கலை பாடங்களுக்கான தொழில்நுட்ப தேர்வுக்கு, இணைய தளத்தில், 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.தமிழக அரசு தேர்வுகள் துறை சார்பில், கலை பாடங்களுக்கான தொழில்நுட்பதேர்வு, நவ., 18 முதல் டிச.,21ம் தேதி வரை நடக்கிறது.
ஓவியம், கலை, அச்சு கலை, தோட்டக்கலை, வடிவமைப்பு, தையல், எம்ப்ராய்டரி, இசை, நடனம் உட்பட,பல கலை பாடங்களுக்கு, தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன.இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட், அரசு தேர்வுத்துறையால், http://www.tndge.in என்ற இணைய தளத்தில், நேற்று வெளியிடப்பட்டது. தேர்வர்கள் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்ததேதியை பதிவு செய்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment