Pages

Friday, November 6, 2015

குறைபாடு சரிசெய்யப்பட்டுள்ளதா?- 750 தனியார் பள்ளிகளை ஆய்வு செய்ய உத்தரவு: குறைகள் பூர்த்தியானால் அங்கீகாரம்


தமிழகத்தில் உரிய விதிகளைப் பின்பற்றாத 750 தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறைபாடுகளை அவர்கள் சரிசெய்துவிட் டார்களா என்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஆய்வாளர் களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் சுமார் 10 ஆயிரம் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 4 ஆயிரம் பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டிலும், எஞ்சிய நர்சரி, பிரைமரி பள்ளிகள் தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின் கட்டுப் பாட்டிலும் உள்ளன.

தனியார் பள்ளிகள் 3 ஆண்டு களுக்கு ஒருமுறை அங்கீகாரத் தைப் புதுப்பிக்க வேண்டும். கட்டிட வசதி, நில அளவு வரையறை உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் பின்பற்றப்படாததால் தமிழகம் முழுவதும் சுமார் 750 மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. குறைபாடுகளை சரிசெய்யு மாறு அந்த பள்ளிகள் அறிவுறுத் தப்பட்டுள்ளன.

சுட்டிக்காட்டப்பட்ட குறை களை பள்ளி நிர்வாகங்கள் சரிசெய்துள்ளனவா என்று ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர்களுக்கு (ஐஎம்எஸ்) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை கூறியதாவது:

மெட்ரிக் பள்ளி இயக்குநரகத் தின் கீழ் 4,406 தனியார் பள்ளிகள் உள்ளன. பள்ளிகளுக்கான அங்கீகாரம் புதுப்பிக்கப்படும் முன்பு, அந்த பள்ளிகளில் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பது வழக்கம். அதன்பேரில் அங்கீ காரம் புதுப்பிக்கப்படும்.

அந்த வகையில், அங்கீ காரத்தைப் புதுப்பிக்காத சுமார் 750 பள்ளிகள் விதிமுறைகளை சரியாக பின்பற்றியிருக்கின்ற னவா என்று ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களை அறி வுறுத்தியுள்ளோம். விதிமுறை களை பூர்த்தி செய்த பள்ளி களுக்கு உடனுக்குடன் அங்கீ காரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பிச்சை கூறினார்.

No comments:

Post a Comment