Pages

Thursday, November 19, 2015

சென்னை பல்கலை மற்றும் உறுப்பு கல்லூரிகளில் திட்டமிட்டப்படி இன்று தேர்வு - துணைவேந்தர் அறிவிப்பு




சென்னை: சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் தேர்வுகள் திட்டமிட்டபடி இன்று நடைபெறும் என சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் தாண்டவன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இன்றைய தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ததை அடுத்து, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மழையின் தாக்கம் படிப்படியாக குறைந்துள்ள நிலையில் ஏற்கனவே பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்கள் தொடர்வதால் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு வரும் 22ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment