Pages

Tuesday, November 17, 2015

என்ஜினீயரிங் தேர்வுகள் இந்த வாரம் முடிய ரத்து அண்ணாபல்கலைக்கழகம் அறிவிப்பு


அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம், பதிவாளர் கணேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–


கனமழையின் காரணமாக அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் நடைபெறும் தேர்வுகள் 18–ந்தேதி வரை ரத்து செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது 19–ந்தேதி முதல் 21–ந்தேதி வரை (இந்த வாரம் முடிய) அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. ரத்தான தேர்வுகள் மீண்டும் எந்த தேதியில் நடைபெறும் என்ற தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.தாண்டவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்றும்(செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) நடைபெற இருந்த அனைத்து பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன என்றும் அந்த தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment