அடுத்த கல்வியாண்டில் இருந்து, ஏழாம் வகுப்பு முதல், மாணவியருக்கு, 'சுடிதார்' வழங்க, துவக்க கல்வித்துறை, அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, 'சைக்கிள் பாக்யா, ஷிர பாக்யா, ஷூ பாக்யா' கொடுக்கப்பட்டது. இதையடுத்து, தற்போது, ஏழாம் வகுப்பு முதல், மாணவியருக்கு, 'ஸ்கர்ட் - சர்ட்'க்கு பதிலாக, 'சுடிதார்' கொடுக்க வேண்டும் என, துவக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கல்வித்துறை, அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
முதல்வருடன், துவக்க கல்வித்துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் பேச உள்ளார்.அரசு ஒப்புதல் அளித்தால், அடுத்த கல்வியாண்டு முதல் இத்திட்டம் அமலுக்கு வரும். இதன் மூலம், ஏழாம் முதல், 10 வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கு, 'சுடிதார்' வழங்கப்படும். இதற்காக, அரசுக்கு, 85 கோடி ரூபாய் செலவாகும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment