமழை பெய்ததால், இந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது.இந்தநிலையில், என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்வு கால அட்டவணையின்படி, திங்கட்கிழமை (இன்று)முதல் வருகிற 28-ந்தேதி வரை தேர்வுகள் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.ரத்துஇந்த நிலையில் நேற்று சென்னை உள்பட பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதையடுத்து, இன்று முதல் வருகிற 28-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட தேர்வுகளை ரத்து செய்து, அண்ணா பல்கலைக்கழகம் பதிவாளர் கணேசன் நேற்று அறிவித்தார்.
ஆசிரியர்களுக்கு பேரிடர் பயிற்சி
மாவட்ட வாரியாக, ஆசிரியர்களுக்கு பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது; சென்னையில், இன்று பயிற்சி துவங்குகிறது. தமிழக கடலோர மாவட்டங்கள், மழை, வெள்ளத்தால் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளன.
மாணவர்கள் மகிழ்ச்சி, பெற்றோர்கள் கவலை சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் 17வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை, காஞ்சி ஆகிய மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக 17வது நாளாக இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 7ம் தேதி முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது.
Saturday, November 21, 2015
மழைக்கால நோய்கள்: ஒரு பார்வை
மழை நின்றாலும் நோய் தொடரலாம். தடுப்பு நடவடிக்கைகள் அவசியம்
தமிழகத்தை,குறிப்பாக சென்னையைப் புரட்டிப் போட்டுவிட்டது மழை. உயிரிழப்புகள், பொருள் சேதங்கள் என்று பல பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது. மழை நின்ற பின்னரும் சென்னையின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் அமிழ்ந்துகிடக்கும் பல பொருட்கள் அரிப்புக்குள்ளாகி வீணாகிவிடும். பாதிப்புகள் அத்துடன் நின்றுவிடப்போவதில்லை. மழைக் கால நோய்களின் படையெடுப்பு தொடங்கும். அவற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்வது இன்றைய அவசியத் தேவை.
எட்டாம் வகுப்பு பொது தேர்வு; சான்றிதழ் வினியோகம்
2015ல் நடைபெற்ற தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு சான்றிதழ்கள், தேர்வர்களுக்கு நேரடியாக விரைவு அஞ்சல் மூலம் 23.11.2015க்குள் கிடைக்கப் பெறும் வகையில் அனுப்பப்பட்டு வருகிறது.
தினமும் 2 மணி நேரம் மொபைல் போனில் செலவிடும் இந்திய இளைஞர்கள்!
தினமும் 2 மணி நேரம் மொபைல் போனில் செலவிடும் இந்திய இளைஞர்கள்!
இந்தியா இளைஞர்கள், தினந்தோறும் 2.2 மணி நேரத்தை தங்களது மொபைல் போனில் செலவிடுவதாக டி.என்.எஸ்., நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது."டி.என்.எஸ்.,' என்ற சர்வதேச ஆய்வு நிறுவனம், சர்வதேச அளவில் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் நடத்திய ஆய்வு முடிவில், இந்தியாவிலுள்ள 16-30 வயதுடைய இளம் வயதினர்கள் தினமும் சராசரியாக 2.2 மணி நேரத்தை தங்களது மொபைல் போனில் செலவிடுகின்றனர். இவ்வாறாக ஆண்டுக்கு 34 நாட்கள் தங்கள் மொபைல் போனுக்காக நேரத்தை செலவழிக்கின்றனர். இதுவே சர்வதேச இளைஞர்கள் நாளொன்றுக்கு 3.2 மணி நேரம், அதாவது ஆண்டுக்கு 49 நாட்கள் மொபைல் போனில் நேரத்தை செலவிடுகின்றனர். அதேபோல், இந்தியாவில் 31-45 வயதுடையோர் சராசரியாக 1.8 மணி நேரத்தையும், 46-65 வயதுடையோர் 1.5 மணி நேரத்தையும் மொபைல் போனில் செலவிடுகின்றனர்.
2016 ஜே.இ.இ.: டிச.1 முதல் விண்ணப்பிக்கலாம்
2016-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ.) அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., ஐ.ஐ.டி. ஆகிய மத்திய அரசு நிதியுதவியின் கீழ் இயங்கி வரும் தொழில்நுட்பக் கல்வி நிறுவன படிப்புகளில் சேர்வதற்கு அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
7-வது ஊதிய குழு : மகப்பேறு விடுமுறை நாட்கள் தொடர்கிறது மகப்பேறு 'லீவு':
ஆண், பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை நாட்களை, அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, ஏழாவது ஊதியக் குழு நிராகரித்து உள்ளது. எனவே, வழக்கம் போல, மகப்பேறின் போது, பெண் ஊழியர்களுக்கு, 180 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது.
பழைய கட்டிடங்களின் அருகே உள்ளதால் கனமழைக்கு வகுப்பறைகள் இடியும் அபாயம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை தீவிரத்தால் பல்வேறு நகரங்கள் தண்ணீரில் மிதந்து வருகிறது. மேலும், ஏரிகள் உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருகினால் கிராமப் பகுதிகளைத் தண்ணீர் சூழ்ந்துள்ளன. இதனால், அரசுப் பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இங்கு வடிகால் வசதியில்லாதாதல், பல்வேறு இடங்களில் இன்னும் வடியாமல் தேங்கி நிற்கின்றன. மேலும், பள்ளி நிர்வாகத்தால் கைவிடப்பட்ட பழைய வகுப்பறை கட்டிடங்கள் கனமழையில் தாக்குபிடிக்காமல் விரிசல் ஏற்பட்டு சரிந்து விழும் நிலையில் உள்ளன. இதனருகே உள்ள கட்டிடங்களில் வகுப்பறைகள் செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கிராமப் பகுதிகளில் தொடக்கப் பள்ளியின் வகுப்பறை கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. சில இடங்களில் கனமழை விட்ட பிறகும் தண்ணீர் வடியாமல் உள்ளது. இதனால், பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப, பெற்றோர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
குழந்தை பராமரிப்புக்காக மனைவி இல்லாத ஆண் ஊழியர்களுக்கும் 2 ஆண்டு விடுமுறை: 7-வது சம்பள கமிஷன் சிபாரிசு
மத்திய அரசு ஊழியர்களின் சம்பள விகிதத்தை மாற்றி அமைக்க அமைக்கப்பட்ட 7-வது சம்பள கமிஷனின் அறிக்கை, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்டது.
7-வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு மத்திய அரசு ஊழியர்கள் எதிர்ப்பு: சென்னையில் 24-ந்தேதி ஆர்ப்பாட்டம்
7-வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் மத்திய அரசு ஊழியர்கள் வருகிற 24-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
Friday, November 20, 2015
மேல்நிலைத் தேர்வு;தனித்தேர்வர்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு
நடைபெறவுள்ள மார்ச் 2016 மேல்நிலைப் பொதுத்தேர்விற்கு தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வுகள் துறையால் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க 16.11.2015 முதல் 27.11.2015 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
எப்படி புதிய ஊதியம் நிர்ணயம் செய்வது!!!
7-வது ஊதியக் குழு புதிய ஊதியம் எவ்வாறு நிர்ணயம் செய்வது!!!
Basic pay + G.P X 2.57
மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அலுவலர் தேர்வு - டி.என்.பி.எஸ்.சி., செயலருக்கு 'நோட்டீஸ்'
மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அலுவலர் பணியிடங்களுக்கு, நேரடி தேர்வு மூலம் நியமனம் மேற்கொள்ள, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பிற்கு தடை கோரிய வழக்கில், டி.என்.பி.எஸ்.சி., செயலருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய வினா விடை ’சிடி’
விருதுநகர்: பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்காக பள்ளி கல்வித்துறை சார்பில் 11 பாடங்களின் முக்கிய வினா விடை அடங்கிய சிடி பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் நடைபெறுவதாக இருந்த கணித திறனறித் தேர்வு தள்ளிவைப்பு
தொடர் மழை காரணமாக பள்ளி மாணவர்களுக்கான கணிதத் திறனறித் தேர்வு வருகிற நவம்பர் 29-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
38 நிகர்நிலை பல்கலைக்கு தடை நீங்கியதுஇரண்டு லட்சம் மாணவர்கள் நிம்மதி
புதுடில்லி:'தமிழகத்தில், 10 உட்பட, தேசிய அளவில், 38 நிகர்நிலை பல்கலை கழகங்கள் தொடர்ந்து செயல்பட தடை ஏதும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட்டில், தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார குழுவான, என்.ஏ.ஏ.சி., தெரிவித்துள்ளது. இதனால், 'அங்கீகாரம் ரத்தாகுமோ' என, அஞ்சிய, இரண்டு லட்சம் மாணவர்களின் எதிர்காலம், பிரகாசமாகியுள்ளது.
7–வது சம்பள கமிஷன் சிபாரிசுகளின் முக்கிய அம்சங்கள்
*மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும். இதில், சம்பளம் 16 சதவீதமும், இதர படிகள் 63 சதவீதமும் உயர்த்தப்பட வேண்டும்.
மழை பாதிப்பு: சென்னை, புறநகரில் மாணவர்களுக்கு மீண்டும் விலையில்லா கல்வி உதவிகள் - பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு
மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு மீண்டும் விலையில்லா கல்வி உதவிகள் வழங்கப்பட உள்ளன.
Thursday, November 19, 2015
சென்னை பல்கலை மற்றும் உறுப்பு கல்லூரிகளில் திட்டமிட்டப்படி இன்று தேர்வு - துணைவேந்தர் அறிவிப்பு
சென்னை: சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் தேர்வுகள் திட்டமிட்டபடி இன்று நடைபெறும் என சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் தாண்டவன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இன்றைய தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு!!
சென்னை: தொலைதொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் டெலிகாம் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் டிசம்பர் 10-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம் என பிஎஸ்என்எல் அறிவுறுத்தியுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 147 இடங்கள் காலியாகவுள்ளன.
இன்று (19.11.15) நிகழ்வுகள்
**சர்வதேச ஆண்கள் தினம்
**உலகப் கழிப்பறை தினம்
**சர்வதேச பத்திரிகையாளர்கள் மாவீரர் தினம்
**பிரேசில் கொடிநாள்
மத்திய அரசு ஊழியர்களுக்கு 23% ஊதிய உயர்வு?
மத்திய அரசு ஊழியர்களுக்கு 23 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என 7-வது ஊதியக் குழு வியாழக்கிழமை பரிந்துரை செய்யவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதிலுமாக, மத்திய அரசு ஊழியர்கள் 48 லட்சம் பேரும், ஓய்வூதியதாரர்கள் 55 லட்சம் பேரும் உள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் திறப்பு
தொடர் மழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு வந்தன. வேலூர் மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டன. தற்போது மழையின் தாக்கம் குறைந்துள்ளதையடுத்து வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சென்னை , காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு வரும் 22-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 23-ம் தேதி வழக்கம் போல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை.,யில் 21ம் தேதி முதல் தேர்வுகள்
கனமழையால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுகள், வரும் 21ம் தேதி முதல் நடைபெறும். அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளமானwww.annauniv.eduவில் தேர்வு தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது.
இணை இயக்குனர் கூட்ட தகவல்கள்- அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கண்டிப்பாக பின் பற்ற வேண்டும்!!!
இன்று18-11-2015 வேலூரில் நடைபெற்ற இணை இயக்குனர்( Hsc.JD)மீளாய்வு கூட்ட தகவல்:தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்: ந.க.எண்.28804/ஜே2/2015. நாள்.17-11-2015 மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள். ந.க.எண்.34764/எம்/இ1/2015, நாள்.15.11.2015 தொடர் தலை காரணமாக அனைத்துவகைப்
பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, மீண்டும் இலவச பாடப்புத்தகம் மற்றும் சீருடை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டு
உள்ளது.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலுார், வேலுார், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில், வெள்ளத்தால், மாணவ, மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், நீரில் நனைந்தும் சேதமாகி விட்டன.
ரிசர்வ் வங்கி ஊழியர்கள் இன்று 'ஸ்டிரைக்'தமிழகத்தில் வங்கி பணிகள் ஸ்தம்பிக்கும்
ரிசர்வ் வங்கியின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதை கண்டித்து, தமிழகத்தில், 1,100 பேர் உட்பட, நாடு முழுவதும், 17 ஆயிரம் ஊழியர்கள், இன்று ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர். இதனால், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு, வங்கி பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும்.
PINDICS REGs: ஆசிரியர் செயல் திறன் மதிப்பீடு: படிவம் நிரப்புவதற்கு உதவியாக
PINDICS REGs:
ஆசிரியர் செயல் திறன் மதிப்பீடு:
படிவம் நிரப்புவதற்கு உதவியாக
1.1.2015 முதல் நடைபெற்ற பயிற்சிகள் விபரம். (பயிற்சிகள் & தேதிகள் வட்டாரத்தைப் பொருத்து மாறுபட வாய்ப்புண்டு)
ஆரம்பநிலை ஆசிரியர்களுக்கு
Wednesday, November 18, 2015
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக ராஜேஷ் லக்கானி நியமனம்
தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியாக ராஜேஷ் லக்கானி ஆணையராக நியமிக்கப்பட்டார். தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சந்தீப் சக்சேனா, அண்மையில் தலைமை தேர்தல் ஆணையத்தில் துணை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
ஐ.ஐ.டி., நுழைவு தேர்வுதேதி அறிவிப்பு
'உயர்கல்வி நிறுவனங்களில், மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு, விண்ணப்ப பதிவு டிச., 17ல் துவங்கும்' என, சென்னை ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது.
தொடர் மழை காரணமாக 4 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு (18/11/2015) விடுமுறை
வேலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
காஞ்சிபுரம் (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)
சென்னை (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)
திருவள்ளுர் (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)
தொழில்நுட்பத் தேர்வுகள் நாளை துவக்கம்!
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்படும் ஓவியம், இசை, தையற்கலை, அச்சுக்கலை, நடனம், விவசாயம் மற்றும் கைத்தறி நெசவு ஆகிய பாடங்களுக்கான தொழில்நுட்பத் தேர்வுகள் நாளை (18.11.2015) அன்று தொடங்கி டிசம்பர் 21 வரை நடைபெற உள்ளது என்று தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியிட்டுள்ளது.
ரயில்வே குறைந்தபட்ச கட்டணம்: ரூ. 10 ஆக உயர்வு
குறைந்தபட்ச கட்டணத்தை ஐந்து ரூபாயிலிருந்து பத்து ரூபாயக உயர்த்துவது என இந்திய ரயில்வே தீர்மானித்துள்ளது. இந்த கட்டண உயர்வு நவம்பர் 20 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
Tuesday, November 17, 2015
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம்: உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவு
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கடந்த 2001–ம் ஆண்டு மார்ச் மாதம் 15–ந்தேதி மகா சம்ப்ரோஷ்ணம் நடந்தது.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்து கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகம விதி என்பதால் தமிழக அரசு இக்கோவில் திருப்பணிகளை தொடங்க திட்டமிட்டு அதற்கான கால்கோள்விழா
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5–ந் தேதி நடந்தது.
பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடமாக்க சட்டம் அமல்படுத்த நீதிபதிகள் ஆய்வு கமிட்டி : ஐகோர்ட் முடிவு
கட்டாய தமிழ் மொழி பாடப் பிரச்னைக்கு தீர்வு காண, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க, சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
ஆபத்தான நிலையில் உள்ள வகுப்பறைகளுக்கு பூட்டு
மழையால் பாதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி வகுப்பறைகளுக்கு, பூட்டு போட, பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை:
வேலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் திருமதி.சபீதா
கனமழை - வேலூர் மாவட்ட சிறப்பு அதிகாரியாக பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் திருமதி.சபீதா அவர்கள் நியமனம்.
அடுத்த மூன்று நாட்களுக்கு மாவட்டம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொள்ள எதுவாக அவரின் பயணத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது
மழைக்கால பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை: பள்ளி கட்டிடங்கள் குறித்து ஆய்வு
மழைக்காலங்களில் ஏற்படும் சேதங்களை தடுக்க சேலம் மாநகராட்சி அதிகாரிகள் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து, கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. சேலம் மாநகர பகுதியில் தாழ்வான பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. சாக்கடை கால்வாய்கள் அடைப்பு ஏற்பட்டு, வீடுகளுக்குள்
தண்ணீர் புகுந்து வருகிறது.
அடுத்த கல்வி ஆண்டு முதல் புதிய கல்வி கொள்கை அமலுக்கு வருகிறது டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் குழு தயாரிப்பு
அடுத்த கல்வி ஆண்டு முதல் புதிய கல்வி கொள்கை அமலுக்கு வருகிறது. இந்த புதிய கொள்கையை டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் குழு தயாரித்து வருகிறது.
என்ஜினீயரிங் தேர்வுகள் இந்த வாரம் முடிய ரத்து அண்ணாபல்கலைக்கழகம் அறிவிப்பு
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம், பதிவாளர் கணேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
Monday, November 16, 2015
பிளஸ் 2 தனி தேர்வர்16 முதல் விண்ணப்பம்
சென்னை:'மார்ச்சில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள், 16 முதல், 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
துடிப்பான இந்தியா’ கருத்தாக்கத்தில் அஞ்சல் தலை வடிவமைப்பு போட்டி மகாராஷ்டிரா மற்றும் கோவா வட்ட தலைமை அஞ்சலக அதிகாரி
அலுவலகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவுப்படி, அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவில் ‘குடியரசு தினம் 2016 - அஞ்சல் தலை வடிவமைப்பு போ
ட்டி’யை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்காக பொதுமக்கள் தங்கள் வடிவமைப்பை அனுப்பி வைக்கலாம்.
ரெயில்களில் நாளைமுதல் டிக்கெட் கட்டணம் உயர்வு
தூய்மை இந்தியா திட்டத்திற்காக உயர்த்தப்பட்ட சேவை வரி நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனால், ரெயில்களில் ஏ.சி. மற்றும் முதல் வகுப்பு பயணக் கட்டணம் நாளை முதல் அதிகரிக்கிறது.
நாளை முதல் அனைத்து சேவைகளுக்கும் சேவை வரி அரை சதவீதம் உயர்வு தூய்மை இந்தியா திட்டத்திற்காக உயர்த்தப்பட்ட சேவை வரி நாளை முதல் அமலுக்கு வருகிறது.
தொலைபேசி கட்டணம், ஓட்டலில் சாப்பிடுவது மற்றும் தங்குவதற்கான கட்டணம், காப்பீடு தொகை போன்றவற்றுக்கு தற்போது 14 சதவீதம் சேவை வரி விதிக்கப்படுகிறது. கடந்த மே 31–ந்தேதி வரை 12.36 சதவீதம்தான் சேவை வரி விதிக்கப்பட்டது. மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, ஜூன் 1–ந்தேதி முதல் சேவை வரி 14 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
66.11% இந்திய குழந்தைகளுக்கு தாறுமாறாக இருக்கும் சர்க்கரை அளவு: ஆய்வில் பகீர் தகவல்
நகரமயமாதலும், துரித உணவுகளின் காரணமாகவும், இந்தியக் குழந்தைகளில் 66.11 சதவீதம் பேருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு தாறுமாறாக இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் போராட்டம்!!! (100% அகவிலைப்படியை இணைக்க வேண்டும், 2014 முதல் 7வது ஊதியக்குழுவை அமுல்படுத்த வேண்டும்)
Observance of All India protest day on 19th November 2015 – NJCA
NJCA
National Joint Council of Action
4, State Entry Road, New Delhi – 110055
No. NJCA/2015
இடைநிலை ஆசிரியர்களில் 1-6-2009 பின் நியமனம் ஆறாவது ஊதியகுழுவினால் ஊதிய இழப்பே என்பதால் பழைய ஊதியம் போதும் ,புதிய ஊதியம் வேண்டாம்.
ஆறாவது ஊதியக்குழு ஊதிய விகிதம் 01.6.2009 முதல் இடைநிலை ஆசிரியர்களாக புதியதாக நியமிக்கப்படடவர்களுக்கு, முந்தைய ஊதிய
விகிதத்தை ஒப்பிடுகையில் ஊதிய இழப்பையே ஏற்படுத்தியுள்ளது. 1.6.2009 தேதியை கொண்டு பழைய ஊதிய விகிதம் மற்றும் புதிய ஊதிய விகிதம் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் விளங்கும்.
Saturday, November 14, 2015
திங்கள் - செவ்வாயில் கன மழை பெய்யும்
,சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழைக்கு கடந்த ஒரு வாரத்தில் பலி எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. தாழ்வு நிலை மையம் கொண்டிருப்பதால் புயலாக உருவெடுக்கலாம் என்றும் இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்யும் என்றும் வரும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் சென்னை, திருவள்ளூர் , திருவண்ணாமலை மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மைய இயக்குனர் ரமணன் கூறியுள்ளார்.
ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள்: தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை பெய்யும்
தமிழகம் சென்னை: வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள இரு காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் காரணமாக சென்னை முதல் கன்னியாகுமரிவரையிலான கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில் உருவான, காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த திங்கட்கிழமை புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அப்போது தமிழகம் முழுவதும் பெரும் மழை பெய்தது. கடலூர் மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் உண்டானது. அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி நகர்ந்ததால் வேலூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், பெங்களூரிலும் பலத்த மழை பெய்தது.
10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்பாடம் கட்டாயம் -கூட்டுத்தொகையிலும் மாற்றம்
இக்கல்வி ஆண்டு முதல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பகுதி- 1ல் தமிழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால், பிறமொழிப்பாடங்களின் மதிப்பெண், கூட்டுத்தொகையில் சேர்க்கப்படாது.தமிழகத்தில் தமிழ் கற்பிக்கும் சட்டம் 2006ல் அமலுக்கு வந்தது. 2006--07 கல்வி ஆண்டில் ௧ம் வகுப்பு மாணவர்களுக்கு, தமிழ் முதல் மொழிப்பாடமாக கற்பிக்கப்பட்டது.
பிளஸ் 2 தனித் தேர்வு: நவம்பர் 16 முதல் விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 2 தனித்தேர்வுக்கு நவம்பர் 16 (திங்கள்கிழமை) முதல் 27 வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது: கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களில், தனித்தேர்வர்கள் நேரில் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும். நேரடித் தனித்தேர்வர்கள் கட்டணமாக ரூ.187, மறுமுறை தேர்வு எழுதுவோர் ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50, இதரக் கட்டணமாக ரூ.35 செலுத்த வேண்டும். அதோடு இணையதளப் பதிவுக் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
151 பள்ளி கட்டடம் இடிக்க வேலூர் கலெக்டர் உத்தரவு
வேலுார் மாவட்டத்தில், பயன்பாட்டில் இல்லாத, 151 பள்ளி கட்டடங்களை இடிக்க, கலெக்டர் நந்தகோபால் உத்தரவிட்டுள்ளார். வேலுார் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் உள்ள கட்டடங்கள் இடிந்து விழும் நிலையிலும், பாழடைந்தும் காணப்படுகின்றன.
2 மாதங்களுக்கு ஒரு முறை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் சரிபார்ப்பு
ஆசிரியர்களின் பணிப் பதிவேடுகளை 2 மாதங்களுக்கு ஒரு முறை சரிபார்த்து உறுதி செய்ய தொடக்க கல்வித் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஊராட்சி, நகராட்சி,
அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் அந்தந்த ஒன்றியத்தின் உதவி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
Friday, November 13, 2015
மின் கட்டணம் மீண்டும் உயரும் அபாயம்
தமிழ்நாடு மின் வாரியம், ஆண்டு தோறும் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம், வருவாய் தேவை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இதன் அடிப்படையில், மின் கட்டணஉயர்வு குறித்து, ஆணையம் முடிவு செய்யும். நடப்பு ஆண்டில், இதுவரை மின் வாரியம், வருவாய் தேவை அறிக்கையை தாக்கல்செய்யாததால், ஆணையம், தன் அதிகாரத்தை பயன்படுத்தி, மின் கட்டணத்தை உயர்த்த வாய்ப்புள்ளது.
தொழில்நுட்ப தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு
கலை பாடங்களுக்கான தொழில்நுட்ப தேர்வுக்கு, இணைய தளத்தில், 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.தமிழக அரசு தேர்வுகள் துறை சார்பில், கலை பாடங்களுக்கான தொழில்நுட்பதேர்வு, நவ., 18 முதல் டிச.,21ம் தேதி வரை நடக்கிறது.
பல்கலை, கல்லூரிகளுக்கு யு.ஜி.சி., கடும் எச்சரிக்கை
மாணவ, மாணவியர் இடையே பாலின பாகுபாடு மற்றும் பாலியல் பிரச்னைகளை தீர்க்க, கமிட்டி அமைக்காதகல்லுாரிகளுக்கு, மத்திய அரசின் பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., கடும் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
மழை காரணமாக 9 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூாிகள் விடுமுறை - ஆட்சியர்கள் அறிவிப்பு.
தொடர் மழை காரணமாக
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர்,
திருவண்ணாமலை, நெல்லை, (கிருஷ்ணகிரி,குமரி மாவட்ட பள்ளிகள் மட்டும்) தூத்துக்குடி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு
உள்ளிட்ட 9
மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை
பல்கலைக்கழகம் மாநில கல்லூரி புதுக் கல்லூரி
தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று நடைபெறவிருந்த மாநில கல்லூரி
தேர்வுகள் ஒத்திவைப்பு.
மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து, ரிசர்வ் வங்கி ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்
மத்திய ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளைக் குறைப்பது மற்றும் குறுக்கீடு செய்வது ஆகிய மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து 19-ம் தேதி ரிசர்வ் வங்கி ஊழியர்கள் தற்செயல் விடுப்பு (casual leave) எடுக்கும் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர்.
Thursday, November 12, 2015
POSTMAN EXAM - HALL TICKET இணையதளத்தில் வெளியீடு
தபால்காரர் (போஸ்ட்மென்), மெயில் கார்டு தேர்வுக்கான அனுமதிச் சீட்டை விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என தமிழக அஞ்சல் வட்டம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அஞ்சல் வட்டம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
TNPSC : 813 VAO பணியிடங்களுக்கு அறிவிக்கை வெளியீடு
விண்ணப்பிக்க கடைசி நாள் - 14/12/2015.
தேர்வு நடைபெறும் நாள் - 14/02/2016.
அண்ணா பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு
தொடர் மழை காரணமாக வியாழக்கிழமை நடைபெற இருந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டத்தில் கட்டணம் வசூலிக்க உத்தரவு அரசு ஊழியர் அதிர்ச்சி
மத்திய அரசின் புதிய பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தில், பல்வேறு தலைப்புகளின் கீழ், கட்டணம் வசூல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு, 1.1.2004 முதல் புதிய பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
பி.எட்., பாடத்திட்டத்தில் குளறுபடி ஆசிரியர்கள், மாணவர்கள் புகார்
பி.எட்., படிப்புக்கான புதிய பாடத்திட்டத்தில்,
குளறுபடிகள் உள்ளதாக, ஆசிரியர்கள்
குற்றஞ்சாட்டி உள்ளனர். தேசிய ஆசிரியர்
கல்வியியல் கவுன்சில் உத்தரவுப்படி,
தமிழகத்தில், பி.எட்., படிப்பு காலம்
ஓராண்டில் இருந்து, இரண்டு ஆண்டாக
மாற்றப்பட்டு உள்ளது. இதற்கான புதிய
பாடத்திட்டத்தை, தமிழக ஆசிரியர் கல்வியியல்
பல்கலை அறிவித்துள்ளது.
முன்பதிவு செய்த ரெயில் டிக்கெட் ரத்துக்கான கட்டணம் இன்று முதல் இரு மடங்காக உயர்வு அட்டவணை தயாரித்த பின்னும் முன்பதிவு செய்யும் முறை அமல்
ரெயில் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பியளிக்கும் சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் திருத்தியது. இந்த புதிய சட்டப்படி அனைத்து வகுப்புகளுக்குமான முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்யும் போது பிடித்தம் செய்யப்படும் கட்டணம் இரு மடங்காகிறது. இந்த புதிய விதிப்படி முதல் அடுக்கு ஏ.சி. அல்லது எக்சிகியூட்டிவ் வகுப்பு டிக்கெட்டை ரத்து செய்தால், பிடித்தம் செய்யப்படும் கட்டணம் ரூ.120–லிருந்து ரூ.240 ஆக உயர்கிறது. இரண்டு அடுக்கு ஏ.சி. அல்லது முதல் வகுப்புக்கு ரூ.100–லிருந்து ரூ.200 ஆக உயர்த்தப்படுகிறது.
வேடந்தாங்கல் சரணாலயம் இன்று திறப்பு
காஞ்சிபுரம் : சில தினங்களாக பெய்த கன மழையால், காஞ்சிபுரம் மாவட்டம், வேடந்தாங்கல் ஏரி வேகமாக நிரம்பியுள்ளது; அங்கு, 5,500 பறவைகள் குவிந்துள்ளன. எனவே, வேடந்தாங்கல் சரணாலயம் இன்று முதல், பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது.
Wednesday, November 11, 2015
'சஞ்சாயிகா' சேமிப்பு திட்டம் புத்துயிர் தருமா கல்வித்துறை
பள்ளி குழந்தைகள் மத்தியில் சிக்கனம், சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பல ஆண்டுகளுக்கு முன், பள்ளி கல்வித்துறை மூலம், 'சஞ்சாயிகா' என்ற சிறுசேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது.
குரூப் 4 தேர்வுக்கான முதல்கட்ட கலந்தாய்வு : சென்னையில் 16-ம் தேதி தொடக்கம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிக்கை:குரூப் 4 பதவியில் அடங்கிய (2013-14 மற்றும் 2014-15) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்ய கடந்த ஆண்டு டிசம்பர் 21ம் தேதி எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் கடந்த மே 22ம் தேதி வெளியிடப்பட்டது.
ஆசிரியர்கள் உயர்கல்வி பயில முன் அனுமதி கட்டாயம்.
தமிழகத்தில் செயல்படும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர்கள் உயர்கல்வியை தொடர, முன் அனுமதி பெறுவது கட்டாயம் என, தகவல்
அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
கோவை ;பாரதியார் பல்கலையில் ஐ.ஏ.எஸ்., முதல்நிலை தேர்வுக்கான இலவச பயிற்சியில் பங்கேற்பதற்கான நுழைவுத்தேர்வுக்கு, வரும் டிச., ௧௦ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அடுத்தாண்டு ஆகஸ்டில் ஐ.ஏ.எஸ்., முதல் நிலை தேர்வு நடக்கிறது.
Monday, November 9, 2015
7ம் வகுப்பு முதல் மாணவியருக்கு 'சுடிதார் '
அடுத்த கல்வியாண்டில் இருந்து, ஏழாம் வகுப்பு முதல், மாணவியருக்கு, 'சுடிதார்' வழங்க, துவக்க கல்வித்துறை, அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இன்று (9-11-15)
🌹இன்று (9-11-15)🌹
🌻சர்வதேச கின்னஸ் உலக சாதனைகள் தினம்🌻
(International Guinness World Records Day)
கின்னஸ் பிரிவெரி என்பவர் உலக சாதனைகளைத் தொகுத்து 1954ஆம் ஆண்டில் முதன்முதலாக கின்னஸ் புத்தகத்தை வெளியிட்டார். உலக சாதனை புரிபவர்கள் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தனர். முதன்முதலாக கின்னஸ் தினம் 2005ஆம் ஆண்டு நவம்பர் 9 இல் கொண்டாடப்பட்டது. கின்னஸ் சாதனைகளைத் தொகுத்து இத்தினத்தின்போது புத்தகமாக வெளியிடப்படுகிறது.
Flash News: பள்ளி விடுமுறை - 11 மாவட்டங்கள்
*வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*திருவண்ணாமலை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*அரியலூரில் பள்ளி விடுமுறை
*திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைநாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*விழுப்புரம் பள்ளிகளுக்கு விடுமுறை
*கடலூர் பள்ளிகளுக்கு விடுமுறை
*திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
*காஞ்சிபுரத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
*புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*தஞ்சை பள்ளி விடுமுறை
Saturday, November 7, 2015
கல்விக்கடன்களுக்கு ஆதார் எண் பயன்படுத்துவது குறித்து ஆலோசனை: ரகுராம் ராஜன்
கல்விக்கடன் வழங்குவதற்கு ஆதார் எண்ணை பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். தில்லியில் நடைபெற்று வரும் பொருளாதார மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், ஆன்லைன் வர்த்தகம் உலக சந்தையை உள்ளூர் சந்தையுடன் இணைப்பதாகக் கூறியுள்ளார்.
அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் உயர்வு:அமைச்சர் கே.சி. வீரமணி
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரம் உயர்ந்துள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்தார்.ஆம்பூர் இந்து மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடந்த விழாவில் 293 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கிஅவர் மேலும் பேசியதாவது:
உலக மக்கள் தொகையில் ஒன்பது பேரில் ஒருவருக்கு தூய்மையான குடிநீர் கிடைப்பதில்லை: தேசிய கருத்தரங்கில் தகவல்
உலகில் உள்ள மக்களில் ஒன்பது பேரில் ஒருவருக்கு சுத்தமான, பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை என்று தேசிய கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
நவம்பர் – 7 .நிகழ்வுகள் மேரி கியூரி பிறந்த தினம்
(Marie Gurie Birth Day)
மேரி கியூரி 1867ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று போலந்து நாட்டில் பிறந்தார். இவர் ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்தார். இவர் இயற்பியலுக்கான நோபல் பரிசினை 1903ஆம் ஆண்டிலும், வேதியியலுக்கான நோபல் பரிசினை 1911ஆம் ஆண்டிலும் பெற்றார்
ரயில் டிக்கெட் ரத்து கட்டணம் இரண்டு மடங்காக உயர்வு
ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கட்டணம், 12ம் தேதி முதல், இரு மடங்காக உயருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றபின், ரயில்வே துறையில், வருவாயை பெருக்கும் முயற்சியில், ரயில்வே அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. இதற்காக, முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டுகளை, ரத்து செய்வதற்கான காலக்கெடு மற்றும் கட்டணத்தை மாற்றி அமைக்க, ரயில்வே அமைச்சர், சுரேஷ் பிரபு முடிவு செய்தார்.
பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி?- மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுரை
தீபாவளி பண்டிகையின்போது பட் டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது தொடர்பாக மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண் ணப்பன் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
Friday, November 6, 2015
07/11/2015 - PRIMARY CRC MODULES (DOWNLOADABLE LINKS AVAILABLE NOW)
CLICK HERE - INTRO & GENERAL POINTS (272 KB)
CLICK HERE - PHYSICS (190 KB)
CLICK HERE - CHEMISTRY (4.9 MB)
CLICK HERE - BOTANY (2.2 MB)
CLICK HERE - ZOOLOGY 1 (138 KB)
CLICK HERE - ZOOLOGY 2 (661 KB)
CLICK HERE - ZOOLOGY 3 (293 KB)
CLICK HERE - ZOOLOGY 4 (313 KB)
CLICK HERE - ZOOLOGY 5 (285KB)
CLICK HERE - ZOOLOGY 6 (275 KB)
CLICK HERE - ZOOLOGY 7 (185KB)
CLICK HERE - ZOOLOGY 8. (703 KB)
CLICK HERE - ZOOLOGY 9 (254 KB)
CLICK HERE - ZOOLOGY 10 (522 KB)
சிமேட் 2016 நுழைவுத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு
ஏஐசிடிஇ.,யால் நடத்தப்படும் சிமேட் 2016 நுழைவுத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு இயற்கை பாடம்! வனத்தை பாதுகாக்க புது முயற்சி
தண்ணீர் சிக்கனம், வனம் மற்றும் வனஉயிரினங்கள் பாதுகாப்பு குறித்து, மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆசிரியர்கள் வாயிலாக மாணவர்களுக்கு கற்பிக்கவும், 'இயற்கை பாடம்' நடத்தப்படவுள்ளது.
தேசிய திறனாய்வு தேர்வு எழுதுவோர் அதிகரிப்பு
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய அரசு மூலம், ஆராய்ச்சி படிப்பு வரை உதவித் தொகை வழங்க, தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.
பொறியியல் மாணவியர்க்கு உதவித்தொகை அறிவிப்பு
நடப்பு கல்வியாண்டில், பி.இ., பி.டெக்., மற்றும் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவியர், 4,000 பேருக்கு, மத்திய அரசின், பிரகதி திட்டத்தில், உதவித் தொகை வழங்கப்படுகிறது.
புதிய கல்விக் கொள்கையை அனைவரும் எதிர்க்க வேண்டும்: பேராசிரியர் ராமானுஜம்
மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய கல்விக் கொள்கையை அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்று, கணித அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியரும், கல்வியாளருமான ஆர்.ராமானுஜம் வலியுறுத்தினார்.
செல்லிடப்பேசி மூலம் சீசன் பயணச் சீட்டு; நடைமேடை அனுமதிச் சீட்டு: தெற்கு ரயில்வே அறிமுகம்
சென்னை புறநகர் மின்சார ரயில்களுக்கான சீசன் பயணச் சீட்டு, நடைமேடை அனுமதிச் சீட்டு ஆகியவற்றை செல்லிடப் பேசி மூலம் பெறும் வசதியை தெற்கு ரயில்வே வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பயணம் செய்ய செல்லிடப்பேசியில் (ஸ்மார்ட் போன்) பயணச் சீட்டு பெறும் வசதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
சிறப்பு சலுகையில் பொதுத்தேர்வு: விரைந்து விண்ணப்பிக்க அறிவுரை
மாற்றுத்திறனாளி, நோயால் உடல்நலம் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள்சிறப்பு சலுகையில் 10ம்வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத மருத்துவ சான்றிழுடன் விரைந்துவிண்ணப்பிக்க வேண்டும் என, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.
குறைபாடு சரிசெய்யப்பட்டுள்ளதா?- 750 தனியார் பள்ளிகளை ஆய்வு செய்ய உத்தரவு: குறைகள் பூர்த்தியானால் அங்கீகாரம்
தமிழகத்தில் உரிய விதிகளைப் பின்பற்றாத 750 தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறைபாடுகளை அவர்கள் சரிசெய்துவிட் டார்களா என்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஆய்வாளர் களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்ப் பல்கலை.யில் விரைவில் நூல்கள் கொடை இயக்கம்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பொதுமக்கள் தாமாக முன்வந்து அளிக்கும் நூல்கள் கொடை இயக்கம் விரைவில் தொடங்கப்படவுள்ளது என்றார் துணைவேந்தர் க. பாஸ்கரன்.
Thursday, November 5, 2015
வேலைவாய்ப்பு பதிவு மூப்பு: கட்-ஆஃப் தேதி விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படும் பணியிடங்களுக்கான கட்-ஆஃப் தேதி விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தங்க டெபாசிட் திட்டத்தை இன்று அறிமுகப்படுத்துகிறார் பிரதமர் மோடி
அசோகச் சக்கரம் பொறிக்கப்பட்ட தங்க நாணயத்தை பிரதமர் மோடி இன்று அறிமுகப்படுத்த உள்ளார்.
புதிய பென்ஷன் சேமிப்பு: ரூ.ஒரு லட்சம் கோடி: தமிழகம் 'மிஸ்சிங்'
மத்திய ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் நிர்வகிக்கும் புதிய பென்ஷன் திட்டத்தின் சேமிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதில் தமிழக அரசு ஊழியர்களிடம் பிடித்த தொகை மட்டும் செலுத்தப்படவில்லை.அரசு ஊழியர்கள், பொது நிறுவன
தொழிலாளர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. தொடர்ந்து மேற்குவங்காளம், திரிபுரா மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநில அரசுகளும் செயல்படுத்தின. தமிழகத்தில் 2003 ஏப்., 1 க்கு பின் பணியில் சேர்ந்த ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.
பி.எட்., படிப்பில் புதிய மாற்றம் தொடர் மதிப்பீட்டு முறை அறிமுகம்
பி.எட்., படிப்பில், புதிய பாடத்திட்டம் அமலாகியுள்ள நிலையில், சி.சி.இ., எனப்படும், தொடர் மற்றும் விரிவான மதிப்பீட்டு முறையும், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவுப்படி, நாடு முழுவதும் பி.எட்., படிப்பு இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல், புதிய பாடத்திட்டம் மற்றும்
தேர்வு முறை அறிமுகமாகிஉள்ளது.
15 ஆயிரம் ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்க அரசாணை வெளியீடு
தமிழகம் முழுவதும் சுமார் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான தொடர் நீட்டிப்பு ஆணை புதன்கிழமை வெளியிடப்பட்டது. அரசு ஆணை எண் 110, 120, 175, 193, 212 ஆகியவற்றின்
கீழ் 20 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் ஊதியம் பெறுகின்றனர். ஆனால், இந்த ஆசிரியர்களுக்கான ஊதிய தொடர் நீட்டிப்பு ஆணை இதுவரை வழங்கப்படவில்லை என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் புகார் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான தொடர் நீட்டிப்பு ஆணை புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கனமழை காரணமாக, அரியலுார் மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (05-11-15) விடுமுறை
அரியலுார் : கனமழை காரணமாக, அரியலுார் மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (05-11-15) விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
தனியார் பள்ளிகளில், 2016 - 17ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை 'ஓவர்?'
வரும், 2016 - 17ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை, பொது உத்தரவு துறை வெளியிடுவதற்கு முன்பே, பல தனியார் கல்வி நிறுவனங்கள் முடித்து விட்டதாக அறிவித்துள்ளன. இது, பெரும்பாலான பெற்றோருக்கு
அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நவ. 8-இல் தேசிய திறனாய்வுத் தேர்வு 1.50 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்!
தமிழகம் முழுவதும் 387 தேர்வு மையங்களில் நடைபெறும் தேசிய திறனாய்வுத் தேர்வை (என்.டி.எஸ்.இ.) 1.50 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இந்தத் தேர்வு வருகிற ஞாயிற்றுக்கிழமை(நவ.8)
நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்விக்கான உதவித் தொகை வழங்குவதற்காக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
Wednesday, November 4, 2015
தமிழ்நாடு அரசில் 859 கால்நடை பாரமரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறையில் நிரப்பப்பட உள்ள 859 கால்நடை பாரமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு நிரப்ப தகுதியுள்ளோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்:859
பணி:கால்நடை பராமரிப்பு உதவியாளர்
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் 86.66 லட்சம் பேர்
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 86 லட்சத்து 66 ஆயிரத்து 755 ஆக உள்ளது. இதில், 44 லட்சத்து 16 ஆயிரத்து 497 பேர் பெண்களாவர்.
தீபாவளிக்கு முதல் நாள் நவ., 9ம் தேதி, பள்ளிகளுக்கு விடுமுறை உண்டா?
தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான, நவ., 9ம் தேதி, பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்' என, மாணவர், பெற்றோர் மற்றும் ஆசிரியர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.வரும், 10ம் தேதியான செவ்வாய் கிழமை அன்று, தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஆதிதிராவிட மாணவர் கல்விக் கட்டண அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு:
ஆதிதிராவிட நலத்துறைக்கு நோட்டீஸ்
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் கல்விக் கட்டணம் தொடர்பான அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்க ஆதிதிராவிட நலத்துறைச் செயலருக்கு நோட் டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மேலாண்மை அறங் காவலர் சக்திவேல், உயர் நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:கல்லூரியில் படிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்களிடம் இருந்து நேரடியாக கல்விக் கட்டணம் வசூல் செய்யக்கூடாது.
அவர் களுக்குரிய கல்விக் கட்டணம் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் கல்லூரிக்கு நேரடியாக வழங்கப் படும் என 11.9.2012-ல் கல்லூரிக் கல்வி இயக்குநர் அரசாணை பிறப்பித்தார்.அந்த அரசாணையில் இளங் கலை வரலாறு படிப்புக்கு ரூ.1,350, இளங்கலை அறிவியல் படிப்புக்கு ரூ.2,350, முதுநிலை படிப்பு களுக்கு ரூ.4,750 என கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கட்டணம் பற்றி கல்லூரி நிர் வாகத்துடன் ஆலோசிக்காமல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை அமலுக்கு வந்ததில் இருந்து எஸ்சி, எஸ்டி மாணவர் களிடம் கல்விக் கட்டணம் வசூல் செய்யவில்லை ஆனால், அந்த மாணவர்களுக்குரிய கல்விக் கட்டணத்தை அரசு முறையாக கல்லூரிக்குச் செலுத்தவில்லை.
அரசுப் பள்ளிகளை பாதுகாக்க விழிப்புணர்வு இயக்கம் அரசுப் பள்ளிகளை பாதுகாக்க விழிப்புணர்வு இயக்கம் நடத்துவதென தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தீர்மானித்துள்ளது.
அரசுப் பள்ளிகளை பாதுகாக்க விழிப்புணர்வு இயக்கம்
அரசுப் பள்ளிகளை பாதுகாக்க விழிப்புணர்வு இயக்கம் நடத்துவதென தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தீர்மானித்துள்ளது.புதுக்கோட்டையில் மாநிலத் தலைவர் எஸ். மோகனா தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தின் மாநிலச் செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க தமிழக அரசு ஆணை
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த 5 மாதங்களாக ஊதியமின்றி பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறையைப் போக்கும் வகையில்,
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் 10 மாதங்களுக்கு மட்டும் கௌரவ விரிவுரையாளர்கள் பணியில் அமர்த்தப்படுவர்.
10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் உளவியல் ரீதியாக தயாராக வேண்டும்
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை, உளவியல் ரீதியாக தயார்படுத்த வேண்டும்' என, அனைத்து பள்ளிகளையும், தேர்வுத்துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.தமிழகத்தில், சமச்சீர் கல்வி
பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும், அரசு, மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்களுக்கு, அடுத்த ஆண்டு மார்ச்சில் பொதுத்தேர்வு நடக்கும்.
Tuesday, November 3, 2015
பொதுத்தேர்வு வினாத்தாளில்புதிய மாற்றங்கள் அறிமுகம்
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளில், புரிந்து விடை எழுதுதல், சிந்தனைத் திறன் மற்றும் படித்ததை பயன்படுத்துதல் என, மூன்று வகையான கேள்விகள் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பு பணி துவங்கியுள்ளது; ஆசிரியர்கள் மற்றும் நிபுணர்கள் மூலம், 100க்கும் மேற்பட்ட வினாத்தாள்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
கருவூலத்துறை ஊழியர்கள் ஒரு நாள் சம்பளம் பிடித்தம்
தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்திய, கருவூல கணக்குத்துறை ஊழியர்கள், 3,000 பேரின், ஒருநாள் சம்பளத்தை, தமிழக அரசு பிடித்தம் செய்துள்ளது.
டெங்கு பயம் இனி வேண்டாம்; இருக்கிறது 8 வழிமுறைகள்
மழைக்காலம் வந்துவிட்டாலே டெங்கு காய்ச்சல் பீதியும் அதிகரித்துவிடுகிறது. டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு இன்னமும் தமிழகத்தில் குறைவாகவே இருக்கிறது. டெங்கு காய்ச்சலை தடுக்க கீழ்க்கண்ட எட்டு வழிகளை பின்பற்றினால் 'டெங்கு' அபாயத்தில் இருந்து தற்காத்து கொள்ள முடியும்.
கல்வி தரத்தை உயர்த்த பிரணாப் முகர்ஜி தலைமையில் கூட்டம்
கல்வி தரத்தை மேம்படுத்தும் வழிமுறைகளை கண்டறியவும், உலகின் முன்னணி கல்வி நிறுவனங்கள் இந்தியக் கல்வி நிறுவனங்களை கொண்டு வருவதற்காகவும், 3 நாள் கூட்டத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஏற்பாடு செய்துள்ளார். இம்மாநாட்டில் நாடு முழுவதிலுமுள்ள பல்வேறு பல்கலையின் துணைவேந்தர்கள், தலைவர்கள், இயக்குனர்கள் கலந்து கொள்கிறார்கள். நாடு முழுவதிலுமுள்ள கல்வி நிறுவன தலைவர்களை ஒருங்கிணைத்து, ஜனாதிபதி கூட்டம் நடத்துவது இதுவே முதல்முறையாகும்.
இன்று நாம் பெறுகின்ற ஓய்வூதியம் - ஓர் பார்வை இன்று நாம் பெறுகின்ற ஓய்வூதியம்
ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட ஒன்றாகும். அவர்கள் காலத்தில் வருவாய், காவல் மற்றும் பொதுப்பணித் துறையில் பணியாற்றிவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது
Monday, November 2, 2015
பிஎச்.டி., படிக்க தகுதித்தேர்வு
மத்திய கல்வி நிறுவனங்களில், இயற்பியல்
மற்றும் கணினி அறிவியலில், பிஎச்.டி., படிப்பில்
சேர்வதற்கான, 'ஜெஸ்ட்' தேசியத் தகுதித்
தேர்வை, மத்திய அரசு அறிவித்துள்ளது.
சென்னையிலுள்ள, இந்திய கணித
அறிவியல் கல்வி நிறுவனம் உட்பட,
நாட்டிலுள்ள, 20 உயர் கல்வி அறிவியல்
ஆராய்ச்சிக் கல்வி நிறுவனங்களில்
இயற்பியல், கணிதம், நியூரோ சயின்ஸ்
பிரிவுகளில், பிஎச்.டி., படிக்க, நுழைவுத் தேர்வில்
தேர்ச்சி பெற வேண்டும்.
'ஜாய்ன்ட் என்ட்ரன்ஸ் ஸ்கிரீனிங்
டெஸ்ட்' என்ற இந்த ஜெஸ்ட் தேர்வு,
இந்த முறை, பஞ்சாப் இந்திய அறிவியல் கல்வி
மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால்
நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு, பிப்ரவரி 21ல்,
நாடு முழுவதும், பல தேர்வு மையங்களில் தேர்வு
நடக்கிறது.
வரும், 5 முதல், டிசம்பர் 10ம் தேதி வரை, https://
www.jest.org.in என்ற இணையதளத்தில்
விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசு ஆசிரியர் பணி வேண்டாம்: பட்டதாரிகள் ஓட்டம்
கே.வி., எனப்படும், 'கேந்திரிய வித்யாலயா' மத்திய அரசுப் பள்ளிகளில் பணியாற்ற, தமிழக பட்டதாரிகள் ஆர்வம்
காட்டாததால், இதற்கான தகுதித் தேர்வில்
பங்கேற்போர் எண்ணிக்கை சொற்பமாகவே உள்ளது. மத்திய அரசின், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, அரசு மற்றும் தனியார் பள்ளி
ஆசிரியர் பணியில் சேர, ஆசிரியர்
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தொடர் மழைக்கு நோய் பரவும் அச்சம்:மாணவர்களை காக்க பள்ளிகளில் சுகாதாரம் தேவை
பருவ
மழையால் பள்ளி சிறுவர்களுக்கு எளிதில் "தொற்று நோய்' பரவும் அச்சம் நிலவுகிறது. இதை
தவிர்க்க பள்ளி வளாகத்தில் குப்பை தேங்காத வண்ணம், கல்வித்துறையினர் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நோய் அச்சம்:தற்போது பெய்து வரும்
பருவ மழைக்கு, வீடுகளை சுற்றியுள்ள ஆட்டுக்கல், தொட்டி, சிறட்டை, டயர் உள்ளிட்ட பொருட் களில் மழை
நீர் தேங்காத வண்ணம் கண்காணிக்க வேண்டும் என உள்ளாட்சி நிர்வாகம் வலியுறுத்தி
வருகிறது. வீடு தோறும் செல்லும் மஸ்தூர் ஊழியர்கள், வீட்டு "பிரிட்ஜிற்கு' பின்புறத்தில்
உள்ள பிளாஸ்டிக் டப்பாவில் கூட, தண்ணீர்
தேங்க கூடாது என வலியுறுத்துகின்றனர்.
Subscribe to:
Posts (Atom)