**சர்வதேச ஆண்கள் தினம்
**உலகப் கழிப்பறை தினம்
**சர்வதேச பத்திரிகையாளர்கள் மாவீரர் தினம்
**பிரேசில் கொடிநாள்
**இந்திய சுதந்திரத்திற்காக போராடிய ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்(1835)
**இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த தினம்(1917)
**வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1816)
நவம்பர் – 19
உலகப் கழிப்பறை தினம்
(World Toilet Day)
உலக நாடுகளில் 2.5 பில்லியன் மக்கள் சுகாதாரத்தைப் பேணுவதில்லை. 1.1 மில்லியன் மக்கள் திறந்தவெளிக் கழிப்பறைகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் ஆண்டுதோறும் 2 லட்சம் குழந்தைகள் நோயால் பாதிக்கின்றனர். இவர்களைப் பாதுகாக்க, உலக சுகாதாரத்தைப் பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 19 ஐ உலகக் கழிப்பறை தினமாக 2013ஆம் ஆண்டில் அறிவித்தது.
சர்வதேச பத்திரிகையாளர்கள் மாவீரர் தினம்
(International Journalist’s Remembrance Day)
பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடாக பாகிஸ்தான் உள்ளது. ஒவ்வொரு 30 நாட்களுக்கு ஒரு பத்திரிகையாளர் குண்டு வெடிப்பு அல்லது கடத்தப்பட்டு கொல்லப்படுகிறார். 2012ஆம் ஆண்டில் 86 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தங்கள் கடமையை நிறைவேற்றும் வேலையில் தங்கள் வாழ்க்கையை இழந்த பத்திரிகையாளர்களுக்காக இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
சர்வதேச ஆண்கள் தினம்
(International Men’s Day)
சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடுவது என்பது பெண்களுக்கு எதிரானது அல்ல. இத்தினம் ஆண், பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில்தான் உள்ளது. இது ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் விளங்குகிறது. உலகில் ஆண்களைக் கௌரவப்படுத்தவும், சமூகத்திற்கு புரிந்த மகத்தான தியாகங்களை நினைவு கூரவும், அவர்களின் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதியும் இது கொண்டாடப்படுகிறது.
No comments:
Post a Comment