சென்னை:'மார்ச்சில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள், 16 முதல், 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
ஏற்கனவே தேர்வு எழுதி, சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களும், 10ம் வகுப்பு முடித்து, இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், நேரடியாக பிளஸ் 2 தேர்வு எழுதுவோரும் விண்ணப்பிக்கலாம். இதற்காக, கல்வி மாவட்ட வாரியாக, சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவையான விவரங்களை அங்கே பெறலாம். சேவை மைய முகவரி, http:/www.tndge.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என, தேர்வுத் துறை தெரிவித்து உள்ளது.
No comments:
Post a Comment