சட்டசபை தேர்தலில் ஓட்டுச்சாவடி அலுவலர் பணிக்கு அரசு ஊழியர், ஆசிரியர்கள் பட்டியல் தயாரிப்பு பணி நடந்து வருகிறது.தமிழகத்தில் 2016 சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளது. சில அரசியல் கட்சிகள்தேர்தல் வாக்குறுதி அளிக்க, தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.தேர்தல் கமிஷனும் ஓட்டு இயந்திரம் சரிபார்ப்பு, வாக்காளர் பட்டியல், அடையாள அட்டை வழங்கல் போன்ற பணிகளில் தீவிரம் காட்டிவருகிறது.
ஓட்டுப்பதிவு,ஓட்டு எண்ணும் பணிக்காக மத்திய, மாநில அரசு ஊழியர், ஆசிரியர்களை நியமிக்கும் பொருட்டு அலுவலர் பட்டியலை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், “சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடிகளுக்கு ஓட்டுச்சாவடி அலுவலர் நிலை 1 முதல் 3 வரையிலான அலுவலரை நியமிக்க மத்திய, மாநில அரசு ஊழியர், ஆசிரியர்களின் பெயர், சம்பள பட்டியல், குடியிருக்கும் தொகுதி, ஓட்டளிக்க உள்ள ஓட்டுச்சாவடி, தேர்தலில் பணியாற்றிய அனுபவம் போன்ற விபரங்களுடன் கூடிய பட்டியல் தயாரிக்கிறோம். தேர்தல் கமிஷன் பார்வைக்கு அனுப்பி ஓட்டுச்சாவடி வாரியாக அலுவலர்கள் நியமிக்கப்படுவர்,” என்றார்.
No comments:
Post a Comment