வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 86 லட்சத்து 66 ஆயிரத்து 755 ஆக உள்ளது. இதில், 44 லட்சத்து 16 ஆயிரத்து 497 பேர் பெண்களாவர்.
கடந்த ஜூன் மாத நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் விவரங்களை வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையானது தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, 86 லட்சத்து 66 ஆயிரத்து 755 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 44 லட்சத்து 16 ஆயிரத்து 497 பேர் பெண்கள்.
இன வாரியாக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 18 லட்சத்து 81 ஆயிரத்து 433 பேரும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 22 லட்சத்து 26 ஆயிரத்து 826 பேரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தோர் 36 லட்சத்து 65 ஆயிரத்து 77 பேரும் அடங்குவர்.
No comments:
Post a Comment