கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தியாவில் உயர் கல்வியில் தரமானதாக திகழ்வது ஐ.ஐ.டி.க்கள்.
இவற்றுக்கு வெளிநாட்டு மாணவர்களும் சில படிப்புகளுக்காக வந்து செல்வது வழக்கம். 2013ல் இந்தியாவுக்கு 8 நாடுகளில் இருந்து அதிகமான மாணவர்கள் வந்தனர்.
அந்த நாடுகள்: அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், தென் கொரியா, ஆஸ்திரேலியா, சீனா, சிங்கப்பூர். இந்த நாடுகளில் இருந்து 2013ல் 13,961 மாணவர்கள் இந்தியாவுக்கு வந்தனர். இந்த எண்ணிக்கை 2014ல் 3,737 ஆக சரிந்தது.
இதற்கான காரணம் குறித்து கல்வியாளர்கள் கூறுகையில், வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு சரியான காரணத்தை கூற முடியவில்லை. ஆனால் நமது உயர்கல்வி தரத்தை மேம்படுத்துவது அவசியம் என்பது தெளிவாகிறது.
இந்த 8 நாடுகளையும் சேர்த்து இந்தியாவுக்கு 160 நாடுகளில் இருந்து மாணவர்கள் வருகின்றனர். இந்தியாவை விட, கல்வித் தரத்தில் உயர்தரமான நாடுகளில் இருந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தால் பரவாயில்லை. நம்மை விட கல்வி தரம் குறைந்த ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஆப்ரிக்க நாடுகளில் இருந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது தான் ஆச்சரியம் என்றனர்.
இதற்கான காரணங்கள் குறித்து மத்திய கல்வி துறை ஆராய்ந்து வருகிறது.
No comments:
Post a Comment