Pages

Friday, November 20, 2015

மேல்நிலைத் தேர்வு;தனித்தேர்வர்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு


நடைபெறவுள்ள மார்ச் 2016 மேல்நிலைப் பொதுத்தேர்விற்கு தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வுகள் துறையால் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க 16.11.2015 முதல் 27.11.2015 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


தற்பொழுது தமிழகத்தில் தொடர் மழையின் காரணமாக சில மாவட்டங்களில்  பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும், தனித்தேர்வர்கள் நலன் கருதி அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது.

தனித்தேர்வர்கள் நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment