Pages

Saturday, November 28, 2015

TNPSC : குரூப்- 3 பணி தேர்வு பட்டியல் வெளியீடு:

 டிச.14-ல்சான்றிதழ் சரிபார்ப்பு
கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர், நிலைய தீயணைப்பு அலுவலர்(நேர்காணல் உடைய பணிகள்), தொழிற்கூட்டுறவு சங்கங்களின் உதவி மேற்பார்வையாளர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை பண்டக காப்பாளர் (நேர்காணல் இல்லாத பணிகள்) ஆகிய பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த சார்நிலைப்பணிகளுக்கான எழுத் துத்தேர்வு (குரூப்-3 தேர்வு) கடந்த 4.8.2012 அன்று நடத்தப்பட்டது.


அதைத்தொடர்ந்து, 9.1.2013 அன்று நேர்காணல் நடத்தப்பட்டு, மதிப்பெண் விவரம் 29.1.2013 அன்று வெளியிடப்பட்டது.இந்த நிலையில், குறிப்பிட்ட பணிகளுக்கு தற்காலிகமாக தேர்வுசெய்யப்பட்ட தேர்வர்களின் பட்டியலை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) நேற்று வெளியிட்டது. அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு டிசம்பர் 14-ந் தேதி நடைபெறும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர்களுக்குதனித்தனியே தகவல் தெரிவிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment